குற்றங்கள் கட்டுப்படுத்துவதற்கான கைதிகளுக்கு GPS tag

SOCIAL SHARE
Pin It

சிறைக் கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற ஆய்வு ஆச்சரியத்தை அளிக்கிறது. உலகிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது பிரிட்டன். திருடர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபவதைக் கட்டுப்படுத்த, குறியீடுகள் கொண்ட ஜி.பி.எஸ் டேஹ்களை (GPS tag) அணிய வேண்டும். 

இந்த முன்முயற்சியில், கொள்ளையர்கள், திருடர்கள் மற்றும் வழிப்பறி செய்பவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஜிபிஎஸ் டேஹ்கள் பொருத்தப்படும். அது அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்படும்.

இதுதொடர்பாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது, ஜி.பி.எஸ் குறிச்சொல்லுடன் பிணைக்கப்படுவார்கள், இது அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க உதவும். அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது போன்ற நடவடிக்கைகளை நகர்வுகளை 24/7 கண்காணிக்க முடியும்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அதே தவறுகளை செய்கின்றனர். ஆனால், அதில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை. எனவே, ஜி.பி.எஸ் டேக் பொருத்துவது போன்ற முயற்சி, குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதை தடுக்கும் என்று இங்கிலாந்து நீதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

"அவர்களின் நகர்வுகளை கண்காணிப்பதன் மூலம், குற்றம் செய்வதற்கான தூண்டுதலைக் குறைக்க முடியும், மீண்டும் தவறு செய்தால் காவல்துறையினருக்கு தெரிந்துவிடும் என்பதும், தாங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம் என்ற எண்ணமும் அவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்" என்று குற்றம் மற்றும் காவல்துறை அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

 

ARUNACHALAM