- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 161
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் அவற்றை வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்களும் ரூ. 70 வரை கேட்பதால் இல்லத்தரசிகள் கடும் கோவத்தில் உள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அவற்றை வீடு வீடாக கொண்டு சேர்க்கும் ஏஜென்சி ஊழியர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.50 முதல் ரூ.70 வரை கேட்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.
பணம் தராதவர்களுக்கு கேஸ் விநியோகிப்பதில்லை என்றும், தாமதமாக கேஸ் விநியோகிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கேஸ் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இல்லத்தரசிகள் குமுறுகின்றனர்.
2019-2020ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 120 ஆண்டுகளில் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்த விகிதத்தில் அதிகரித்துள்ளது. ஜூலை 2019 முதல் 2020ம் ஆண்டு ஜூலை வரையிலான கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகை 0.35 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11 லட்சம் அதிகமாகும். கடந்த ஜூலை நிலவரப்படி, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 32.9 கோடியாகும்.
கலிபோர்னியா உட்பட 16 மாகாணங்களில் மக்கள் தொகையானது 0.18 சதவீதம் குறைந்து 39 லட்சமாக உள்ளது. கொரோனா தொற்றின் பிரதான மையமாக இருந்த நியூயார்க் நகரம், 1,26,000 பேரை இழந்துள்ளது, மக்கள் தொகையில் 0.65 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அமெரிக்காவில் இந்தளவுக்கு மக்கள் தொகை பெருக்க சதவீதம் குறைந்தது கிடையாது.
கடந்த 1918 - 1919ல் உலகத்தில் ஸ்பேனிஷ் காய்ச்சல் பரவிய காலத்தில் கூட, அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் 0.49 சதவீதமாக இருந்தது.
மூளையின் எல்லையை வரையறுக்கவும் அதன் செயலாற்றலைப் பிரதியெடுக்கவும் விஞ்ஞானம் காலங்காலமாக முயன்று வருகிறது. இந்த முயற்சியின் நீட்சியே இன்று பரவலாகப் பேசப்படும் செயற்கை நுண்ணறிவு. இதன் அடுத்தகட்ட நகர்வாக, மூளையின் செயல்பாடுகளை அறிந்து, அதன் கட்டளைகளை நிறைவேற்றும் நோக்கில், பன்றியின் மூளையினுள் ஒரு கணினி சிப்பைத் தனது நிறுவனம் பொருத்தியிருப்பதாக இலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
யார் இந்த இலன் மஸ்க்?
நியுரோ லிங்கின் நோக்கம்
மூளைக்கும் இயந்திரத்துக்கும் இடையே வயர்லெஸ் இணைப்பை உருவாக்கும் நோக்கில், 2016-ல் நியுரோ லிங்க் நிறுவனத்தை இலன் மஸ்க் தொடங்கினார். பார்வை குறைபாட்டுக்குக் கண்ணாடியைப் பயன்படுத்துவதுபோல் ஞாபகமறதி, கேட்கும் திறன் இழப்பு, பார்வை இழப்பு, முடக்குவாதம், பக்கவாதம், மனச்சோர்வு, தூக்கமின்மை, அதிகப்படியான வலி, வலிப்பு நோய்கள், பயம், பதற்றம், போதைக்கு அடிமையாதல், மூளை சேதம் உள்ளிட்ட மூளையின் குறைபாடுகளை அகற்றும்விதமாக ஏதேனும் கருவியை மூளையினுள் பொருத்த முடியுமா என்று ஆராய்வதே நியூரோ லிங்க் நடத்தும் ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம்.
மூளைக்குள் கணினி
ஆகஸ்ட் 29 அன்று அவர் பங்கேற்ற நேரலையில், கெர்ட்ரூட் எனும் பன்றியை எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அந்தப் பன்றியின் மூளையில், ஃபிட்பிட் கருவியை ஒத்த ஒரு கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு நாணயத்தின் அளவை உடைய அந்தக் கணினி சிப், நுண்ணிய கம்பிகளின் மூலம் மூளையுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த லிங்க் சிப்களை மூளையில் பொருத்துவதன் மூலம், வருங்காலத்தில் நமது நினைவுகளைச் சேமித்துவைக்க முடியும். தேவைப்படும் நேரத்தில் அதை மீட்டெடுத்து அசைபோட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மஸ்க்.
