வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்

SOCIAL SHARE
Pin It

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்
 
பெறுவதற்கான தகுதிகள்
 
கல்வித் தகுதி சான்று மதிப்பெண் பட்டியல் (இருப்பின்)
சாதிச்சான்று
குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை அல்லது இருப்பிடச்சான்று ஆகிய சான்றுகளின் அசல்

மற்றும் நகல்படிப்பறிவு இல்லாதவா்கள் பதிவு செய்வதற்கு 14 வயது பூர்த்தி அடைந்திருப்பதுடன் வயது சான்று தேவை 
பதிவு புதுப்பித்தல்
 
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பதிவு நிரந்தர பதிவாகும். புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை
 
வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு
 
விண்ணப்பம் 1.மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு 4% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இப்பணிகளுக்கு இவா்களுக்கு வயது வரம்பில் 10 வருடங்கள் சலுகை அளிக்கப்படும்.


10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய அரசு பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
 
போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி
 
TNPSC, UPSC, SSC, RRB, Banking Exam போன்றவற்றிற்கான போட்டி தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. இத்தகைய தோ்வுகளுக்கு விண்ணப்பித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
 
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை
 
மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும். ஏனையவா்களுக்கு 5 வருடம் முடிந்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படும்
12ம் வகுப்பு தோ்ச்சிபெற்றவா்களுக்கு மாதம் ரூ.750/– வழங்கப்படும்
பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு மாதம் ரூ.1000/– வீதம் வழங்கப்படும்குறிப்பு பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிடா் வகுப்பைச் சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 45 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்.
ஏனைய வகுப்பை சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 40 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்
 
தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
 
இம்முகாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

ARUNACHALAM