- தொழில்நுட்பம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 326
சூரிய ஒளி மின் பலகை தயாரிப்பில் புரட்சியை நிகழ்த்தி வருகின்றன, 'பெரோவ்ஸ்கைட்' என்கிற தாதுக்கள். சிலிக்கனால் பலகைகளைவிட அதிக மின்சாரத்தை பெரோவ்ஸ்கைட் பலகைகள் உற்பத்தி செய்கின்றன. அதேசமயம், அதிக வெயிலால் நிலையற்ற தன்மையையும் அடைகின்றன.
இதனால், பெரோவ்ஸ்கைட்டின் நிலையற்ற தன்மையை போக்குவது எப்படி என்று பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அண்மையில், ஆஸ்திரேலியாவிலுள்ள, குவீன்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முடி திருத்தகத்தில் வீணாகும் தலை முடி இதற்கு உதவலாம் என கண்டறிந்துள்ளனர்.
மனித தலைமுடியை 240 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வைத்தால், அது மூலக்கூறு மட்டத்தில் கார்பன் மற்றும் நைட்ரஜன் பின்னிப் பிணைந்த ஒரு பொருளை தருகிறது. நேனோ புள்ளிகள் அடர்த்தியான இந்தப் பொருளை, பெரோவ்ஸ்கைட் சூரிய பலகைகளை தயாரிக்க விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
தலைமுடியில் தயாரான கார்பன் நேனோ பொருள், பலகையின் மேல் கவசம் போல செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த கவசம், பெரோவ்ஸ்கைட் தாதுவை, ஈரப்பதம், வெப்பம், ஆக்சிஜன் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
UPI செயலி மூலம் கியூஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இதற்காக, ஏடிஎம் நிறுவனமான NCR கார்ப்பரேஷன் அண்மையில் யுபிஐ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் முறையை (Interoperable Cardless Cash Withdrawal -ICCW ) அறிமுகப்படுத்தியுள்ளது.
ICCW அடிப்படையில் இயங்கும் இந்த சிறப்பு ஏடிஎம்களை நிறுவ, சிட்டி யூனியன் வங்கி, NCR கார்ப்பரேஷனுடன் இணைந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தும் வகையில், இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அதிக ஏடிஎம்களை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க, முதலில், ஸ்மார்ட்போனில் ஏதேனும் யுபிஐ செயலியை (GPay, BHIM, Paytm, Phonepe, Amazon) வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஏடிஎம் திரையில் காட்டப்படும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்ததும், கணக்கில் இருந்து எடுக்க வேண்டிய பணத்தை உள்ளிட வேண்டும். 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் (UPI PIN) கேட்கப்படும், அதன் பிறகு பணத்தை ஏடிஎம்மில் இருந்து பெறலாம். ஆரம்பத்தில், இது போன்று ஒரு நேரத்தில், ரூ.5,000 மட்டுமே திரும்பப் பெற முடியும்.
யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface -UPI) என்பது நிகழ்நேர கட்டண முறையாகும், இதன் மூலம் மொபைல் செயலியின் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை மாற்ற முடியும். இதற்காக, உங்கள் வங்கிக் கணக்கை யுபிஐ செயலியுடன் இணைக்க வேண்டும். நீங்கள் ஒரு யுபிஐ செயலியின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம் என்பதோடு, நொடிகளில் பணத்தை அனுப்பலாம்.
யுபிஐ கணக்கை உருவாக்க மேலே குறிப்பிட்ட எந்தவொரு செயலியையும் நீங்கள் பதிவிறக்கலாம். இதற்குப் பிறகு, மொபைல் எண்ணை பதிவு செய்து, வங்கி கணக்கு, வங்கி பெயரை இடவேண்டும். மொபைல் எண் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அது திரையில் தோன்றும். பின்னர் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, பணம் செலுத்த ஏடிஎம் கார்டின் விவரங்களை அளித்தபின் UPI கணக்கு ஏற்படுத்தப்படும்.
சோப்புப் பொருட்கள் அன்றாடம் பயன்படுபவை. தூள் அல்லது திரவம் என எதையும் அடைத்து விற்க பிளாஸ்டிக்கே அதிகம் பயன்படுகிறது. இதனால், நகரத்து குப்பை மேடுகளில் 'டிடர்ஜென்ட்' சார்ந்த பிளாஸ்டிக்குகள் அதிகம் குவிகின்றன.
இதை தவிர்க்க, 'ட்ரூ எர்த்' என்ற நிறுவனம் 'எகோ ஸ்ட்ரிப்' என்ற அட்டையை உருவாக்கியுள்ளது. அடர்த்தியான சோப்புப் பொருட்களால் ஆனது இந்த அட்டை. இதை துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டால், சோப்புத் தூள் அல்லது திரவம் போலவே துணிகளை வெளுத்து விடுகிறது. ஆனா, இந்த அட்டையில் எந்தவித பிளாஸ்டிக் பயன்பாடும் இல்லை. தவிர, இந்த அட்டைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டியும் காகித அட்டையால் ஆனது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கரண்டி என்று சோப்புத்தூள் மற்றும் திரவத்திற்கு தேவையான எதுவும் எகோ ஸ்ட்ரிப் சலவை அட்டைக்குத் தேவையில்லை. இது இலகுவாக இருப்பதால், இதை சுமக்கும் வாகனங்களால் வெளியிடப்படும் புகை மாசு 94 சதவீதம் குறையும்.
