Editor's Choice

நைஜீரியா  அதிபர் முகம்மது புஹாரி, டிவிட்டர், உள்நாட்டு பிரிவினைவாதிகளை எச்சரிக்கும் விதித்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றை,  சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் ‘தவறான நடத்தை' என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

இதை அடுத்து பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அதிபர், ட்விட்டரை அந்நாட்டில் உடனடியாக தடை செய்தார். 

இதையடுத்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள நிறுவனமான கூ , நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது.  கூ (koo) என்பது ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவின் உருவாக்கப்பட்ட சமூக ஊடக தளமாகும்.

ட்விட்டரை   தடைசெய்த பின்னர் கூ சமூக ஊடக தளத்திற்கு, அனுமதி அளிக்கும் நைஜீரிய அரசாங்கத்தின் முடிவு ட்விட்டருக்கு மாற்று தளமாக, கூ வில் நிலையை வலுப்படுத்துகிறது. இந்தியாவில் கூட, ட்விட்டருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில்  கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் கூ (Koo) சமூக ஊடக தளம் சர்வதேச அளவில் கால் பதித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

டுவிட்டர் போன்ற தோற்றத்துடன் காணப்படும், இந்த கூ செயலி மஞ்சள் நிறத்தில்  தோற்றத்தில் காணப்படுகிறது. அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா ஆகியோரால்  உருவாக்கப்பட்ட கூ,  இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு தற்போது கணிசமான அளவில் பயனர்களும் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி பயனர்கள் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது.

Editor's Choice

Chrome பயனர்களுக்கான புதிய அம்சங்களை விரைவில் வெளியிட Google தயாராகிவருகிறது. Chrome 91 புதுப்பித்தலில் தொடங்கி புதிய மேம்படுத்தல்கள் மற்றும் புதிய `பாதுகாப்பான உலாவல்` அம்சங்களைச் சேர்க்கும்.

வரவிருக்கும் அம்சங்கள் பயனர்களுக்கு சிறந்த நீட்டிப்புகளைத் தேர்வுசெய்ய உதவும். அதோடு, தீங்கிழைக்கும் கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தையும் வழங்கும். புதிய அம்சங்களைப் பற்றிய விவரங்களை, கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் (blog post) பகிர்ந்து கொள்கிறது.

Chrome வெப் ஸ்டோரில் (Chrome Web Store) இருந்து புதிய நீட்டிப்பை நிறுவும் போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான உலாவல் பயனர்கள் இப்போது கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள்.

பயனர்கள் நிறுவவிருக்கும் நீட்டிப்பானது, மேம்பட்ட பாதுகாப்பான உலாவலால் நம்பப்பட்ட நீட்டிப்புகளின் பட்டியலின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இது பற்றி பயனர்களுக்கு தெரிவிக்க ஒரு உரையாடல் பாப் அப் (pop up) செய்யப்படும்.

Chrome வெப் ஸ்டோர், டெவலப்பர் நிரல் கொள்கைகளைப் பின்பற்றி ஒரு டெவலப்பரால் கட்டமைக்கப்பட்ட நீட்டிப்புகளைக் கொண்டது. மேம்பட்ட பாதுகாப்பான தேடலைக் கொடுக்கும் என்று பயனர்கள் நம்பலாம்.  

இதேபோல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான உலாவல் (Enhanced Safe Browsing) இப்போது ஆபத்தான கோப்புகளுக்கு எதிராக மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும்.

எனவே, பாதுகாப்பான உலாவல் ஆபத்தானது என்று கருதும் எந்த கோப்பு பதிவிறக்கங்களுக்கும் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். "இன்னும் ஆழமான பகுப்பாய்விற்கு" கோப்பை ஸ்கேன் செய்ய அனுப்பும் திறன் பயனர்களுக்கு இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

"நீங்கள் ஒரு கோப்பை அனுப்ப தேர்வுசெய்தால், குரோம் அதை கூகுள் பாதுகாப்பான உலாவியில் பதிவேற்றும், இது அதன் நிலையான மற்றும் மாறும் பகுப்பாய்வு வகைப்படுத்திகளைப் பயன்படுத்தி உண்மையான நேரத்தில் ஸ்கேன் செய்யும். சிறிது நேரத்தில் குரோம், கோப்பின் பாதுகாப்பு பற்றி தீர்மானித்துவிடும். அது பாதுகாப்பற்றது என்று தீர்மானித்தால், Chrome ஒரு எச்சரிக்கையை அனுப்பும்" என்று கூகுள் கூறுகிறது

பயனர்கள் ஸ்கேனிங் செயல்முறைக்குச் (scanning process) செல்லாமலும் கோப்பைத் திறக்க தேர்வு செய்யலாம்.

