Editor's Choice

மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சீனாவில் இருந்து களமிறங்கிய ‘அலிபாபா’ நிறுவனம், குறுகிய காலத்தில் இத்துறையில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. சீன அரசு தற்போது தனது நாட்டில் நிதி, சுகாதார சேவைகள் உள்ளிட்ட துறைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இவற்றை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் புயல் வேகத்தில் வளர்ந்து, உலகம் முழுவதும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், சீனாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் நசுக்கி வருகின்றன.

இதுபோல், எந்தவொரு தனிப்பட்ட பெரிய தொழில் நிறுவனமும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்களை நசுக்கிவிட்டு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, ‘ஏகபோக தடுப்பு சட்டம்’ என்ற சிறப்பு சட்டத்தை சீன அரசு கொண்டு வந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நிறுவனங்களின் மீது, இந்த சட்டத்தின் கீழ் அது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறது. இதன்படி, மின்னணு வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் குற்றத்துக்காக, அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடியை சீனா அபராதம் விதித்தது.

Editor's Choice

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி என்கிற அமைப்பு முன்னதாக பேர்சேவேரன்ஸ் என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது. 

இதனைத்தொடர்ந்து தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிறிய விமானம் ஒன்றை பறக்கவிட நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று, நான்கு நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெறும் 40 வினாடிகள் செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து சிறிது உயரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.

இதன் புகைப்படங்களை பர்சிவியரன்ஸ் ரோவர் வெளியிடும். இதற்காகவே இந்த ரோவரில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

கேரளாவில்,  தனியார் நிறுவனம் ஒன்று காற்றில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை தயாரித்து உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, கே.எஸ்.யு.எம்., எனப்படும், 'கேரள ஸ்டார்ட் அப் மிஷன்' நிறுவனம், கொரோனா வைரஸ், காற்றில் பரவுவதை தடுக்க, ஒரு மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை உருவாக்கி உள்ளது. 'ஸ்பீக்கர்' போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு, 'வொல்ப் ஏர்மாஸ்க்' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள இடத்தில், காற்றில் கொரோனா வைரஸ் இருந்தால், அதை தடுக்கும். இந்த மின்னணு சாதனத்தை, ஆர்.ஜி.சி.பி.,எனப்படும், ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். அதில், இந்த கருவி சிறந்த செயல்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதிபடுத்தப்பட்டது.

இந்த இன்குபேட்டர் கருவி, 15 நிமிடங்களில், கொரோனா வைரசை, 99 சதவீத அளவிற்கு குறைக்கும் திறன் உடையது. இதை, 'ஆன்' செய்துவிட்டால், 360 டிகிரி சுற்றி, ஒரு நாள் முழுதும் பாதுகாப்பு அரணாக, வைரசை ஊடுருவ விடாமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Editor's Choice

பெட்ரோல், டீசலுக்கு  மாற்று  எரிபொருள் கிடைக்காதா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இத்தகைய நேரத்தில்  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, மின்சாரத்தில்  இயங்கும் வாகனங்களின்  தேவை அவசியமாகிறது. இச்சூழலில்தான் சென்னை ஐஐடி மாணவர்களின் ஸ்டார்ட் அப்  நிறுவனமான  பைபீம்  நிறுவனம், சமீபத்தில் பைமோ என்ற மின்சார பைக்கை  அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஸ்மார்ட்போனைவிட  வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

சைக்கிள் போல் தோற்றமளிக்கும் இந்த பைமோ வாகனம், குறைந்த வேகத் திறன் கொண்ட மின்சார வாகனம் என்பதால் இதை ஓட்டுவதற்கு உரிமம்,  பதிவு தேவையில்லை. பைமோ வாகனத்தின் விலை ரூ.30 ஆயிரம்தான். பேட்டரி இடமாற்ற வசதியும் இதில் உள்ளது. இதில் சார்ஜ்  செய்யப்பட்ட  பேட்டரியில் இருந்து மற்றொன்றுக்கு சக்தியை பரிமாறிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் குறிப்பிட்ட எலெக்ட்ரானிக் பைக்குகளில் பைமோவும் ஒன்றாகும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள்  உள்ளிட்ட சாதனங்களில் 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இதில் எல்இடி லைட், ஒலி எழுப்பி, இருசக்கர டிஸ்க் பிரேக் என பல  சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர்  வரை பயணிக்கலாம். இதை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரமே ஆகிறது. இதில் சாக்கப்சர் உட்பட அனைத்து சௌகரியங்களும்   இருக்கிறது. இதில் சிறப்பு வசதிகளாக ஸ்விங் ஆர்ம் மெக்கானிஸ்ம், ட்யூவல் ஷாக் அப்சார்பர் மற்றும் மிகவும் மிருதுவான இருக்கை உள்ளிட்டவை  பொருத்தப்பட்டிருக்கின்றன. 

