Editor's Choice

அமெரிக்காவில் ராணுவ துறையில் வழங்கப்படும் விருது 'லிஜியன் ஆப் மெரிட்'. இவ்விருது 1942ல் உருவாக்கப்பட்டது. இரண்டு உலகப்போரிலும் பணியாற்றிய பிரிட்டன் ராணுவ அதிகாரி சியாங் கை- ஷெக்கிற்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக பதவி வகித்த கரியப்பா, இவ்விருதை பெற்ற முதல் இந்தியர். 1950ல் இவருக்கு வழங்கப்பட்டது. பின் இவ்விருதை 1955ல் மூன்றாவது ராணுவ தளபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீநாகேஷ் பெற்றார். மூன்றாவது இந்தியராக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.

Editor's Choice

கேஸ்சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு மிஸ்டு கால் வசதியை இண்டேன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் எனதெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின்சிலிண்டர்களை பயன்படுத்துவோர் சிலிண்டர் புக்கிங்கிற்கு பிரத்யேக போன் நம்பர் தரப்பட்டிருந்தது.அதன்மூலம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் சிலிண்டர்கள் டெலிவிரி செய்யப்பட்டது. இந்நிலையில் மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Editor's Choice

இங்கிலாந்து நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசிவருகிறது. கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில் விமானம், சரக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றால் இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் விமான சேவை ஜனவரி 7ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 8ம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Editor's Choice

ஆதார் அட்டையை பலமுறை புதுப்பிக்கவோ, அதில் மாற்றங்களை செய்யவோ இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதிப்பதில்லை. UIDAI அலுவலகத்தின் மெமோராண்டத்தின் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியைப் பொருத்தவரை, அதில் மாற்றம் தொடர்பான விதிகள் இன்னும் கடுமையானவை. ஆதார் அட்டையில் பிறந்த தேதியை அட்டைதாரரின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் சேர்க்கை நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் (கூட்டியோ அல்லது கழித்தோ) மாற்ற அனுமதிக்கப்படுகிறது. அதே போல், ஆதார் அட்டையில் பாலினத்தையும் ஒரு முறைதான் மாற்ற முடியும்.

உங்கள் பெயரில் சிறிய அளவு மாற்றங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஆதார் அட்டையில் பெயரை மாற்ற முடியும். உதாரணமாக,

- பெயரில் எழுத்துப்பிழை திருத்தம் போன்றவை.

- பெயரின் வரிசையை (Sequence) மாற்ற விரும்பினால்

- குறுகிய வடிவில் (short form) உள்ள பெயரை முழு வடிவில் (full form) ஆக்குவது.

- திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்ற விரும்பினால்.

ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்ற நீங்கள் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைத் தாண்டி ஆதார் அட்டையில் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை மாற்றுவது விதிவிலக்கு கையாளுதல் செயல்முறையின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். அதே நேரத்தில், மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்க எந்த வகையான ஆவணங்களும் தேவையில்லை. ஆனால் ஆதாரில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலைப் புதுப்பிக்கும் முன் OTP கண்டிப்பாக தேவைப்படும்.

 

Editor's Choice

வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம்முதல் இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது துணிவாக பணிகளை மேற்கொண்ட முதல்நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Editor's Choice

ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைக்கான அறிவிப்பு 2020 கடைசி நாளில் ஜியோ இன்று வெளியிட்டுள்ளது. ஜியோ, Jio Happy New Year Offer 2021-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஆண்டு முதல் அதாவது ஜனவரி 1, 2021 முதல், அதன் வாடிக்கையாளர்கள் முன்பு போலவே அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும் என்று ஜியோ கூறியுள்ளது. தற்போதைக்கு, மற்ற நெட்வொர்க்குகளை அழைப்பதற்கான ஒவ்வொரு திட்டத்துடனும் சில IUC நிமிடங்களை Jio கொண்டுள்ளது.  

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஐ.யூ.சியை ரத்து செய்ய ஜியோ முடிவு செய்திருந்தாலும், வரம்பற்ற இலவச அழைப்புக்கான உறுதிமொழியில் உறுதியாக இருப்பதாக ஜியோ தனது புதிய சலுகையைப் பற்றி கூறிகையில் தெரிவித்தது.

ஜியோவின் நான்கு சிறந்த திட்டங்கள்

 இந்த புத்தாண்டில் IUC கட்டணத்தை அகற்றுவதோடு நான்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதில் ரூ. 129, ரூ .149, ரூ 199 மற்றும் ரூ 555, ஆகிய தொகைக்கான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் கால அவகாசம் முறையே 28 நாட்கள், 24 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டங்களின் நன்மைகள் பற்றி பேசும்போது, ​​ரூ .129 க்கான திட்டத்தில் வரம்பற்ற அழைப்போடு 2GB தரவு கிடைக்கும்.

ரூ.149 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1GB டேட்டாவுடன் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். ரூ 199 திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை வசதி கிடைக்கிறது. ரூ. 555 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது.

ஜியோவின் அனைத்து பிளான்களிலும் IUC நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க நீங்கள் பெறும் நிமிடங்கள் ஆகும்.

பயனர்கள் வேறொரு நெட்வொர்க்கில் பேசினால், அதற்கு IUC கட்டணம் வசூலித்த நாட்டின் ஒரே தொலைத் தொடர்பு நிறுவனமாக Jio இருந்தது.  ஏர்டெல்), வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் அனைத்து திட்டங்களிலும் நீங்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அழைக்க முடியும். ஆனால் ஜியோவில் அப்படி இல்லை. இப்போது ஒரு வருடம் கழித்து ஜியோ IUC-ஐ அகற்ற முடிவு செய்துள்ளது.

பக்கம் 58 / 74