குக் வித் கோமாளி என்பது தனியார் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. இதில் சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் நடுவர்களாக உள்ளார்கள்.
இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்றது. இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ’குக் வித் கிறுக்கு’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
அதேபோல் மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.













