Editor's Choice

AI என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கைநுண்ணறிவை(Artificial Inteligent) பற்றிய வரையறையும் அதன் புகழையும் கடந்தகாலங்களில் நாம் விவாதித்தோம் அதனைதொடர்ந்து அதனுடைய தாக்கம் என்னவாகவிருக்கும் எனஅறிந்து கொள்ளும் நிலைக்கு தற்போது வந்திருக்கின்றோம் இந்த செயற்கை நுண்ணறிவானது குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டுவது நல்ல புத்தகங்களை பரிந்துரைப்பதுஎன்பன போன்ற மிகச்சாதாரண பணிகள் மட்டுமல்லாது நம்முடைய மனிதவாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் நீக்கமறநிறைந்து இரண்டற கலந்துபயன்படவிருக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இந்த செயற்கைநுண்ணறிவின்அவ்வாறான பயன்களைபற்றிய ஒரு பறவைபார்வை பின்வருமாறு

செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் மேய்நிகர்உதவியாளர் (Virtual assistants) ஆனது தனிமனிதஉதவியாளராக மட்டுமல்லாமல் வணிக நடவடிக்கைகளிலும் நிறுவனசெயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்துவதற்கான உற்றநண்பனாக விளங்கவிருக்கின்றது அதிலும் நம்முடைய குரலொலி வாயிலாகவே இந்த உதவியாளரை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும்செய்திடுமாறு கட்டுப்படுத்திடும் திறன்கொண்டது

நாம் செல்லுமிடங்களுக்கு நம்முடைய கடனட்டையை அல்லது வங்கிஅட்டையை கொண்டு செல்லத் தேவையில்லைஅதற்குபதிலாக செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் நம்முடைய உருவஅங்கீகாரத்தை (Facial recognition) கொண்டு ATM வாயிலாக நம்முடைய செலவிற்கு தேவையான பணத்தை எடுப்பது , நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, நாம் எங்கிருக்கின்றோம் என்னென்ன செய்கின்றோம் என அனைத்தையும் அறிந்து கொள்வது ஆகிய அனைத்தையும் இதன் மூலம் செயற்படுத்தி கொள்ளமுடியும்

நிறுவனங்களின் தலைமைபொறுப்பிலுள்ளவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டு சமீபத்திய நிகழ்வுகளின் போக்குகளை அறிந்து அதனடிப்படையில் தம்முடைய நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது விரிவுபடுத்துவது மேம்படுத்துவது ஆகிய பணிகளை மிகவிரைவாக எளிதாக செய்து கொள்ளமுடியும்

அதுமட்டுமல்லாது பல்லூடகங்களை கையாளுதல் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவரவர்விரும்பும் வகையிலான விளம்பரங்களை இசைகளை கானொளி காட்சிகளை உருவப்படங்களை அசைவூட்டு படக்காட்சிகளை பயனாளர்கள் பயன்படுத்திடும் சமூகபல்லூடகங்களிலேயே வெளியிடச்செய்திடமுடியும் அதிலும் வியாபாரநிறுவனங்களின் விளம்பரங்களை மிகச்சரியாக வெளியிடமுடியும்

நிறுவனங்களின் வெற்றிக்கும் வளர்சிக்கும் தேவையான சந்தைகளின் ஆய்வறிக்கை, ஒப்பீட்டு அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகளை மிகஎளிதாக இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டுஉருவாக்கி வெளியிடமுடியும் அதிலும் நாம் விரும்பும் பல்லூடகவெளியீடாககூட கிடைக்குமாறு செய்திடமுடியும்

நமக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகத்தையும் ,சிக்கலுக்கான தீர்வையும் இந்த செயற்கை நுண்ணறிவிடம் கேள்வியாக கேட்டவுடன் அதற்கான தீர்வை உடனடி ஆலோசனையாக வழங்கவிருக்கின்றது