எளிதில் பொருத்தலாம், அகற்றலாம்
குறிப்பிட்ட பகுதியில் மயக்கமருந்தைச் செலுத்தி, ஓர் அறுவை சிகிச்சை ரோபோ மூலம் இதை மூளையினுள் எளிதில் பொருத்திவிட முடியும். அதே நேரலையில் டோரதி எனும் மற்றொரு பன்றியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்தப் பன்றிக்குப் பொருத்தப்பட்டிருந்த கணினி சிப், தற்போது அகற்றப்பட்டுவிட்டது என்று மஸ்க் கூறினார். “இந்த நியூரோ லிங்க் கருவியைத் தேவைப்படும் நேரத்தில் மூளைக்குள் பொருத்திக்கொள்ளலாம், தேவையில்லையெனில் அகற்றிவிடலாம். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்பதையே இந்த பன்றிகள் நமக்கு உணர்த்துகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
கற்பனை அல்ல
நியூரோ லிங்கின் கண்டுபிடிப்புகளுக்கும் அதன் அறிவியல் கூற்றுகளுக்கும் அறிவியல் ரீதியாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலன் மஸ்க் வெளியிடவில்லை. அறிவியலைப் பொறுத்தவரை, ஆதாரமற்ற எதுவும் வெறும் கற்பனையாகவே கருதப்படும். அந்த நேரலையில் இலன் மஸ்க் தெரிவித்த கருத்துகள் எதையும் அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், அவருடைய கண்டுபிடிப்புகளை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. வெறும் கற்பனை என்று தொடக்கத்தில் புறந்தள்ளப்பட்ட அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அதன் அபரிமிதமான சாதனைகளும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.
வாகனங்களை பதிவு செய்யும்போது அதில் சட்டப்பூர்வமான வாரிசின் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது வாகன உரிமையாளர் இறந்தால் வாகன பதிவின் போது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள அவரின் வாரிசின் வாகனத்தை பெயருக்கு மாற்றம் செய்யும் நடைமுறை எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கி கணக்கு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றை தொடங்கும்போது வாரிசுகளின் பெயர்கள் ஆவணங்களில் பதிவு செய்யப்படும்போது, வாகனங்களை பதிவு செய்யும்போது, ஏன் வாரிசுகளை பதிவு செய்யக்கூடாது?
90 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை பெறவில்லை என்றால் சட்டப் போராட்டம் நடத்தித்தான் ஆவணங்களை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.
வாகனங்களை லோன் மூலம் வாங்கும்போது தவணையை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கியோ, நிதி நிறுவனமோ வாகனங்களை எடுத்துச்சென்று தங்கள் பெயரில் மாற்றம் செய்ய வழி இருக்கும்போது வாகன உரிமையாளர் தனது வாரிசை வாகனப் பதிவின்போது சேர்ப்பதில் என்ன தவறு உள்ளது?
வாகன உரிமையாளர் மரணமடைந்து 90 நாட்கள் வரைதான் வாகனத்தின் இன்சூரன்ஸ் செல்லும். அந்த 90 நாட்களில் இந்த ஆவணங்களைப் பெற வேண்டும். ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக ஆவணங்களை பெற முடியாது. விபத்து நடந்து 90 நாட்கள் கடந்துவிட்டால் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிடும். இதனால் இன்சூரன்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படும். சான்றுகள் இல்லையென்றால் விபத்தில் பலியாகும் நபர்களின் குடும்பத்தினர் இழப்பீட்டை பெற முடியாது.
வாகன உரிமையாளர் விபத்திலோ அல்லது இயற்கையாகவோ மரணமடைந்துவிட்டால் அவர் பெயரில் பதிவான வாகனத்தின் உரிமையை வாரிசுகளுக்கு மாற்றுவதற்கு வாரிசு சான்றிதழ், வங்கிகளில் இருந்து தடையில்லா சான்று உள்ளிட்ட 9 ஆவணங்கள் தேவைப்படும்.
மாற்றம் என்பது வாழ்க்கைநியதியாகும் அதனடிப்படையில் கடந்த காலத்தை அல்லது நிகழ்காலத்தை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழப்பது உறுதி என ஜான் எஃப். கென்னடி கூறியுள்ளார் . நாம் வாழும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் சகாப்தத்தில், மனிதன் தனது நுண்ணறிவின் வாயிலான கண்டுபிடிப்புகளினால் அவனது வாழ்க்கைத் தரத்தையும் வசதியையும் மேம்படுத்த புதிய இயந்திரங்கள், கணினிகள் , பிற தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கி வருகின்றான். மனிதனின் அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றே செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இந்த AIஐ பற்றி இப்போது காண்போம்.
