நயன்தராவுக்கு திருமணமா?

SOCIAL SHARE
Pin It
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதான தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. திருமண தேதியை ரகசியமாக வைத்து இருப்பதாகவும், நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நயன்தாராவுக்கு வயது 36.  2015-ல் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.
 
இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். புதிய பட நிறுவனம் தொடங்கி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது அடுத்த மாதம் திருமணத்துக்கு தயாராவதாக புதிய தகவல் பரவி வருகிறது. நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 3 படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடிக்கிறார்.
 
விரைவில் திருமணம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என தெரிகிறது.

ARUNACHALAM