இந்த செயற்கை நுண்ணறிவானது மருத்துவத்துறையில் நோயாளிகளின் உடலில் காணும் நோய்களுக்கானஅனைத்து அறிகுறிகளையும் முழுவதுமாகஅலசி ஆராய்ந்து நோய்க்கான மிகச்சரியான மருந்துகளை மிகச்சரியானஅளவிற்கு பரிந்துரை செய்யவிருக்கின்றது அதுமட்டுமல்லாமல் மிகச்சிக்கலான அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவ்வாறான அறுவைசிகிச்சைகளை மிகச்சரியாக செய்வதற்கான மிகச்சிறந்த உதவியாளராக இந்த செயற்கை நுண்ணறிவு விளங்கவிருக்கின்றது

மேலும் மனித படைப்பாற்றலை ஆராய்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்திடும் மனித வாழ்வின் சிறந்ததொரு வாய்பாக இந்த செயற்கை நுண்ணறிவானது விளங்கவிருக்கின்றது . இருப்பினும், பெரும்பாலானபணிகளில் அதிகரித்த தானியங்கி செயல்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என பெரும்பாலானோர் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இ ந்த செயற்கை நுண்ணறிவின்மூலம் பலர் வேலையில்லாமல் இருப்பதாக அநேகர் நம்புகின்றனர், எதுஎவ்வாறு இருப்பினும் எந்தவொருபுதிய கண்டுபிடிப்புகளையும் நம்முடைய மனிதவாழ்வினை மேம்படுத்திடுவதற்கேற்ப நல்வாய்ப்பாக வரவேற்று அதனை மிகச்சரியாக பொருத்தமாக பயன்படுத்தி முன்னேறுவதற்கான வெற்றிபடிகளாக மாற்றிடுவதே சரியான வழிமுறையாகும் என பரிந்துரைக்கப்படுகின்றது.

முதுமுனைவர்.ச.குப்பன்

Editor's Choice

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ-கோபாலா செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசு இலக்கு (Union government Target)

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில், தன்னிறைவு விவசாயத்திற்காக கால்நடைகளை ஊக்குவித்து வருகிறது. அவ்வாறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகத்தை பின்பற்றுவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று மத்திய அரசு தரப்பில் நம்பப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, பிரதமரின் மத்ஸய சம்பத யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana ( PMMSY)) என்றத் திட்டத்தின் கீழ்,  கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்காக இ-கோபாலா செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இ-கோபாலா செயலி (e-Gopala App) என்பது கால்நடை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் கால்நடை உற்பத்தியை அதிகரிக்க எடுக்கக்கூடிய ஒரு தளமாகும்.

 இ-கோபாலா செயலி

இ-கோபாலா செயலியை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து (Google play store)பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இந்த பயன்பாட்டில் பதிவு செய்வதன் மூலம், நீங்கள் 6 விருப்பங்களைக் (6 Choices) காண்பீர்கள். இதில் விலங்குகளின் ஊட்டச்சத்து முதன்மையானது. விலங்குகளின் ஊட்டச்சத்து உணவு பற்றிய தகவல்கள் உங்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும்.

ஆயுர்வேத மருத்துவ நடைமுறை விருப்பத்தில் உங்கள் விலங்குகளின் நோய்கள் மற்றும் சிகிச்சை பற்றிய தகவல்களைப் பெறலாம். எனது விலங்கு ஆதார் விருப்பத்தில், விவசாயிகள் தங்கள் பழைய மற்றும் புதிய விலங்குகள் பற்றிய தகவல்களைக் காணலாம்.
எச்சரிக்கை விருப்பத்தில், விவசாயிகள் தங்கள் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் தேதிகள் குறித்த தகவல்களை தொடர்ந்து பெறுவார்கள்.

ஏற்பாடு செய்யும் விருப்பத்தில், விவசாயிகள் அருகிலுள்ள நோய்த்தடுப்பு முகாம்கள் அல்லது பயிற்சி திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம். விலங்கு சந்தை விருப்பம் விவசாயிகள், செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட விலங்குகளின் விந்து விற்பனை பற்றிய தகவல்களை வழங்குகிறது.