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்குவதற்காக கணினியை பின்தொடர்வதைத் தவிர வேறொன்றுமில்லை, இது நமது அனுபவத்தையும் திறன்களையும் அதிகரிக்கவும் வளப்படுத்தவும் மனித பகுத்தறிவைப் பயன்படுத்திகொள்கின்றது.இந்த AI இன் இயந்திரங்களை புதிய உளவுத்துறை எனக் கூறலாம். இந்த AI ஆனது நுண்ணறிவு பயன்பாடுகளையும் அது செயல்படுவதற்கானAI இயங்குதளத்தையும் உள்ளடக்கியதாகும். இணக்க தேவைகளுக்கு AI உதவிகரமாக விளங்குகின்றது. மேலும் AI ஆய்வகம் AI மாதிரி செயல்பாடுகள் ஆகியவற்றை தரவு செயலாக்கத்திற்கும் இலக்குகளை அடையவும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. ஆழ்கற்றல், இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், நரம்பியல் வலைபின்னல், கணினியின்முன்னோக்கு, முன்கூட்டிய வழிமுறைகளின் பயன்பாடு , அறிவாற்றலுடைய கணினி ஆகியவை AI ஐப் பொறுத்தவரை மிகமுக்கிய உறுப்புகளாகும்.
AI ஆனது அதிக துல்லியத்துடன் கேட்கும், பார்க்கும், பகுத்தறிந்திடும் திறன்களை கொண்டதாகும். மென்பொருட்களை உருவாக்குவது சாதனங்களை மேம்படுத்துவது, அவற்றை மலிவு விலையில் கிடைக்கசெய்வது ஆகியவற்றின் வாயிலாக மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளைச் செய்வதற்கும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான கருவிகளைத் தனிப்பயனாக்குவதற்குமான சுதந்திரத்தைப் பெறுகிறார்கள். , பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கிடையில் சிறந்த தகவல்தொடர்பினை உருவாக்கி பராமரித்திடஇந்தAIஉதவுகின்றது. அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் தனிப்பயன் பேச்சு மாதிரிகளையம் மைக்ரோசாஃப்ட்டில் மொழிபெயர்ப்பாளரை மேம்படுத்துவதற்கு இந்தAI உதவுகின்றது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான நிகழ்நேர தலைப்புகளின் துல்லியமாக உலக அளவிலான ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு இந்தAI ஆனது மிகமுக்கிய பங்காற்றுகின்றது. ஒரு நிறுவனத்தில்பயனாளர்களின் முகஅங்கீகார மறுசீரமைப்பு, குரல்அங்கீகார மறுசீரமைப்பு தொடர்பாக AI ஐப் பயன்படுத்திகொள்ளலாம். மேலும் இந்த AI ஆனது ஒரு வகையில் தானியங்கி செயல்களில் புதியதொருபுரட்சியாக விளங்குகின்றது
இது இயந்திர கற்பித்தல் பற்றிய கருத்துகளை ஆராய்வதற்கு உதவுகின்றது அதைவிட மென்பொருள் உருவாக்குநர்கள் அல்லது AI நிபுணத்துவத்துடன் கூடிய வல்லுநர்கள் வணிகநடவடிக்கைகளின் நன்மைக்காக ஒரு அறிவார்ந்த அமைப்புக்கு தேவையான மிகவும் சுருக்கமான கருத்தமைகளை வழங்கஇது அனுமதிக்கின்றது. வாடிக்கையாளராகிய நம்முடைய கேள்விக்கு வெளிப்படையாகமிகச்சரியான பதிலை தொடர்புடைய ஆவணங்களிலிருந்து ஒரு பத்தியைப் பிரித்தெடுக்கவும் அதனை இயந்திரமானது வாசிப்பதை புரிந்துகொள்ளக் கூடிய திறனையும்இது கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “நான் எனது நாயை வேலைக்கு அழைத்துகொண்டு வரலாமா?” என்று ஒரு ஊழியர் கேட்டால், உடன் மைக்ரோசாஃப்ட் தேடல் (AI கருவி)ஆனது மனிதவள கையேட்டில் இருந்து பொருத்தமான பதிவிற்கான பத்தியைப் பிரித்தெடுத்து அதை ஒரு தேடல் முடிவாக வழங்கும். இந்த மைக்ரோசாஃப்ட் தேடல்கருவி, கூகிள் தேடல்கருவி ஆகியவை AI இன் அடிப்படையில் செயல்படுபவைகளாகும். இந்த AI இன் வாயிலாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள்மிகச்சிறப்பாக செயற்படுத்தப் படுகின்றன. இயந்திர கற்றல் என்பது AI இன் ஒரு கிளை அமைவாகும், இது முன்பே கட்டமைக்கப்பட்ட குறிமுறைவரிகள் எதுவும் இல்லாமல் இயந்திரங்களுக்கு ஒரு பணியைக் கற்றுக் கொள்ளும் திறனை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த இலக்குகளை அடைய இயந்திரங்கள் தங்கள் மூலோபாயத்தை கற்றுக் கொள்கின்றன. ஆழ்கற்றலானது பெரும்பாலும் நியூரான்கள் அல்லது மூளை செல்களைப் பின்பற்றும் பலவகை நரம்பியல் வலைபின்னல்களை சாத்தியமாக்கு-கின்றது.
