மருத்துவம் சார்ந்த படிப்புகள்

SOCIAL SHARE
Pin It

எம்பிபிஎஸ்

ஆங்கில மருத்துவருக்கான எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டுமெனில், நீட்  (National Eligibility and Entrance Test) என்னும் தேசிய அளவிலான தேர்வு கட்டாயம் எழுதியாக வேண்டும். இந்தத் தேர்வானது, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.



நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன. ஆயினும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கும், மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். ப்ளஸ் 2 தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா &  பிற மருத்துவ படிப்புகள்!

ஆங்கில மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) படித்தால் மட்டுமே மருத்துவர் ஆகலாம் என்பதில்லை. இன்றைய சூழலில் மக்களின் விழிப்புணர்வால் ஆங்கில மருத்துவம் தவிர்த்து ஹோமியோபதி, ஆயுர்வேதம் என மற்ற மருத்துவ முறைகளும் பிரபலமாகியுள்ளன. மாணவர்கள் இது போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்ந்து தங்கள் குறிக்கோளை எட்டலாம்.

மருத்துவத் துறை பட்டப் படிப்புகள்

ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மற்றும் யோகா அறிவியல், சித்தா, யுனானி எனும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கல்லூரிகள் உள்ளன. ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பி.ஏ.எம்.எஸ் (Bachelor of Ayurvedic Medicine and Surgery - B.A.M.S) பயில வேண்டும். தமிழ்நாட்டில் அரசு கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் 290 இடங்கள் இந்த பட்டப்படிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹோமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பி.எச்.எம்.எஸ் (Bachelor of Homoeopathic Medicine and Surgery - B.H.M.S) பயில வேண்டும். அரசு கல்லூரியில் 50 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் 560 இடங்கள் என்று மொத்தம் 610 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பி.என்.ஒய்.எஸ் (Bachelor of Naturopathy and Yogic Sciences - B.N.Y.S) பயில வேண்டும். அரசுக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் 300 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பி.எஸ்.எம்.எஸ் (Bachelor of Siddha Medicine and Surgery- B.S.M.S) பயில வேண்டும். அரசு கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் 470 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

யுனானி வழி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பி.யு.எம்.எஸ் (Bachelor of Unani Medicine and Surgery  B.U.M.S) பயில வேண்டும். 

இந்த பட்டப் படிப்புகளை முடித்து அரசு மருத்துவராகவோ, தனியார் மருத்துவமனைகளிலோ பணியாற்றலாம். பெரும்பாலான மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்துகின்றனர். இந்தத் துறைகளில் பட்ட மேற்படிப்புகளை முடிக்கும் மருத்துவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. 

ARUNACHALAM