Editor's Choice

குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்பதுஉரை அல்லது குரலொலியை பயன்படுத்தி குழுவிவாதங்களை நடத்தமுடிந்த ஒரு கணினி நிரல்தொடர் அல்லது உட்பொதிந்த செயற்கை நினைவகம் ஆகும் இது ஒரு திறன்மிகுந்த இயந்திரமனிதன் இடைமுக முகவராக அல்லது செயற்கைநினைவகத்துடன் விவாதிப்பவராக செயல்படுகின்றது அதைவிட குரலொலி அல்லது உரை வாயிலாக குழு விவாதங்களை அனுமதிக்க உதவிடும் ஒரு குழுவிவாத இயந்திரமனிதனாகும் இதனை இணையஉலாவியில் அல்லது திறன்பேசியில் பிரபலமான முகநூல் செய்தியாளராக நாம் விரும்பியவாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் பயனாளர் ஒருவர் இதனிடம் கேள்விகளை கேட்கலாம் அல்லது கட்டளைகளையிடலாம் உடன் அதற்கான பதில் செயல் அவ்வாறு கோரிய நபருக்கு இதனிடம் கிடைக்கும் வாடிக்கையாளரை திருப்தி படுத்திடுவதற்கான அல்லது தேவையான தகவல்களை பெறுவதற்கான குழுவிவாத களமாக இது அமைந்துள்ளது இயற்கையான மொழி செயல்பாடுகளின் அடிப்படையில் பொருத்தமான திறவுச்சொற்கள் அல்லது அதைபோன்ற செயல்களை தரவுதளத்திலிருந்து இது பெற்று செயற்படுத்திடு கின்றது இந்த குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) ஆனது விதிகளின் அடிப்படையிலான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்றும் செயற்கை நினைவக அடிப்படையிலான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்றும் இருவகையாக வகைபடுத்தப்பட்டுள்ளது இந்த குழுவிவாத இயந்திரமனிதனை (chatbot) உருவாக்குவதிலும் வழக்கமான பயன்பாடுகள் அல்லது இணைய பக்கங்களை உருவாக்குவதைபோன்றே பலபடிமுறைகளில் உருவாக்கிடலாம்

படிமுறை1முதலில் வாடிக்கையாளர் கோரும் கேள்விக்கான பதிலா அல்லது தேவையான தகவல்களா எவ்வாறு வழங்குவது என திட்டமிடவேண்டும்

படிமுறை2 அடுத்து நாம் பேசும் இயற்கைமொழியை செயற்படுத்திடுவது பதிலை தயார்செய்வது பலமாதிரிகளை நிருவகிப்பது வரைகலை இடைமுகப்பை கையாளுவது ஆகியவற்றினை கட்டமைவு செய்திடவேண்டும்

படிமுறை3 தொடர்ந்து படிமுறை2 இல் கூறியவாறு கட்டமைவுசெய்ததை emulator இல் அல்லதுஇணையத்தில் செயற்படுத்தி சரியாக செயல்படுத்தப் படுகின்றதா வென சரிபார்த்து பரிசோதிப்பது மூன்றாவது படிமுறையாகும்

படிமுறை4 சரியாக செயல்படுகின்றது எனில் இணையத்தின் வாயிலாக அல்லது தரவுமையத்தின் வாயிலாக வெளியிடசெய்வது நான்காவது படிமுறையாகும்

படிமுறை5 அடுத்து Skype, Facebook, WeChat,என்பன போன்ற சமுதாய வலைபின்னலுடன் மிகச்சரியாக இணைத்து செயல்படசெய்வதாகும்

படிமுறை6 இறுதியாக நாம் அவ்வாறு சமுதாய வலைபின்னலுடன் இணைத்து வெளியிட்டபின்னர் அதில் ஏற்படும் குறைநிரைகளை சரிசெய்திடுவதற்கான ஆய்வறிக்கையாகும்

இயற்கைமொழியை புரிந்து கொள்ளுதல் இயற்கைமொழியை செயல்படுத்துதல் ஆகிய இருவழிகளில் இதனை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது இவ்வாறான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்வதால் பின்வரும் பயன்கள் கிடைக்கின்றன இது செயற்கை நினைவகத்துடன் செயல்படுவதால் இடையிடையே நிறுத்தம் செய்திடாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளும் திறன்மிகுந்ததாக விளங்குகின்றது வியாபாரநிலையங்களில் வாடிக்கையாளரின் சிறந்த நண்பனாக விளங்குகின்றது இது கணினிமுதல் கைபேசிவரை அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது

