பப்பாளி விதைகளை பழத்திலிருந்து எடுத்ததுமே முளைக்கப் போடவேண்டும். விதையை வைத்திருந்து விதைத்தால் முளைக்க அதிக நாட்கள் பிடிப்பதோடு முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். இருபது பெண் மரங்களுக்கு ஓர் ஆண் மரம் தேவை. ஆனால் ,எந்த விதையிலிருந்து ஆண் மரம் வரும்..,எந்த விதையிலிருந்து பெண் மரம் வரும்..,என்பதை விதையை பார்த்து கணிக்க முடியாது. ஆண் மரம் 5 மாதங்களில் பூத்து விடுவதால் , அதை வைத்து கண்டுபிடித்து சுலபமாக களைந்து விட முடியும்.
ஆண் மரத்தில் உள்ள மகரந்தம் ,பெண் மரத்திலுள்ள சூலகத்தை எட்ட குளவிகளும்,வண்டுகளும் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றன. இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கூட மகரந்தத்தை பெண் பூவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.ஆதலால் ,நம் தோட்டத்துக்குள்ளே ஆண் மரம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆண் பூக்கள் அடிமரத்திலிருந்து காம்பாக நீண்டு கொத்தாக மலர்கின்றன.பெண் பூ இலைக்கு ஒன்றாக அடிமரத்தை ஒட்டியபடி வளர்கின்றன.
ஒரு பப்பாளி மரம் நன்றாக பராமரிக்க பட்டால் நமக்கு நிறைய உணவு தருகிறது. அவற்றில் முக்கியமானவை , வைட்டமின் ஏ, வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி இந்த மூன்றும் பப்பாளி பழத்தில் நிறைந்துள்ளன.மரத்தில் அதிக பிஞ்சுகள் இருக்கும்போது ,சிறுத்து போன பிஞ்சுகளை உதிர்த்து விட்டால் ,மற்ற பிஞ்சுகள் பெரிய பழங்களாக மாறும்.ஒரு பழம் இரண்டு கிலோ வரை கூட இருக்கும்.காலை உணவுக்கு பப்பாளி பழத்தை தேர்வு செய்தால் , நேரம் மிச்சமாகும்.அடுப்பை பற்ற வைக்க தேவை இல்லை.பப்பாளி பழத்திற் சிறு சிறு கூறுகளாக வகுத்து அதன் மீது எழுமிச்சை சாறு பிழிந்துவிட்டால்.அதன் சுவை மாம்பழத்தையும் மிஞ்சும்.
பப்பாளி நன்கு வறட்சியைத் தாங்க கூடிய மரம். ஏழு மாதங்களில் காய்க்க தொடங்கி, பத்து மாதங்களில் பழம் தரக் கூடிய இம்மரத்தின் இலைகள் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.. பப்பாளி காயை வறுத்து கறி செய்து சாப்பிடலாம். காயிலுள்ள பாலை ஒரு மரக்கத்தியால் அல்லது மூங்கில் முள்ளால் கீறி எடுத்து வைத்தால் நாள் பட்ட புண்கள் ஆறும். தோலை சீவி சதையை சிறு சிறு துண்டுகளாக செதுக்கி புண்ணில் வைத்து துணியால் காட்டினாள் கால் வீங்கி வெடிப்பு வந்த புண்கூட ஆறிவிடும். ஒருதுண்டு பப்பாளி காயை இறைச்சி சமைக்கும்போது சேர்த்தால் இறைச்சி எளிதில் வேகும். பப்பாளி பால் சதையை இளக்குகிறது. ஆதலால் முகத்தில் பூசக்கூடிய அழகு சாதனங்களில் பப்பாளி பால் சேர்க்கப்படுகிறது. அதேபோல் பப்பாளி இலைசாறு தனி மகிமை உள்ளது நாம் அறிந்ததே.
"ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு,மூன்று பப்பாளி மரங்கள் இருந்தால்,யாரும் பசியோடு படுகைக்குப் போகத் தேவையில்லை.நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் சாகவும் தேவையில்லை"













