பாதுகாப்பான முதலீடு என்றால் யாருக்கும் சந்தேகம் என்பதே இல்லாமல் வங்கிகளில் வைக்கும் நிலையான வைப்பு தான். தற்போது வங்கிகள் FDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளன. இதில், மிகப்பெரிய வங்கிகளை விட சிறிய அளவிலான வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்க்கின்றன என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல்.
சிறு-குறு நிதிகள் (Microfinance) என்று சொல்லப்படும் சிறிய அல்லது பிரபலமாகாத வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான எப்டி விகிதங்களை அதிகமாக கொடுக்கின்றன. அதில், ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் (Jana Small Finance Bank), உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank), சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank), நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank) ஆகிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன.
சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank)
சூர்யோதயா வங்கி, மூத்த குடிமக்களின் நிலை வைப்புத் தொகைக்கு 4.5% முதல் 8% வரை வழங்கி வருகிறது. 5 ஆண்டு எஃப்.டிக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank)
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டிகளுக்கு 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் இது.
ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)
ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புக்கு 3% முதல் 7.75% வரை கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலம் 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank)
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு 3.5% முதல் 8% வரை வட்டி வழங்குகிறது.













