Editor's Choice

உடலுக்கு வயதாகும் வேகத்தை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில், ஒரு விந்தையான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த, 50 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குத் தரப்படும் ஒரு மாத்திரையில், 'மெடோலாசோன்' என்ற வேதிப்பொருள் உள்ளது. இதற்கு, மனித செல்களின் சேதாரமடையும் தன்மையை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக, ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மெடோலாசோனை, ஆய்வகத்தில் சில வகை புழுக்களுக்கு கொடுத்த போது, அவற்றின் செல்கள் சேதாரமடையும் வேகம் வெகுவாக குறைந்தது. அதாவது அந்த புழுக்கள் மூப்படையும் வேகம் குறைந்து, இளமை நீடிப்பது தெரியவந்தது.

இதே போன்ற ஒரு மாற்றத்தை, மனிதர்களின் உடலிலும் கொண்டுவர முடியும் என, ஒசாகா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயதாவது ஒரு நோய் அல்ல என்றாலும், வேகமாக மூப்பு எய்தும் வேகத்தை குறைப்பதன் மூலம், மூப்பினால் வரும் பிற உடல்நலக் குறைகளை தவிர்க்க முடியும். மேலும், இளமைத் தன்மையை சற்று நீட்டிக்கவும் முடியும் என்பது கூடுதல் நன்மை.

Editor's Choice

அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட அசாஞ்சேவை நாடு கடத்த கூடாது என்று பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் நிறுவனத்தை கடந்த 2006ல் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்த ராணுவ ரகசிய ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு அவர் வெளியிட்டார். இதனால், அவர் மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 175 ஆண்டுகளை வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரை நாடு கடத்தும் சூழல் ஏற்பட்டதால் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தஞ்சமடைந்தார்.

ஈகுவடார் அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த கோரி தாக்கல் செய்யப்பட வழக்கில் லண்டனில் உள்ள நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த கூடாது என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Editor's Choice

ரேஷன் கார்டு உரிமையாளர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தின் வகைகள், பிரிவுகள், நன்மைகள் போன்றவற்றை அறிய ஆர்வமாக உள்ளனர். 

முன்னுரிமை வீட்டை (PHH), மற்றும் முன்னுரிமை இல்லாத வீட்டை (NPHH) வகைப்படுத்த NFSA தேர்வு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

NFSA ஐ செயல்படுத்துவதற்கு முன்பு, மூன்று வகையான ரேஷன் கார்டு முக்கியமாக மாநில அரசால் வழங்கப்பட்டது. APL, BPL மற்றும் Antyodaya (Antyodaya Anna Yojana) ரேஷன் கார்டு போன்றவை அந்தந்த மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு வண்ணங்களால் வழங்கப்படுகின்றன. NFSA 2013 இன் படி, APL குழு மற்றும் BPL குழு ஆகியவை முன்னுரிமை அல்லாத மற்றும் முன்னுரிமை என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே NFSA உள்நாட்டு தேவைகளுக்கு அவர்களின் வருமானத்தை மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள பிற சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்கிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது

* அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
* விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாரம், அவர் வசிக்கும் இடம் அவரது ஆதார் அட்டையில் குறிப்பிடப்படவில்லை என்றால். புகலிடம் இல்லாத நபர்கள் இருந்தால்,   வசித்ததற்கான ஆதாரம் தேவையில்லை.
* தற்போதுள்ள ரேஷன் கார்டு (விண்ணப்பதாரர் அல்லது வீட்டு உறுப்பினர்களில் ஏதேனும் ரேஷன் கார்டு இருந்தால்)
* எந்த வகை குறிப்பிட்ட சான்றிதழ்
* விண்ணப்பதாரர் எந்தவொரு விலக்கு பிரிவின் கீழும் வரக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் ஒரு உறுதி.
* விண்ணப்பம் சம்பந்தப்பட்ட TSO / DSO / CRO அலுவலகத்தில் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பெறப்படும்.