சாட்பாட்கள் AI இன் பயன்பாட்டிற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த சாட்பாட்கள் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரிக்கும் பணியை செயற்படுத்திடு-கின்றன, மிகமுக்கியமாக இவைதரவுகளின் குவியல்களை மட்டுமல்லாது உற்பத்தி துறையையும் நிர்வகிக்க இது உதவுகின்றன. மேலும் காப்பீடு, வங்கி, உடல்நலம், அரசு சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் இந்த சாட்பாட்கள் உதவுகின்றன. ஒரு சாட் பாட் என்பது கணினியின் உரைவாயிலான கட்டளை அல்லது குரலொலிவாயிலான கட்டளை அல்லது இவ்விரண்டும் சேர்ந்து மனித உரையாடல்களை உருவகப்படுத்தும் ஒரு கணினி நிரலாகும். சாட்டர்பாட் என்பது சுருக்கமா் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அம்சமாகும், இது எந்த பெரிய செய்தி பயன்பாடுகளிலும் உட்பொதிக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்
இந்த AI எவ்வாறு இயங்குகிறது? : AI செயற்படும் முறைகள்(மோடுஸ் ஓபராண்டி):
AI இன் கருத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் ஏற்றப்பட்டிருப்பதால் அதனைபற்றிய தொழில்நுட்ப வாசகங்களை குறிப்பிடுவது அவசியம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதன் செயல்முறையைப் புரிந்து கொள்ளலாம்:
• வரைகலை செயலாக்க அலகுகள் (GPU): இவை AI இன் முக்கிய செயல்பாட்டாளர்-களாகும், இவை மில்லியன் கணக்கான தரவுகளையும் கணக்கீடுகளையும் மிகவிரைவாக செயலாக்குவதற்கு தேவையான மிகப்பெரிய கணினி சக்தியை வழங்குகின்றன.
• பொருட்களுக்கான இணையம்(IOT):, இது இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொருட்களின் அல்லது சாதனங்களின் ஒட்டுமொத்த வலைபின்னலாகும்.இந்த ஐஓட்டிஆனது வரும் ஆண்டுகளில் 100 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அல்லது சாதனங்களை இணைக்கவிருக்கின்றன என கணிக்கப்பட்டுள்ளது.
.நுண்ணறிவு தரவு செயலாக்கம் இது தரவுகளின் விரைவான பல-நிலை பகுப்பாய்விற்கு மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த நுண்ணறிவு தரவுகளின் செயலாக்கம் மேம்படுத்தப்படுகிறது. அரிய நிகழ்வுகள், புரிந்துகொள்ளும் அமைப்புகள் , தனித்துவமான சூழ்நிலைகள் ஆகியவற்றை கணிக்க இதுவே முதன்மை தீர்வாக அமைகின்றது.
.பயன்பாட்டு செயலாக்க இடைமுகங்கள்(API) இவை களை ஒருங்கிணைப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவின் அம்சங்களை ஏற்கனவே உள்ள மென்பொருளில்உட் செருகலாம், அதன் இயல்பான செயல்பாட்டை AI உடன் அதிகரிக்கலாம்.ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள், மைக்ரோசாஃப்ட்நிறுவனத்தின் தேடுபொறி, கூகிள் நிறுவனத்தின் தேடுபொறி இயந்திரமனிதன் ஆகியவை AI இன் சிறந்து எடுத்துக்-காட்டுகளாகும்
இந்தசெயற்கை நுன்னறிவின் பயன் கள்
தகவல் / தரவை அறிவாக மாற்றுவதன் அடிப்படையில் சிக்கலை விரைவாக தீர்வுசெய்வதன் வாயிலாக ஒரு நிறுவனத்தில் உற்பத்தித்திறனை யும் செயல்பாட்டு செயல்திறனையும் அதிகரித்திடமுடியும் .
