Editor's Choice

சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகள்  மே 26, 2021 முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், அவற்றுக்கு சிக்கல் ஏற்படலாம்.

புதிய விதிகளை பின்பற்றி செயல்படாத சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பை இழக்க நேரிடும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது இந்திய சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மே மாதம் 26ஆம் தேதி முதல் அவை நடைமுறைக்கு வரும். அதற்கு முன்னதாகவே அரசின் புதிய விதிகளை பின்பற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இருப்பினும், கூ (Koo) தவிர உயர் சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசின் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அரசாங்க வழிகாட்டுதல்களை இந்த சமூக ஊடக நிறுவனங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றத் தயாராக இல்லையா என்ற தீவிரமான கேள்வியை இது எழுப்புகிறது.

புதிய விதிகளை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்கள் வரை கால அவசகாசம் கோருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் சமூக ஊடக நிறுவனங்கள் மத்திய அரசை அணுகுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள்   தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

 

Editor's Choice

1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் என்கிற பிரவுசரை உருவாக்கியது. இணையவாசிகளிடம் முதன்முதலில் மிகவும் புகழ்பெற்றது இந்த பிரவுசர். உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்தான் முதலிடம் பெற்றது.

இதில் தனியார் நிறுவனங்கள் பல விளம்பரங்கள் அளித்து தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தின. ஆன்லைன் வர்த்தகமும் முதன்முதலில் செழிப்படைந்தது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மூலமாகத்தான். இதனை அடுத்து கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ், எம்.எஸ்.என், யூசி ப்ரவுசர், ஒபேரா மினி உள்ளிட்ட பல பிரவுசர்கள் உருவாகின.

இதனையடுத்து இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கணினி மொழி புரியாதவர்களுக்குக்கூட எளிதில் அவற்றைக் கற்பிக்கும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது கூகுள் நிறுவனத்தின் குரோம். இதற்காகவே பலர் கூகுள் குரோம்-ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக தாங்கள் உருவாக்கிய பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் செயல்படும். அதன்பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் 2029ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. முதல் வெப் பிரவுசராக அறிமுகமான இன்டர்நெட் எகஸ்புளோரர், உலகம் முழுவதும் கோலோச்சியது. புதிய பிரவுசர்களின் வருகையால் இதன் சேவை மெல்ல மெல்ல சரிவை சந்தித்து.

கடந்த சில ஆண்டுகளாக இறுதியின் விளிம்பில் இருந்த இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடனடி அப்டேட் மற்றும் டவுன்லோடு வேகம் ஆகியவை சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், உலகளவில் முன்னணி பிரவுசராக கூகுள் வளர்ந்துள்ளது.
 
 
Editor's Choice

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் (UFO) புதிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

திரைப்படத் தயாரிப்பாளரும் யுஎஃப்ஒ ஆர்வலருமான ஜெர்மி கார்பெல் (Jeremy Corbell) பகிர்ந்த காட்சிகளில், கலிபோர்னியாவின் கடலில் பறக்கும் பொருள் சென்று மறைந்து போவதைக் காணலாம்.

அமெரிக்க கடற்படை சான் டியாகோ கடற்கரையில் (San Diego’s coast) ஜூலை 2019 இல் இந்த காட்சிகளை படம்பிடித்துள்ளது.  இருண்ட தட்டு போன்ற ஒரு பொருள் கடலுக்கு மேலே சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். வீடியோவில், ராணுவ வீரர்கள் “it splashed”என்று சொல்வதைக் கேட்கலாம்.  

ராணுவ வீரர்களால் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டவை என்பதை என்.பி.சி செய்தியிடம் அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. இது "டிரான்ஸ்மீடியம் (transmedium capable) திறன் கொண்டது". அதாவது காற்று மற்றும் நீர் இரண்டிலும் பயணிக்கக்கூடியது இந்த பறக்கும் தட்டு.  இதனால், இந்த அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள், தண்ணீரில் எவ்வாறு மறைந்தது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

பென்டகனின், அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வு பணிக்குழு (Unidentified Aerial Phenomena Task Force) பறக்கும் பொருளின் மூலத்தை அறிய காட்சிகளை மதிப்பாய்வு செய்யும்.

தண்ணீருக்குள் நுழைந்த அந்த பறக்கும் பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று, கோர்பெல் (Corbell) தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.  அந்த பறக்கும் பொருளைத் தேட ஒரு நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு, பென்டகன் "அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்" (யுஏபி) என்று வகைப்படுத்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது, இது பயிற்சி மேற்கொள்ளும் கடற்படை விமானிகளால் பதிவு செய்யப்பட்டவை. 2004-2005 காலகட்டத்துக்கு இடைப்பட்டது. இந்த வீடியோக்கள் UFOக்கள் மீதான ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.