தற்போது நடைமுறையில் IBM Watson conversation service, Microsoft LUIS, API.AI, Recast.AI , wit.AI. ஆகியவற்றில் Botkit எனும் கட்டற்றகுழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதனுடைய இணையமுகவரி https://botkit.ai/ ஆகும்

Slack, Telegram, Microsoft Bot Framework, Nexmo, HipChat, Facebook Messenger, WeChat,போன்றவைகள் BotMan எனும்கட்டற்றகுழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதனுடைய இணையமுகவரிhttps://botman.io/ ஆகும்

Editor's Choice

மனிதர்களுடனான உரையாடல்களை குறிப்பாக இணையத்தில். வாயிலாக நடைபெறும் உரையாடல்களை விவாதங்களை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி நிரல், தொடர்பயன்பாட்டினையே chatbots என அழைப்பார்கள்

அதாவது இணையத்தின் வாயிலாக முகநூல் போன்ற குழுவிவாதங்களை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தை பற்றிய குழுவிவாதமாக கொண்டுசெல்வதை chatbots என க்கூறலாம் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாக மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளது வருகின்ற 2025, ஆண்டிற்குள் 1.25 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இதனுடைய வியாபார பயன்பாடு உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1.அதிகரித்து வரும் வலைத்தளங்கள் மற்றும் கைபேசி பயன்பாடுகள் உயர் நுண்ணறிவு நுகர்வோர் ஈடுபாடுக்கான துரித வேகக் கோரிக்கை. நுகர்வோர் நடத்தை ஆகியவற்றை எளிதாக கொள்கின்றது. 2.இதில் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள். வாடிக்கையாளர்களுக்கான சேவை நடவடிக்கைகளாக உருவாக்கப்படுகின்றது. ஆகியவை இந்த chatbots ஐ நடைமுறைபடுத்திடுவதற்கான முக்கிய காரணிகள்

இந்த chatbots இன் வியாபாரத்திற்கான பயன்கள் பின்வருமாறு

1.வழக்கமான மின்னஞ்சல்கள் செய்திகடிதங்கள் அல்லது சமுதாயவலைபக்கங்களின் வாயிலாக முழுமையான விவரங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு சென்று சேராது ஆயினும் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களை தீர்வு செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரகையேடாக கையடக்க விலையில் இது வியாபார நிறுவனங்களுக்கு பயன்தருகின்றது

2. குறிப்பிட்ட வியாபார நிறுவனம் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எந்தநேரத்திலும் எந்தஇடத்திலும் இதன் வாயிலாக கிடைக்கின்றது

3. வாடிக்கையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்காகவென தனியாக முகவர்கள் உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணியாளர்களை நியமனம் செய்து பயன்படுத்தி கொள்ளாமல் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திடும்போதான செயல்களைநிருவகிப்பதற்காக தனியாக மனித தலையீடு இல்லாமலேயே வாடிக்கையாளர் திருப்தியுறும் சேவைகளை இதன் வாயிலாக நிருவகத்திடமுடியும்

4. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்கனவே ஏதாவதொரு தேவைக்காக நிறுவனத்துடன் தொடர்புகொஂண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற பொருத்தமான சேவையை அவர்கள் விரும்பியவாறு வழங்கபடுகின்றது

5. வாடிக்கையாளரின் ஆழ்ந்த ஈடுபாட்டினால் நிறுவனத்தின் விற்பணை பலமடங்கு உயரஉதவுகின்றது

இப்போதெல்லாம், நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் பணிச்சுமையின் செலவைக் குறைக்க, சிறந்த ஆதரவை வழங்க இந்த செயற்கை நினைவகத்தால் (AI )செயல்படும் முகவர்களை வியாபாரத்தின் வெற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்

Editor's Choice

வாகன ஓட்டிகள் இனி, டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வாகனம் சம்பத்தப்பட்டவைகளை காகித வடிவில் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. இந்த ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருந்து, வாகனப் பரிசோதனையின் போது மொபைல் போனில் காண்பிக்க வழி செய்யும் மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