Editor's Choice

வரும் 2024ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையமான நாசா, அமெரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவரை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

முந்தைய டொனால்ட் டிரம்ப் ஆட்சிகள் அமெரிக்கா வெள்ளையர்களுக்கு என்ற கொள்கை நீடித்து வந்த நிலையில் தற்போது ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பிறநாட்டு குடியேறிகளுக்கும், அமெரிக்க கருப்பின மக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் செவ்வாய் கிரகத்தில் பேர்சிவேரன்ஸ் ரோவரை வைத்து சோதனை செய்து வருகிறது. வரும் 2024ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்ப நாசா விஞ்ஞானிகள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரது அறிவுறுத்தலின்படி இந்த முறை கருப்பின பெண் விஞ்ஞானி ஒருவரை நிலவுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானித்துள்ளனர். இதன்மூலமாக அமெரிக்காவில் தலைசிறந்து விளங்கும் கருப்பின விஞ்ஞானிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று ஜனநாயக கட்சி நினைக்கிறது. ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க கருப்பின மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ஏப்ரல் 1, 2021 அன்று நாட்டின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படவில்லை. அன்று, சில வங்கிகளின் UPI மற்றும் IMPS பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தன. அந்த சூழலில் வாடிக்கையாளர்களின் பணமும் சிக்கிக்கொண்டது. உங்கள் UPI பரிவர்த்தனை தோல்வியுற்று, சரியான நேரத்தில் வங்கி உங்கள் கணக்கில் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் என்ன செய்வது?

ஏப்ரல் 1, 2021 அன்று UPI செயல்முறைகள் தோல்வியடைந்தன

ஏப்ரல் 1 ம் தேதி மாலைக்குள் பெரும்பாலான வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக NPCI ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. மாலைக்குள் வாடிக்கையாளர்கள் தடையின்றி IMPS மற்றும் UPI சேவைகளைப் பெற முடிந்தது. ஆனால் தங்களது பரிவர்த்தனை தோல்வியடைந்த பிறகு, தங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்று பல வாடிக்கையாளர்கள் புகார் கூறினர்.

பரிவர்த்தனை தோல்வியுற்று பணம் பெற முடியாதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அக்டோபர் 2019 க்கான இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் பிரச்சினையை தீர்க்கும். இந்த சுற்றறிக்கையின் கீழ், பணத்தை தானாக மாற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லைக்குள் பரிவர்த்தனைக்கான தீர்வு அளிக்கப்படாவிட்டால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும். சுற்றறிக்கையின் படி, காலக்கெடு முடிந்ததும், ஒரு நாளைக்கு ரூ.100 என்ற விகிதத்தில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சுற்றறிக்கையின் படி, UPI பரிவர்த்தனை தோல்வியுற்று, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, அந்த பணம் பயனாளியின் கணக்கை சென்றடையவில்லை என்றால், பரிவர்த்தனை செய்யப்பட்ட நாளிலிருந்து T + 1 நாளுக்குள் ஆட்டோ ரிவர்சல் செய்யப்பட வெண்டும். இங்கே T என்பது பரிவர்த்தனை நாள் என்றும் +1 என்றால் ஒரு நாள் அல்லது 24 மணிநேரம் என்றும் பொருள்.

முதலில், நீங்கள் சேவை வழங்குநரிடம் புகார் செய்ய வேண்டும். நீங்கள் Raise Dispute -ல் சென்று இதை செய்யலாம். உங்கள் புகார் நியாயமானதாக இருந்தால், பணம்  உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடும். புகார் அளித்தும் வங்கியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், நீங்கள் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2019 ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.

பக்கம் 9 / 21