இந்து திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள்:
மணமகன் / மணமகள் முறையே 21, 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மணமகன் / மணமகள் - இருவரும் இந்து / சீக்கியர்/ஜெயனர்/புத்த மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்து மத முறைப்படி அல்லது சீர்த்திருத்த முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்.
திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், வயது, முகவரி, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மணமகன் / மணமகள் இருவருக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கீழ்காணும் எதேனும் ஒரு இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு இந்து திருமணம் பதிவு செய்துக் கொள்ளலாம்.
மணமகனின் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்
மணமகனிள் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்
இந்து திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள சார்பதிவகம்
தமிழ்நாடு திருமணப் பதிவு
தமிழ்நாடு திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள் :-
குறிப்பாணை மனுவுடன் இரட்டையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவரவர் சமய சட்டத்திற்கு ஏற்ப திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்.
திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் சார்பதிவாளர் முன்னிலையில் குறிப்பாணை பூர்த்தி செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.
திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்கு மேல் 150 நாட்களுக்குள் சார்பதிவாளர் முன்னிலையில் அபராதத்துடன் குறிப்பாணை பூர்த்தி செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.
திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், வயது, முகவரி, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் (4+4) மணமகன் / மணமகள் இருவருக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு திருமணம் நடைபெற்ற இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும்.
சிறப்பு திருமணங்கள் பதிவு
சிறப்பு திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள்
ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள் மற்றும் சார்பதிவாளர் முன்னிலையில் முறைப் படுத்தப்படும் திருமணங்கள் பதிவு செய்யப்படும்.
சார்பதிவாளரால் முறைப்படுத்தப்படும் திருமணம் எனில் மணமகன் / மணமகள் ஆகியோருக்கு முறையே 21, 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற திருமணங்களைப் பொருத்த பதிவு எனில் மணமகன் / மணமகள் ஆகிய இருவருக்கும் 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கீழ்காணும் எதேனும் ஒரு இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு சிறப்பு திருமணம் பதிவு செய்துக் கொள்ளலாம்.
மணமகனின் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்
மணமகனிள் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்
சிறப்பு திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள சார்பதிவகம்
சிறப்பு திருமணம் தொடர்பாக அறிவிப்பு மூன்று பிரிதிகளில் சார்பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிவிப்பு நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யப்பட்ட பின்னர், மற்றொரு நகலை மணமகள் அல்லது மணமகன் நிரந்தர முகவரி அமைந்துள்ள எல்லைக்குட் பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி அதனை அந்த சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யப்படும்.
அறிவிப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தடையின்மைச் சான்று பெறப்பட்டால் திருமணம் முறைப்படுத்தப்படும்/பதிவு செய்யப்படும். பதிவு செய்யும் நாளில் மணமகன் மற்றும் மணமகள் மூன்று சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.
அறிவிப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்கு பின் மூன்று மாதங்களுக்குள் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும். 3 மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் புதிதாக அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
இந்திய கிருத்துவ திருமணங்கள் பதிவு....
பேராயர் மற்றும் இந்திய கிருத்துவ திருமணச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றவர்கள், திருமணப் பதிவாளர்கள் ஆவார்கள்.
திருமணங்கள் குறித்த வடிப்பை சென்னை-28, சாந்தோம் நெடுஞ்சாலை, எண்.100ல் உள்ள பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.













