Editor's Choice

தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயண சலுகைகளை அளித்து வருகிறது.

 

உடல் ஊனமுற்றோர்

  • ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
  • ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வருமானம் ரூ.12,000-க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
  • மேற்படி சலுகைக்கான பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்
  • 12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவச பயண சலுகை 'இணைய வழியில் வழங்கப்படுகிறது. இப்பயணச்சலுகை ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் வழங்கப்படும்.

 

மனவளர்ச்சி குன்றியவர்கள்

  • ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும்அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
  • ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.
  • கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவருடன் துணைக்குச் சென்று வர அவரது உதவியாளர் ஒருவருக்கும் சேர்த்து இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
  • வருமான உச்ச வரம்பின்றி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
  • 12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊனமுற்றோர்க்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவசப் பயணச் சலுகை இணைய வழியில் வழங்கப்படுகிறது

 

பார்வையற்றவர்கள்

  • மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
  • பார்வையற்றவர்களுக்கு அனைத்துத் தடங்களிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்யக் கூடிய வகையில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
  • பார்வையற்றவர்களுக்கு வருமான உச்சவரம்பு இன்றி இலவசப் பயணச் சலுகை ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
  • பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றுப் பயண அட்டை ரூ.10 வசூலிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பப் படிவம்

  • இந்த இலவசப் பயணச் சலுகைக்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதனை முழுமையாக நிரப்பி அந்தந்த பகுதியிலிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு இலவசப் பயணச் சலுகை அளிக்கப்படும். அந்த விண்ணப்பப் படிவத்துடன் கீழ்காணும் சான்றிதழ்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.
  • இலவச பயணச் சலுகை பெறும் ஊனமுற்றவர்கள் மருத்துவமனை/கல்லூரி/பயிற்சிக் கூடம்/பணியிடம்/ சுயமாக வேலை செய்யும் இடம் இவற்றில் ஏதேனும் ஒருஇடத்திற்கு மட்டும் சென்று வர இலவச பயணச் சலுகைக்கு உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் பரிந்துரை பெற்று வரவேண்டும்.
  • விண்ணப்பதாரர் இலவசப் பயணச்சலுகை கோரும் விண்ணப்பத்துடன் தனது இரண்டு புகைப்பட நகல்களை
  • (தபால்தலை அளவு) சமர்ப்பிக்கவேண்டும்.
  • வருமானச் சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்கவேண்டும்.
  • மேற்படி இலவச பயணச்சலுகை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

 

நான்கில் ஒரு பங்கு பயண கட்டண சலுகை

சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அனைத்துவகை ஊனமுற்றோரும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

Editor's Choice
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினாலும், அதை அவர்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி பல முட்டுக்கட்டைகள் உள்ளன. அதில் முக்கியமானது, மோட்டார் சைக்கிள் வாங்குவது. மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது. ஆனால், அந்த வாகனம் 'அராய்’ (Automotive Research Association of India)நிறுவனத்தால் சான்றிதழ் பெற்ற பணிம¬னையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பெற முடியும்.
Editor's Choice

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான அமைச்சகத்தின் சார்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு சேவையாற்றி வருகிறது. பல்வேறு தேசிய விருதுகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பல்வேறு சேவைகள்

இங்கு, மறுவாழ்வு மருத்துவம் (Physical Medicine and Rehabilitation), மறுவாழ்வு உளவியல் (Rehabilitation psychology), ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி (Vocational Training), பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப்

பயிற்சி (Speech, Hearing, Communication), சிறப்புக் கல்வி (Special Education), கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை(Deaf blind), இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் (Physiotheraphy and Occupational Theraphy), 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி (Early Intervention), செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் (Prosthetics and Orthatics), உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி (Sensory Intergration), சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் Community Based Rehabilitation) ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரிப் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது.

2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படும் பெரும்பாலான பெற்றோருக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த சிறகுகள் சிறப்புக் குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் இணைச் செயலர் கே. நன்மாறன்.

அவர் மேலும் கூறியது: “இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்காக சென்ற பின்னர் தான் இதன் சிறப்பான செயல்பாடுகள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளியான எனது மகளுடன் கடந்த மாதத்தில் 5 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். உண்மையில் முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் இந்த நிறுவனம் செயல்படுவது பாராட்டுக்குரியது.

வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

இதன் சிறப்பு என்னவெனில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு ரூ.5 பதிவுக் கட்டணத்திலும், வசதி படைத்தோருக்கு பெயரளவுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெற்றோர் அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு” என்றார் அவர்.

இந்த வாய்ப்பை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தை www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், 044 - 27472113, 27472046, 27472389 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Editor's Choice

அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்குச் சங்கம்:


சென்னையில் இயங்கி வரும் இச்சங்கம் பார்வையற்றோருக்குத் தொழில் கல்வியை வழங்கி அவர்கள் வாழ்வில் தன்னம்பிக்கையோடு வாழ வழிச்செய்தது. மத்திய அரசு வழங்கும் தொழில் பயிற்சியைப் பார்வையற்றோர்களும் பெறவேண்டும் என்பதற்காக தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது இச்சங்கம்.

Editor's Choice
தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்
(NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-
 
1) மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவத்ற்கு, ”தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்” பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.
 
2) விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் மாற்றுத்திறனாளிகள் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்கவும், விவசாயப் பணிகளுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது .
 
3) மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை மற்றும் அவர்களின் பெற்றோர் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
 
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கும்.
 
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.
 
நிபந்தனைகள்:
 
1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்.
குறைந்தது 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
 
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
 
3) நகர் பகுதியில் வசிப்பவராக இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும் அவரது ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான அனுபவமும் அவர் பெற்றிருக்கவேண்டும்.
வட்டி விகிதம்:
 
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%.
50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%.
5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.
திருப்பிச்செலுத்தும் காலம்:
 
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
 
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).
 
கடன் தள்ளுபடி:
 
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது
எப்படி விண்ணப்பிப்பது?
 
1) தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழக முகவரி:
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank),
233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை,
சென்னை-600001.
போன்: 044-25302300
 
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
 
3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய முகவரி:
முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்,
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே.நகர்,
சென்னை-600 078.
போன்: 044-24719948, 044-24719949
Editor's Choice

I.A.B முன்னால் மாணவர்கள் சங்கம்

மதுரையிலுள்ள இந்திய பார்வையற்றோர் சங்கத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டி அங்கு படித்த ஏழை பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் உதவியிருக்கின்றனர். அவர்கள் இது வரை 160 பயனாளிகளுக்கு உதவியிருக்கின்றனர். நான் ஒரு மாற்றுத்திறனாளி என்று கூறிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

பக்கம் 19 / 21