தமிழ் மண்ணின் பொக்கிஷம் பனை மரம்! - 3

SOCIAL SHARE
Pin It

பதநீர் மகிமை

  • சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதநீர் என்று பெயர். மேக நோய் (Syphilis) இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
  • பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
  • பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
  • பனம் பூவைச் சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
  • பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும்.
  • பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தத இதனை சுட்டு சாப்பிடலாம்.
  • பனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

வேலைவாய்ப்பு தரும் பனைமரம் :

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக  வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

பனைத் தொழிலாளர்கள், வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். ஆகவே, அரசு கவனத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனை மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்.  செங்கல் சூளைகளுக்காகவும்,  லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:

”விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் : இல்லையேன்றால் உரம்”

என்பதற்கு ஏற்ப,  மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து,  மரம் வளர்த்தார்கள். இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.

பனை மரம் ஆண் பனை, பெண் பனை, கூந்தல்பனை உள்ளிட்ட பல பெயா்களில் அனைத்து நிலப்பரப்பிலும் வளர்ந்து வருகிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருகிறது. பொதுவாக பனை மரங்களில் சுமார் 60 முதல் 70 வருடங்களுக்குபின் முதிர்ச்சி பெற்றதும் மரத்தின் மேல்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு இலைகளும், பூக்களும் வெளிவரும். இந்த பூக்களில் இருந்து காய்கள் காய்த்து கொத்து கொத்தாக கீழே கொட்டுவது வழக்கம்.

இவ்வாறு பூக்களில் இருந்து காய்கள் வெளியாகும்போது பல்வேறு ஒலிகள் ஏற்படும். முதிர்ச்சி அடைந்த பனைமரங்கள் குலைகள் தள்ளி, பூக்களுடன் காய்களை வெளித்தள்ளும் பனைமரத்தினை கூந்தல்பனை என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் அனைத்தும் இதுபோன்று கூந்தல்பனைமரமாக மாறுவது கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள். அதிலும் குறிப்பாக தமிழர்   இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை மீட்க வேண்டியது தமிழர்களான நமக்கு மிகப் பெரிய கடமை ஆகும்.

ARUNACHALAM