தற்போது COVID-19 தொற்றுநோய் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அடிக்கடி UFOக்கள் கண்ணில் படுவதாக தேசிய UFO அறிக்கையிடல் மையம் (National UFO Reporting Center (NUFORC)) தெரிவித்துள்ளது. 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,000 UFOக்கள் அதிகமாக காணப்பட்டதாக NUFORC தெரிவித்துள்ளது.

இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

Editor's Choice

உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.   இதுவரை பல்வேறு கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.img style="width: 8px; height: 8px; opacity: 0; display: block; max-width: 444.444px !important; max-height: 250px !important; transition-duration: 0.2s !important; transition-timing-function: ease-in !important; transition-property: max-width, max-height, margin !important;" src="data:;base64,இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 52 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது. இந்த புதிய செயற்கைக்கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. 

புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Editor's Choice

சூரியக் குடும்பத்திற்கு அப்பால், தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகில் என்பதே நெபுலா (Nebula) ஆகும். புவியியலில் முகில் என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறு நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதி. நெபுலா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறபப்ட்ட பெயர். இதற்கு பனிமூட்டம் அல்லது புகை என்ற அர்த்தம் உள்ளது. 

பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின், பகுதியாக இருக்கும் ஓரியன் நெபுலாவின் அற்புதமான புகைப்படத்தை சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா  பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த படம் மிகவும் வைரலாகியுள்ளது. M42 என்றும் அழைக்கப்படும் ஓரியன் நெபுலா 24 ஒளி ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சூரியனை விட சுமார் 2,000 மடங்கு நிறை (Mass) கொண்டது. 

ஓரியன் நெபுலாவின் புகைப்படத்தில் ஒளிரும் நட்சத்திரங்களுடன் வண்ணங்களின் சிதறல்களையும், தூசி மற்றும் வாயுவின் மென்மையான மேகங்களையும் காட்டுகிறது. 

இரண்டு நாட்களில் 1.18 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது. 

Editor's Choice

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துவிட்டது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இல்லாத வாழ்க்கை 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என்பதே பதிலாக இருக்கும்.

இந்த நிலையில், தற்போது வரை இலவசமாக இருந்த சேவைகள், கொஞ்சம் கொஞ்சமாக கட்டண முறைக்கு மாற்றப்படுகின்றன. கூகுளில் புகைப்படங்கள் சேமித்து வைக்கும் வசதியை உதாரணமாகச் சொல்லலாம்.

அதேபோல், ட்விட்டர் அதன் கட்டண சந்தா மாதிரியை எதிர்வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவிட்டர் நிறுவனம் இப்போது ஒரு வருடமாக "ட்விட்டர் ப்ளூ" என்று பரவலாக அறியப்படும் நவீன மாடலில் பணியாற்றி வருகிறது, அது கட்டண சேவையாக இருக்கும்.

டிவிடர் ப்ளூவில் " Bookmarks Collections" என்ற சிறப்பம்சம் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் வெவ்வேறு இடங்களில் புக்மார்க் செய்ய முடியும் - இது ஒரு வகையான கோப்புறை அடிப்படையிலான சேமிப்பு மாதிரி (folder-based storage model) ஆகும்.

நிறுவனம் தனது கட்டண வாடிக்கையாளர்களுக்கு "ட்வீட்களை நீக்குவதற்கான" வாய்ப்பை வழங்க உள்ளது. அடிப்படையில், இது பயனர்கள் பிழைகள் அல்லது முரண்பாடுகளைக் கொண்ட ஒரு ட்வீட்டை விரைவாக நீக்க அனுமதிக்கும். இந்த தெரிவு, ட்வீட்டை இடுகையிட்ட உடனே சிறிது நேரம் வரையில் இருக்கும். இது தனிப்பயனாக்கக்கூடிய அம்சமாக இருக்கும்,

கூடுதலாக, அசல் ட்வீட், பயனர் பதில்கள், மேற்கோள் மறு ட்வீட் (original tweets, user replies, quote retweets) போன்ற அனைத்து விருப்பங்களும் எங்கு பயன்படுத்தப்படலாம் என்பதை பயனர்கள் தீர்மானிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

 ட்விட்டர் சந்தா, அடுக்கு அடிப்படையில் (tier-based) இருக்கும், பயனர்கள் அவர்கள் செலுத்தும் கட்டணத்தின் அடிப்படையில் அம்சங்களை பெற முடியும்.

இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது. கட்டண செயல்பாடு விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றுமா என்பதும் தெரியவில்லை.

பக்கம் 4 / 21