சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் அவற்றை வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்களும் ரூ. 70 வரை கேட்பதால் இல்லத்தரசிகள் கடும் கோவத்தில் உள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அவற்றை வீடு வீடாக கொண்டு சேர்க்கும் ஏஜென்சி ஊழியர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.50 முதல் ரூ.70 வரை கேட்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.
பணம் தராதவர்களுக்கு கேஸ் விநியோகிப்பதில்லை என்றும், தாமதமாக கேஸ் விநியோகிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கேஸ் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இல்லத்தரசிகள் குமுறுகின்றனர்.













