Editor's Choice

ஆந்திராவில் கோயில் மற்றும் சிலைகளை சேதப்படுத்தியதாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள், கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதன் உச்சகட்டமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுவரை மெத்தனமாக இருந்த ஆந்திர அரசு, சிலை உடைப்பு மற்றும் தேர் எரிப்பு சம்பவங்களை கண்டித்தது. மேலும் இதுகுறித்து சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக போலீசார் மாநிலம் முழுவதும் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். 23 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியினர் என்றும் 7 பேர் பாஜகவினர் என்றும் டிஜிபி கவுதம்சவாங் தெரிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவைச் சேர்ந்த பாதிரியார் சக்ரவர்த்தி என்கிற பிரவீன் சக்ரவர்த்தியை காக்கிநாடா போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘காசிப்’ எனும் யூடியூப் சேனலில் சக்ரவர்த்தி சிலநாட்களாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

‘Sylom Blind Centre’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிரவீன் சக்கரவர்த்தி, அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று மதமாற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும், அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு ‘கிறிஸ்து கிராமம்’ என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டே சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது ஒரு தன்னார்வ அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரவீன் சக்கரவர்த்தி குறித்து புகார் அனுப்பியது. இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீன் பேசும் வீடியோ ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டது. அதில் தன்னுடன் 3,642 மதபோதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதுவரை 699 ‘கிறிஸ்து கிராமங்களை’ ஏற்படுத்தி உள்ளதாகவும் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிஐடி போலீசார் கோயில்களை சேதப்படுத்தியதாக பிரவீனை கைது செய்துள்ளனர். இவர் மீது மதக்கலவரம் உண்டாக்க முயன்றதாக 6 பிரிவுகளின் கீழ் சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Editor's Choice

சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், உடனடியாக அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்களில் 3 பேரின் மாதிரிகளை சோதித்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணியாளர்கள் 1600 பேரையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 700 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அதில் யாருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் தனிமைப்படுத்தி இருக்க அந்த தொழிற்சாலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Editor's Choice
காலில்   சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்தேன். ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. 
 
காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால்  சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரின் தேர்தல் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்தும் பிரச்சாரம் செய்ய முடியாததால் கமலின் தீவிர ஆதரவாளர்களும், ரசிகர்களும் உற்சாகம் இழந்துள்ளனர்.
Editor's Choice

இந்தியா மீதான தன் ஆர்வத்தைப் பற்றியும் விருப்பத்தைப் பற்றியும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் சமீபத்திய ஆண்டுகளில் பல முறை ட்வீட் செய்துள்ளார்.

இன்றுவரை எலன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், ஓபன்ஏஐ, நியூரலிங்க், தி போரிங் கம்பெனி, ஜிப் 2, பேபால் ஆகிய எட்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஈலான் மஸ்க் (Elon Musk) உலகின் மிகப் பெரிய செல்வந்தராகிவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமையன்று செய்தி வெளியிட்டன.

உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தில் இருந்து பில் கேட்ஸை பின் தள்ளி, அந்த நிலையை எட்டிவிட்டார் எலோன் மஸ்க். எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்ய அவருக்கு உதவியாக இருந்து சொத்து மதிப்பை உயர்த்தியது அவரது நிறுவனமான Tesla Inc. தான். Tesla Inc-இன் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் உலகின் ஏழாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார்.

Editor's Choice
சீனாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் நச்சு கலந்த ரசாயன பொருட்களுடன் கூடிய குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
இதுபற்றி சிங்குவா பல்கலை கழகத்தினை சேர்ந்த குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், துணிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட கூடிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலிபுளூரோஅல்கைல்ஸ் (பி.எப்.ஏ.எஸ்.) என்ற ரசாயன பொருட்களின் பாதுகாப்பு அளவு பற்றி கணக்கிடப்பட்டது.
 
அவற்றில், 20 சதவீதத்திற்கும் கூடுதலான சீன நகரங்களில் பாதுகாப்பு அளவை கடந்து இந்த வகை ரசாயன கலப்பு காணப்படுகிறது.
 
சீனாவில் தேசிய பாதுகாப்பு தர நிர்ணயங்கள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க ஒழுங்குமுறைகள் அளவுகோலாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது.
 
இதன்படி, கிழக்கு சீனாவின் வூக்சி, ஹேங்ஜவ் மற்றும் சுஜவ் நகரங்களிலும், குவாங்டாங் மாகாணத்தின் போஷான் நகரங்களிலும் அதிகளவு ரசாயன கலப்புகள் உள்ளன. 
 
அந்நாட்டின் வடக்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் இந்த வகை ரசாயன பொருட்களின் அடர்த்தி அதிகம் காணப்படுகிறது.  இதற்கு தீவிர தொழிற்சாலை நடவடிக்கைகள் மற்றும் அதிக மக்கள் தொகை நெருக்கம் ஆகியவை காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
 
இந்த ரசாயன பொருட்கள் மற்றவற்றை விட அதிக ஆபத்து நிறைந்தது.  பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. 

சீனா இந்த வகை ரசாயன பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் மற்றும் நுகர்வோரை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், குடிநீரில் அவற்றின் இருப்புக்கு என வழிகாட்டி நெறிமுறைகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை.
 
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த ரசாயன பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் பெரிய அளவிலான சவால்களை சந்தித்து வருகின்றன.  அந்த வகையில் சீனாவும் குடிநீரை சுத்தம் செய்து, தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாட்டில் இருந்து வெளிவரும் ரசாயன பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Editor's Choice

ஏடிஎம் மட்டுமல்ல, எந்த ஸ்மார்ட் சாதனத்தையும் திறக்க கையைப் பயன்படுத்தத் தேவையில்லை. அப்படியொரு தொழில்நுட்பத்தை இன்டெல் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இதற்கு ரியல்சென்ஸ் ஐடி (RealSense ID) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை உருவாக்க மிக நுட்பமான சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இன்டெல்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பை மிகவும் வலிமையாக்குகிறது. எனவே ஏடிஎம்கள், கியோஸ்க் (Kiosk) மற்றும் ஸ்மார்ட் லாக்கர்களில் (Smart Lockers) பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சாதனம் பயன்படுத்தப்படலாம். இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இன்டெல் இந்த சாதனத்தை சந்தையில் விற்பனைக்காக களம் இறக்கும் என்று தெரிகிறது.  

இது ஐடி திருட்டைத் தடுக்கிறது. பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருட்டுப் போகும் அபாயத்தையும் குறைக்கிறது. இந்த சாதனம் அவ்வப்போது பயனரின் முகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டுபிடிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

அதாவது, ஒரு நபரின் முகத்தில் தாடி அல்லது மீசை இருந்தாலும், இந்த நுட்பம் அந்த நபரின் முகத்தை அடையாளம் காணும். இந்த தொழில்நுட்பத்திற்கு வேறு எந்த நெட்வொர்க்கும் தேவையில்லை என்பது முக்கியமான செய்தி. பயனர்களின் முகம் முழுமையாக குறியாக்கம் செய்யப்படும். இன்டெல் அறிமுகப்படுத்தும் இந்த சாதனத்தின் விலை ரூ.7,300 மட்டுமே.

பக்கம் 53 / 74