ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று, இளம் இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வு டுவிட்டரில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது.
நான்காவது போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இளம் இந்திய வீரர்கள். அவர்களை வைத்து இந்திய அணி, அதுவும் அஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி மகத்தான வெற்றியை பதிவு செய்து, வரலாறு படைத்துள்ளது. கப்பட்டது. என்ன ஒரு டீம், என்ன ஒரு டெஸ்ட் தொடர், இந்திய அணி விளையாடிய விதம் நம்ப முடியாதது. ரஹானேவின் சிறந்த தலைமை. அனைத்து இளம் இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்காரணமாக டுவிட்டரில் #INDvsAUS, #Siraj, #IncredibleIndia, #YoungIndia, #ProudMoment, #BCCI, #brisbanetest, #pujara, #Shubmangill, #TestofChampions, #testmatch, #BleedBlue, #IndiaB, #IndiaIndia என பல ஹேஷ்டாக்குகளில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் அனைத்தும் டுவிட்டர் இந்தியாவில் டாப் 20-ல் டிரெண்ட் ஆகின.













