இளைய காமராஜர் நினைவஞ்சலி

SOCIAL SHARE
Pin It

சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷன் நிறுவனர் இளைய காமராஜர் திரு-. த. அய்யம்பெருமாள் (19&07&2011) அவர்களின் நினைவுதினம் இன்று. 

கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த

விருதுநகர் மாவட்டத்தில் தான் இளைய காமராஜராகிய ஐயா திரு. த. அய்யம்பெருமாள் அவர்களும் பிறந்தார்.

தமிழக கிராமப்புற மாணவர்களும் கம்ப்யூட்டர் கல்வி பயில ஏராளமான பயிற்சி மையங்களை நடத்தி வந்த இவர், எம்.இ. பட்டம் பெற்றவர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் சேர்த்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நிறுவி வெற்றிகரமாக கம்ப்யூட்டர் கல்வியை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்.

1990களில் எட்டாக்கனியாக இருந்த கம்ப்யூட்டர் கல்வியை எளிமைப்படுத்தி கிராமப்புற மாணவர்களும் எளிதில் புரியும் வகையில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் என்ற அடிப்படையில் தரமான கம்ப்யூட்டர்களை வைத்து செய்முறை பயிற்சியாக, கல்வியை முடித்தவுடன் வேலைக்கு செல்லும் அளவுக்கு மாணவர்களை உருவாக்கியவர். 

சிஎஸ்சி நிறுவனத்தின் பயிற்சி மையம் மூலம் ஆண்டுதோறும் 1,80,000 பேர் பயன்பெற்று வருகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் காட்டிய வழியில் இளைய காமராஜர் செயல்பட்டு தொழில்நுட்ப கல்வியில் புதுமை படைத்தவர்.

அன்னாரது நினைவு தினத்தை நினைவுகூர்ந்து அவரது புகழை பரப்புவோம்.

ARUNACHALAM