பாகிஸ்தானில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும் அந்நாட்டில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பல, நீதிமன்றத்துக்கு வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையைக் கண்டறிய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு ஆட்டாப்ஸி சோதனை மேற்கொள்ளப்படும். தற்போது கைபர் மெடிக்கல் காலேஜ் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பெஷாவர் மாகாணத்தில் நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சாட்சிகளை அளிக்க மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஆட்டாப்ஸி சோதனைக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என தகவல் அளித்துள்ளது. இது அந்த மாகாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய பெண்கள் நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை நாடும் நிலையில் அவர்களிடமே பரிசோதனைக்கு அதிக பணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கிய வழக்குகளில் புகார் அளிப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தானின் செலவுகள் அதிகம். போலீசாரின் வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதுமுதல் பல அரசு சேவைகளுக்கு புகார் அளிக்க வரும் குடிமக்கள் பணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.