அறிவாற்றல்மிக்க தொழில்நுட்பங்களிலிருந்து தரவுகள் அவற்றின் உள்ளீடுகளின் அடிப்படையில் வணிக முடிவுகளை மிகவிரைவாக எடுக்கமுடியும்
இந்த செயற்கை நுண்ணறிவானது வாடிக்கையாளர் விருப்பங்களை கணிக்கவும் அவர்களுக்கு சிறந்த, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தையும் வழங்குவதோடு வாடிக்கையாளர்கள் , பங்குதாரர்கள் ஆகியோர்களின் திருப்தியை மேம்படுத்துகிறது
தரமான தடங்களை உருவாக்குவதற்கும் வாடிக்கையாளர் தளத்தை வளர்ப்பதற்கும்இதனுடைய பரந்த தரவுகள்பேருதவியாய் விளங்குகின்றன
திறனுள்ள அமைப்புகள் சரியாக அமைக்கப்பட்டிருந்தால் தவறுகளையும் ‘மனித பிழையையும்’ தவிர்க்கமுடியும்
இந்தAI இன் உதவியுடன் ஒரு நிறுவனத்தின்பணியாளர்துறையானது அந்நிறுவனத்தின் வணிகத்திற்கு உற்பத்தியையும் பணியாளர்களையும் பொருத்தமாக பயன்படுத்தி செலவுகளை சிக்கணபடுத்தமுடியும் .
மேலும் இந்தAI இன் துனையடன் ஒருநிறுவனத்தில் விற்பனை பணியாளர்களுடன் இணைந்து நிறுவனத்திற்கான விற்பனை வாய்ப்புகளை அடையாளம் கண்டுவிற்ணையை அதிகரிப்பதன்வாயிலாக அந்நிறுவனத்தின் வருவாயை அதிகரித்திடலாம்
அதுமட்டுமல்லாது தரவுகளைசேகரித்தல் , தரவுச் செயலாக்கம் புத்திசாலித்தனமான ஆலோசனைகள் ஆகியவற்றை குறிப்பாக நிறுவன செயலாளர்களுக்கு வழங்குவதன் வாயிலாக நிறுவனத்தின்உயர்மட்ட நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளமுடியும் .
வழக்கமான செயல்முறைகளையும் பணிகளையும் தானியங்கியாக செயல்படுமாறு செயற்படுத்துவதன் வாயிலாக நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம் அவ்வாறு சேமித்த நேரத்தை சிறந்த வேலைகளை செய்வதற்கும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும் பயன்படுத்தி தொழில்நுட்ப நிபுணத்துவம் பெறுவது தொழில் சார்ந்த தீர்வுகளை வழங்குவதன் வாயிலாக மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்திடலாம்.
இந்த செயற்கை நினைவகத்தால் உருவாகும் பாதிப்புகள் ஒரு மனிதனைப் போன்ற உள்ளுணர்வுகளைப் AI ஆல் பயன்படுத்தி கொள்ளமுடியாது , மேலும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு ஒரு மனிதனைப் போன்ற பொது அறிவினையும் மனித உணர்ச்சிகளையும் பயன்படுத்தமுடியாது.
AI இல் பெறப்படும் அனைத்து முடிவுகளும் ஒரு மனிதனால் வழங்கப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகும் , அவ்வாறு வழங்கப்பட்ட தரவுகள் தவறாக இருந்தால், பெறப்படும் முடிவுகளும் தவறாக இருக்கவாய்ப்பு உருவாகிடும். செயற்கை நுண்ணறிவானது மனிதனாகிய நம்மை போன்ற எந்தவொரு தனிப்பட்ட நபர் செய்யும் செயல்அனைதையும் ஒருபோதும் செய்யமுடியாத.மேலும் ஒரு மனிதனின் கற்பனையயும் ஆக்கபூர்வமான சிந்தனையையையும் AI ஆல் மாற்ற முடியாது, இருப்பினும் அது விரைவான தரவுகளின் சேகரிப்புகளிலிருந்து , ஒரு மனிதனால் செய்ய முடியாத வேகத்துடன் மிகவிரைவாக பகுப்பாய்வு செய்ய உதவுகின்றது இருந்தாலும் இந்த AI இன் பயனான தானியங்கி செயலாக்கத்தினால் நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம் நம் அனைவருக்கும் உருவாகியுள்ளது
பக்கம் 61 / 74