அந்தியோதயா அன்னயோஜனா (AAY) ரேஷன் கார்டு

AAY திட்டம் நமது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* விதவைகள், தீராத நோயாளிகள், ஊனமுற்றோர், 60 வயதும் அதற்குமேற்பட்ட வயதுடையோர் 


* சமுதாய ஆதரவற்ற அல்லது குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர்கள்.
மலைவாழ் குடும்பங்கள்

* எய்ட்ஸ் நோயாளிகள், தொழுநோயாளிகள், வீடற்ற நகரவாசிகள் ஆகியோருக்கு அந்தியோதாய கார்டுகள் வழங்கப்படுகின்றன

Editor's Choice

அண்மை காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு தீய செயல்கள் அரங்கேறி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகள் மற்றும்  மோதல்களை கண்காணிப்பதற்கென தனியாக தொழில்நுட்ப கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக்கில் ப்ரெண்ட் ரிக்வெஸ்டை இக்னோர் செய்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டகோடா என்ற பகுதியை சேர்ந்த கலீப் பர்க்சீக். இவர் தான் பணியாற்றும்  நிறுவனத்தின் முதலாளி வில்லிஸ்டனுக்கு பேஸ்புக் ரெக்யூஸ்ட் அனுப்பினார். ஆனால் அதனை அவர் இக்னோர் செய்து விட்டார். இதனால் ஆத்திரமுற்ற கலீப், முதலாளிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். இதில்: "என்னுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல் நான் உங்களை கொலை செய்வேன்" என எச்சரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன முதலாளி கலீப் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்நபரை கைது செய்தனர்.

 

Editor's Choice

தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஒரு அரிய நடவடிக்கையாக, கூகிளில் 400 பொறியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து ஒரு ஊழியர் சங்கத்தை உருவாக்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் தடையற்ற சந்தை  மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு முகாம் இப்போது கூகிளில் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டின் துவக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த இயக்கம் 2020 முழுவதிலும் பலத்த ஆதரவைப் பெற்று வந்தது. இப்போது தனது தலைமையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தொழிற்சங்கத்திற்கு ‘ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகிளில் இந்த செயல்பாட்டிற்கு 'கட்டமைப்பு மற்றும் நீட்டித்த நிலைப்பாட்டை’ அளிப்பதே இந்த தொழிற்சங்கத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் செவி ஷா,  ‘மக்கள் போதுமான ஊதியம் பெறுகிறார்களா?’ என்பதைப் போன்ற பணியிட கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், குறிக்கோள் மிகவும் பரந்த அளவில் உள்ளதாக” குறிப்பிட்டார். ஆல்பாபெட்டை பணியாளர் என்ற சக்தி தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையிலிருந்து பிறக்கிறது என்று யூனியன் அறிவிக்கிறது.இதன் திட்டங்கள்...

- பணி நிலைமைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் நியாயமானவையாகவும் இருக்க வேண்டும்.

- துன்புறுத்தல், துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் குற்றவாளிகள் அந்த குற்றங்களுக்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.

- நன்மதிப்புகளுடன் ஒத்துப்போகாத பிராஜெக்டுகளில் பணிபுரிய மறுக்கும் சுதந்திரம் வேண்டும்.

- அனைத்து நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரே விதமான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட தொழிற்சங்க உருவாக்கத்தால் தலைமையுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். கூகிள் நிறுவனத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் பிரச்சனைகளைப் பற்றி இந்த தொழிற்சங்கம் முன்னிலைப்படுத்தக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Editor's Choice

சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா, மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர், கடந்த அக்.,24ம் தேதி, சீன அரசு, தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தொழில் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் 'வயோதிகர்கள் மன்றம்' என்றும், காலத்திற்கு ஏற்ப இவர்கள் மாறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சீன அரசு, அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

சில நாள்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பினைத் தராமல், நயவஞ்சமாக செயல்பட்டிருக்கிறது என்று புதிய விசாரணையைத் துவக்கியது. அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசு இப்படி தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஜாக் மா, வெளியில் வராமல் இருக்கிறார்.

கடந்த நவ., இறுதியில் புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா இடம்பெற வேண்டிய நிலையில், அவருக்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறொரு உயரதிகாரி இடம்பெற்றார். ஜாக் மாவுக்கு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அலிபாபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக பொதுவெளியில் தலைக்காட்டாமல் காணாமல் போயுள்ள ஜாக் மா குறித்த உண்மைகளை சீன அரசு மறைப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

பக்கம் 56 / 74