இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், சில நாடுகளில் அவை தண்ணீரை விட குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
உலகில் பல நாடுகள் உள்ளன, அங்கு நீங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும். வெனிசுலா, ஈரான் மற்றும் அங்கோலாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது. வெனிசுலாவில் பெட்ரோல் விலை ஜனவரி 4ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 46 காசுக்கு விற்கப்படுகிறது. அதே நாளில், ஈரானில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 24 காசுகள் ஆகவும், அங்கோலாவில் 17 ரூபாய் 88 காசுகளாகவும் விற்பனை ஆனது.
குளோபல் பெட்ரோல் டீசல் பிரைஸ்.காம் இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, பெட்ரோல் ஹாங்காங்கில் லிட்டர். ரூ.169.21 காசுகள், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ரூ.150.29, சிரியாவில் ரூ.149.08, நெதர்லாந்தில் ரூ.140.90. நார்வேயில் ரூ.135.38 ரூபாய், பின்லாந்தில் ரூ.133.90, இங்கிலாந்தில் ரூ.116, சுவிட்சர்லாந்தில் ரூ.115, ஜெர்மனியில் ரூ.116, ஜப்பானில் ரூ.93.62, ஆஸ்திரேலியாவில் ரூ.68.91, அமெரிக்காவில் ரூ.50.13, ரஷ்யாவில் ரூ.42.69. இது தான் உலக நாடுகளில் பெட்ரோலின் விலை.
சார்க் நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் பெட்ரோல் விலை ரூ.72.62, நேபாளத்தில் ரூ.67.41, ஆப்கானிஸ்தானில் ரூ. 36.34, பர்மாவில் ரூ.43.53, பாகிஸ்தானில் ரூ.48.19, பூட்டானில் ரூ. 49.56, இலங்கையில் ரூ.62.79க்கு விற்பனை செய்யப்படுகிறது. .













