இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் 2வது அலை ஏப்., 2வது வாரத்திற்கு பின் உச்சம் பெறும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவின் 2வது அலை 100 நாட்கள் நீடிக்கும். 2வது அலையின் போது 25 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.
தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, 2வது அலை ஏப்ரல் 2வது பிற்பாதியில் தான் உச்சம்பெறும்.
ஊரடங்கோ அல்லது கட்டுப்பாடுகளோ பலன்தராது. தடுப்பூசியை போடும் பணியை அதிகரிப்பதே, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். தற்போது தினசரி போடப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 34 லட்சத்தில் இருந்து 40 - 45 லட்சமாக அதிகரிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 4 மாதங்களில் தடுப்பூசி போடும் பணி நிறைவு பெறும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.