Editor's Choice

முன்னணி பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸின் இந்திய தளம் கடந்த ஏப்ரல் மாதம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது, சுமார் 18 கோடி பீட்சா ஆர்டர்களின் விவரங்கள் திருடப்பட்டது.

இந்தநிலையில், டாமினோஸ் தளத்தில் இருந்து திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

டாமினோஸ் இந்தியா தளத்தில் இருந்து சுமார் 13 டிபி டேட்டா திருடப்பட்டு உள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் கட்டண விவரங்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹேக்கர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த தளத்தில் தற்போது வரை 2,89,69,710 தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தளத்தில், வாடிக்கையாளர்களின் முகவரி, ஆர்டர் விவரங்கள் போன்றவை வெளியாகியுள்ளது.

இதனிடையே, வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டது உண்மைதான் என்று, இந்தியாவில் டாமினோஸ் பீட்சாவின் முதன்மை உரிமையை வைத்திருக்கும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான விவரங்களை சேமிப்பதில்லை என்றும், இதனால், கட்டண மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Editor's Choice

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நாம் முகக்கவசங்களை பயன்படுத்துகிறோம். அதிலும், இரண்டாவது அலையின் தாக்கம்  அதிகமாக இருப்பதால், இரண்டு மாஸ்குகளைப் போடுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். 

மாஸ்க் போட்டால்தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு கவசங்கள், குப்பையில் வீசப்பட்ட பின் என்னவாகிறது? அது ஏற்படுத்தும் ஆபத்து என்ன? இதைப் பற்றிய கவலைகள் ஒருபுறம் அதிகரித்துள்ளது.

 முகக்கவசம் மட்டுமல்ல, பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் என தற்போது பிரபலமாகியிருக்கும், அனைவரும் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலின் மாசை அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?
 
மறுசுழற்சி செய்வது தான்… இந்தியாவின் 'மறுசுழற்சி நாயகன்' என்று அழைக்கப்படும் பினிஷ் தேசாய் 28 வயதே ஆனவர். இவர், உயிர் மருத்துவ கழிவுகளை குறிப்பாக ஒற்றை பயன்பாட்டு முகக்கவசங்கள், தலையில் போடப்படும் கவசம், பிபிஇ கிட், கையுறைகள் ஆகியவற்றை செங்கற்களாக மறுசுழற்சி செய்கிறார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் தினசரி சுமார் 609 மெட்ரிக் டன் சாதாரண உயிர் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. தற்போது கொரோனா பரவலால், இந்தியாவில் COVID-19 தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு சுமார் 101 மெட்ரிக் டன் (MT/day) உற்பத்தியாகிறது.  

கழிவுகளாக போடப்படும் பிபிஇ மற்றும் முகக்கவசங்களில் 52 சதவீதம், மூன்று சதவீதம் பைண்டர்கள் மற்றும் 45 சதவீதம் காகித கழிவுகள் சேர்த்து இந்த செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றான. இந்த செங்கற்களில், நீர் புகாது, தீப்பற்றாது, மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது.  

ஒவ்வொரு செங்கலும் 12 x 8 x 4 அங்குல அளவு கொண்டது, ஒரு சதுர அடிக்கு 7 கிலோ பயோமெடிக்கல் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பி-பிளாக் 1.0 உடன் ஒப்பிடும்போது இலகுவானது ஒரு செங்கல் உற்பத்திக்கு 2 ரூபாய் 80 காசுகள் அடக்க விலை ஆகிறது.  

 

Editor's Choice

ரஷ்ய விஞ்ஞானிகள் 24,000 ஆண்டுகளாக ஆர்க்டிக் பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருந்த சிறிய ‘ஜாம்பி’களை மீண்டும் உயிர்ப்பித்து குளோன்களை உருவாக்கி உள்ளனர். பண்டைய காலத்து உயிரினங்கள் உயிர்த்தெழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. ஜூலை 2020ல், விஞ்ஞானிகள் டைனோசர்களின் வயதிலிருந்தே கடலின் அடிப்பகுதியில் செயலற்ற நிலையில் இருந்த நுண்ணுயிரிகளை வெற்றிகரமாக புதுப்பித்தனர்.

சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருந்த முதிர்ச்சியற்ற பழ திசுக்களில் இருந்து 30,000 ஆண்டுகள் பழமையான தாவரங்களை கூட விஞ்ஞானிகள் மீளுருவாக்கம் செய்துள்ளனர். அண்டார்டிகாவில் 1,500 ஆண்டுகளாக பனிக்கட்டியாக இருந்த அண்டார்டிக் பாசியை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர். நூற்புழுக்கள் எனப்படும் சிறிய புழுக்கள் கூடுதலாக இரண்டு சைபீரிய இடங்களில் வரலாற்று நிரந்தரத்திலிருந்து மீட்கப்பட்டு புத்துயிர் பெற்றன. இவ்வாறு வரலாறுகள் இருக்க சமீபத்தில் தற்போது பழங்கால உயிரினம் ஒன்று உயிர்பிக்கப்பட்டுள்ளது.

வாயை வட்டமிடும் சிறிய முடிகளின் சக்கரம் போன்ற வளையத்திற்காக இந்த சிறிய உயிரினங்கள், நுண்ணிய உயிரினங்கள் அல்லது வீல் அனிமல்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன. ரோட்டிஃபர்கள் (rotifers) நன்னீர் சூழலில் வாழும் பலசெல்லுலர் நுண்ணிய விலங்குகள். இவை சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக உள்ளன. இந்த 50 மில்லியன் ஆண்டுகளில் இவை உயிர்வாழ புதிய வழிமுறைகளை கற்று கொண்டுள்ளன என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். நவீன ரோட்டிஃபர்கள் மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட்டில்  உறைந்து பின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கண்டறிந்தனர்.

ஆனால் இப்போது விஞ்ஞானிகள் ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் (2.6 மில்லியன் முதல் சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு வரை) பண்டைய சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்த ரோட்டிஃபர்களை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். இந்த பழங்கால ரோட்டிஃபர்கள் பார்த்தினோஜெனீசிஸ் மூலம் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியது, அவற்றின் மரபணு நகல்களாக இருந்த குளோன்களை உருவாக்கியது. இந்த ஆய்வில், பயன்படுத்தப்பட்ட தற்போதைய மாதிரிகள் வடகிழக்கு சைபீரிய பெர்மாஃப்ரோஸ்ட் ரேடியோகார்பனில் இருந்து மீட்கப்பட்டது.

இவை 24,000 ஆண்டுகளுக்கு முந்தையது. உறைந்த நிலையில் ரோட்டிஃபர் உயிர் வாழ்வதை காட்டிய மிக நீண்ட வரலாறு இதுவாகும். ரஷ்யாவின் புஷ்சினோவில் உள்ள Institute of Physicochemical and Biological Problems in Soil Science-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டாஸ் மலாவின் கூறுகையில், ரோட்டிஃபர்கள் கிரிப்டோபயோசிஸைப் பயன்படுத்த பரிணாமம் அடைந்தன. ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை உறைபனி அல்லது வறண்டுபோகும் நீர்நிலைகளில் வாழ்வதாக குறிப்பிட்டார்.

மேலும் அவை அவற்றின் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி, நிலைமைகள் மேம்படும்போது கிரிப்டோபயோசிஸிலிருந்து மீள உதவும் சேப்பரோன் புரதங்கள் போன்ற சில சேர்மங்களை குவிப்பதாக குறிப்பிட்டார். பூமியின் மிக பழமையான சில உயிரினங்களின் குறிப்பிடத்தக்க உயிர்வாழும் சக்தியை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அவை ஆய்வகத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்ஸிஜன் அல்லது எந்தவொரு உணவும் இல்லாமல் இருக்க கூடும் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Editor's Choice

புதிய விதிகளை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள அமலுக்கு வந்துள்ளன. அதுன்படி, சமூக ஊடகங்கள், அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வெளியிட வேண்டும். புகார்களை பெறவும், நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவில் அதுிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்கு, டுவிட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

புதிய விதிகளில் குறிப்பிட்டு உள்ளபடி புகார்களை பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் உரிய அதிகாரியின் பெயரை டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. டுவிட்டர், பரிந்துரை செய்த குறைதீர்க்கும் அதிகாரி இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் அலுவலக முகவரி, உண்மையில் இந்தியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தின் முகவரி. இது விதிகளுக்கு புறம்பானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79 ன் கீழ் டுவிட்டர் நிறுவனம் விளக்கு அளிக்கப்படாது. விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு கூறியுள்ளது.

பக்கம் 2 / 21