மேலும், உலகெங்கும் ட்ரூ எர்த்தின் கண்டுபிடிப்பை ஒரு ஆண்டு சலவைக்குப் பயன்படுத்தினால், கிடைக்கும் சுற்றுச்சூழல் பயன் மிக அதிகம். அதாவது, ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்திற்கு வருவதை தவிர்க்கலாம். தவிர, ஒரு நாள் உலகம் முழுவதும் 2.7 கோடி கார்களை சாலையிலிருந்து அகற்றினால் மீதமாகும் அளவுக்கு கார்பன் உமிழ்வை தவிர்க்க முடியும்.
Facebook ஒரு புதிய அசத்தலான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் தங்கள் பதிவுகளையும் குறிப்புகளையும் கூகிள் ஆவணங்கள் (Google Document), பிளாகர் (Blogger) மற்றும் வேர்ட்பிரஸ்.காம் (WordPress.Com) ஆகியவற்றுக்கு மாற்ற முடியும்.
கடந்த ஆண்டு, முகநூலில் பதிவிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பேக் பிளேஸ் (Backblaze), டிராப்பாக்ஸ் (Dropbox), கூகிள் புகைப்படங்கள் (Google Photos) மற்றும் கூஃபர் ( Koofr) ஆகியவற்றில் மாற்றி சேமித்து வைத்து கொள்ளும் அம்சத்தை அதன் பயனர்களுக்கு வழங்கியது.
இந்த டூலின் பெயர் ட்ரான்ஸ்பர் யுவர் இன்பர்மேஷன் என்பதாகும். மக்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் தேவைகளை மனதில் வைத்து இந்த டூலை உருவாக்கியுள்ளதாகவும், தகவல் பரிமாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்பு பாஸ்வேர்ட் அளிக்க வேண்டும், இதன் மூலம், நீங்கள் தரவைப் பாதுகாப்பாக மாற்ற முடியும் என பேஸ்புக் நிறுவன சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த டூலை அணுக, பயனர்கள் பேஸ்புக் செட்டிங்கில் உங்கள் பேஸ்புக் இன்பர்மேஷன் என்பதற்கு செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு, அதில் ‘Transfer Your Information' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் தகவலை தேர்ந்தெடுக்க வேண்டும். கூகிள் டாக்ஸ் (Google Document) , வேர்ட் பிரஸ் (WordPress.Com) மற்றும் பிளாகர் ((Blogger) ஆகியவற்றுக்கான ஆப்ஷன்களை இங்கே காணலாம். நீங்கள் ட்ரான்பர் செய்வதை உறுதிப்படுத்திய பின் உங்கள் தகவல் நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்கின் நிறுவனம் தயாரித்த கார் ஆகும். ஹூஸ்டனுக்கு வடக்கே சனிக்கிழமை பிற்பகுதியில் வாகனம் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, அது ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான வாகனத்தின் சக்கரத்தில் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனால் இன்னும் விசாரணை முழுமையடையவில்லை," என்றும், விபத்து நடந்தபோது காரின் முன்புற இருக்கையில் பயணிகள் இருக்கையில் ஒருவரும் மற்றவர் பின் இருக்கையிலும் அமர்ந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் டிரைவர் பக்க ஏர்பேக் பயன்படுத்தப்பட்டதா, காரின் டிரைவர் உதவி அமைப்பு செயல்பட்டதா என்பதை போலீசார் இன்னும் தீர்மானிக்கவில்லை.
”தானியங்கி கார்களுக்கு வழங்கும் ஓட்டுநர் உதவி அமைப்புகள் தங்கள் வாகனங்களை முழுமையாக இயக்கிவிடும் என்பது உறுதியாக கூறமுடியாது என்றும், அதை மேற்பார்வை செய்வது அவசியம் என்றும்” டெஸ்லாவின் இணையதளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி காரில் பயணிப்பவர்களின் வாகனத்தில் ஓட்டுநர்கள் தூங்குவதை பார்க்க முடிகிறது. அல்லது நீண்ட நேரம் ஸ்டியரிங்கில் கைகள் இல்லாமல் இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது.
சமீபத்திய விபத்துக்களைத் தொடர்ந்து டெஸ்லாவின் Semi-automated driving system குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருவதோடு, அதன் புதுப்பிக்கப்பட்ட "முழு சுய-ஓட்டுநர்" மென்பொருளை அதிக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் டெஸ்லா வாகனங்கள் விபத்துக்குள்ளானது குறித்து 27 விசாரணைகள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க வாகன பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. மூன்று விபத்துக்கள் அண்மையில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கம் 7 / 21