புதிய திருத்தங்களின் படி, மின்னணு முறையில் சரி பார்க்கக் கூடிய வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களையும், பரிசோதனையின் போது காகித வடிவில் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றின் டிஜிட்டல் வடிவை காண்பித்தால் போதுமானது. எனவே, வாகன ஓட்டிகள் தங்க வசம் ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை இனி, டிஜிட்டல் வடிவில் வைத்திருந்து மொபைலில் காண்பித்தால் போதுமானது. வழக்கமான போக்குவரத்து பரிசோதனைகள் மட்டும் அல்லாமல், வாகனம் தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்யப்பட வேண்டிய குற்றம் தொடர்பான சூழலிலும் இது பொருந்தும். மேலும், போக்குவரத்து மீறல் தொடர்பான மின்னணு செல்லான்கள் அரசின் வலைதளம் மூலம் வழங்கப்படும். எல்லாம் டிஜிட்டல்மயம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் செயல்பாடு மின்னணு முறையில் பதிவு செய்யப்படும். மீறல்கள், நிகழ்ந்த நாள், விசாரணை செய்த அதிகாரி பெயர் உள்ளிட்ட விவரங்கள அரசு தளத்தில் பதிவு செய்யப்படும். இதனால் மறுசோதனை செய்யும் அவசியம் இருக்காது அல்லது வாகன ஓட்டிகள் வீண் தொல்லைக்கு உள்ளாக வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.

டிஜிட்டல் லாக்கர் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காகித வடிவில் வைத்திருக்க வேண்டாம் என்பது வாகன ஓட்டிகளுக்கு ஆசுவாசம் அளித்தாலும், இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பது எப்படி எனும் சந்தேகம் எழலாம். ஆவணங்களின் டிஜிட்டல் வடிவை அரசின் டிஜி லாக்கர் காப்பகம் அல்லது M-Parivahan செயலி மூலம் பராமரிக்கலாம். டிஜி லாக்கர் பெட்டகத்தில் உறுப்பினராகி ஓட்டுனர் உரிமத்தை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். மற்ற முக்கிய ஆவணங்களையும் இதில் டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கலாம். வலைதளா முகவரி: https://digilocker.gov.in/ இதே போல, எம்-பரிவாஹன் ஆப்-லும் டிஜிட்டல் ஆவணங்களை பெற முடியும்.- ஆப் டவுன்லோட் செய்ய: mParivahan


Editor's Choice

தற்போதைய பயன்பாட்டில் Google Assistant, Siri, Alexa ஆகியவைகளும் மைக்ரோசாப்டின் Cortana சாம்சங்கின் Bixby சீனாவின் Baidu’s Duer ஆகிய குரலொலி உதவியாளர்கள் நமக்கு உதவதயாராகஇருக்கின்றனர் இவை செயற்கை நினைவகத்தின் வாயிலாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன இவை பொருட்களுக்கான இணையத்தில் செயல்படும் சாதனங்களில் குரலொலி வாயிலாக அவைகளின் செயல்களை கட்டுபடுத்திடுவதற்காக உதவத்தயாராக இருக்கின்றன இவற்றுள் Google Assistant எனும் உதவியாளரானது ஏறத்தாழ நம்முடைய 80% கேள்விகளை 100% மிகச்சரியாக புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது Cortana எனும் உதவியாளரானதுஏறத்தாழ நம்முடைய 60% கேள்விகளை 85 – 90%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது Alexaஎனும் உதவியாளரானது ஏறத்தாழ நம்முடைய 50% கேள்விகளை 80%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

Siri எனும் உதவியாளரானதுஏறத்தாழ நம்முடைய 40% கேள்விகளை 80%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
இவை களின் சேவைகளும் ஒருங்கிணைப்பும் சிறந்ததாக உள்ளன திறனுடைய வீடுகள் அல்லது பொருட்களுக்கான இணையத்தில் இவை சிறந்து விளங்குகின்றன இவைகள் தற்போது உலகிலுள்ள நாடுகளில் பேசும் மொழிகளுள் ஏறத்தாழ 20மொழிகளை. ஆதரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன

பக்கம் 62 / 74