தமிழ் மண்ணின் பொக்கிஷம் பனை மரம்! - 2

SOCIAL SHARE
Pin It

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை  போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

பனை மரத்தின் 34 வகைகள் உள்ளன அவை:

1. ஆண் பனை, 9. சீமைப்பனை 17. இடுக்குப்பனை 25. கொண்டைப்பனை
2.பெண் பனை 10. ஆதம்பனை 18. தாதம்பனை 26. ஏரிலைப்பனை
3. கூந்தப்பனை 11. திப்பிலிப்பனை 19. காந்தம்பனை 27. ஏசறுப்பனை
4. தாளிப்பனை 12. உடலற்பனை 20. பாக்குப்பனை 28. காட்டுப்பனை
5. குமுதிப்பனை 13. கிச்சிலிப்பனை 21. ஈரம்பனை 29. கதலிப்பனை
6.சாற்றுப்பனை 14. குடைப்பனை 22. சீனப்பனை 30. வலியப்பனை
7. ஈச்சம்பனை 15. இளம்பனை 23. குண்டுப்பனை 31. வாதப்பனை
8. ஈழப்பனை 16. கூறைப்பனை 24. அலாம்பனை 32. அலகுப்பனை
33. நிலப்பனை 34. சனம்பனை

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைப்பதாகத் தகவல்.

உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

பனை மரத்தின் பயன்கள்:

  • பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்குரு நீங்கும்.
  • தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
  • பனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
  • பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் அதிகரிக்கும்.

 

ARUNACHALAM