Editor's Choice

அடுத்த இரண்டு நாளைக்கு Google Pay, PhonePe, Paytm செயலிகள் இயங்காது!! என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு UPI காலை 1 மணி முதல் 3 மணி வரை செயல்படாது என்று இந்திய தேசிய கொடுக்கல்கள் கழகம் (National Payments Corporation of India - NPCI) தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு UPI இயங்குதளம் மேம்படுத்தல் செயல்பாட்டின் கீழ் இருக்கும் என்று பயனர்களுக்கு NPCI தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. "UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க, UPI இயங்குதளம் அடுத்த சில நாட்களுக்கு 1 AM - 3 AM முதல் மேம்படுத்தும் பணியின் கீழ் இருக்கும்" என்று NPCI குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பிட்ட நேரத்தில் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும், சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அந்த நேரத்திற்கு முன்பே தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட NPCI அறிவுறுத்தியுள்ளது. Google Pay, PhonePe போன்ற முக்கிய டிஜிட்டல் தளங்கள் UPI கணினியில் வேலை செய்ய விரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் பல அடுக்கு பாதுகாப்பு அணுகுமுறையை மேம்படுத்துவதன் மூலம் அதன் பாதுகாப்பு தோரணையை மேம்படுத்த NPCI பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளது என்றும் அது குறிப்பிடுகிறது.

தற்போது, 165 வங்கிகள் BHIM UPI இயங்குதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 2020 நிலவரப்படி, NPCI ஆண்ட்ராய்டில் 155.14 மில்லியன் பயனர்களையும், iOS இல் 2.94 மில்லியன் பயனர்களையும் பதிவு செய்துள்ளது.

 

Editor's Choice

கார்பன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் தடுக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.730 கோடி பரிசளிக்கப்படும் என்று உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும், வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் கவலைக்குரிய பிரச்னையாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுவது இப்பிரச்னைக்கு முக்கிய காரணியாகும். தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, படிம எரிபொருட்கள் பயன்பாடு போன்றவற்றால் இவ்வாயுக்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் மின்சார கார்கள் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கார்பன்களை கைப்பற்றி நீக்கும் தொழில்நுட்பம் பற்றி விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

சிறந்த 'கார்பன் கேப்சர்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு பரிசளிப்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் இத்தகவலை வெளியிட்ட சில மணி நேரங்களில் டிவிட்டரில் பல லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்.
 

Editor's Choice

ஆஸ்திரேலியாவில் தங்கள் தேடுதள இயக்கத்தை நிறுத்தவுள்ளதாக கூகிள் நிறுவனம் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ‘நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதில்லை’ என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். 

செய்தி உள்ளடக்கங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால் தனது சர்ச் எஞ்சினின் இயக்கத்தை அந்நாட்டில் நிறுத்திவிடுவதாக கூகிள் அச்சுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யக்கூடிய பல நுட்பங்களுக்கு ஆஸ்திரேலியா விதிகளை உருவாக்குகிறது. அவை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படுகின்றன. இது எங்கள் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் விஷயங்கள் நடக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூகுள் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

இந்த குறியீட்டின் பதிப்பு சட்டமாக மாறினால், ஆஸ்திரேலியாவில் கூகிள் தேடுத்தளத்தின் இயக்கத்தை நிறுத்துவதை விட வேறு வழி தங்களுக்கு இருக்காது என கூகிள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறியதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அவர்கள் சேர்க்கும் மதிப்புக்காகவும், அளிக்கும் பங்கிற்காகவும் செய்தி வெளியீட்டாளர்களின் ஒரு பரந்த மற்றும் மாறுபட்ட குழுவுக்கு அவர்களுக்கான தொகையை அளிக்க கூகிள் தயாராக உள்ளது என சில்வா கூறினார். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள விதிகளில் இணைப்புகள் மற்றும் துணுக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

குறியீட்டின் ஒருதலைபட்சமான அம்சம், கூகிளுக்கு நிர்வகிக்க நினைத்துக் கூட பார்க்க முடியாத நிதி மற்றும் செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். மசோதாவில் செய்யப்படக்கூடிய பல மாற்றங்களை அவர் பரிந்துரைத்தார். இரு தரப்புக்கும் ஏற்ற பாதை ஒன்றை இதில் கண்டறிய முடியும் என்றும் சில்வா தெரிவித்தார்.

இது தவிர, பேஸ்புக்கும் (Facebook) ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தளத்திலிருந்து செய்திகளை அகற்றுவதாகவும் அச்சுறுத்தியுள்ளது. பேஸ்புக் துணைத் தலைவரான சைமன் மில்னர், புதிய விதிகளால் தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் அதிக அளவில் இருக்கும் என கூறினார்.

Editor's Choice

இந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜி.எஸ்.ஆர்.எல்) நிறுவனங்கள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா. இந்நிறுவனம் 5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் சுயவிவரங்களை திருடியது 2018-ல் வெளிச்சத்திற்கு வந்தது. பெரும்பாலான மக்களின் தகவல்கள் அமெரிக்காவிலிருந்து பகிரப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. இந்தியாவில் 5.62 லட்சம் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவல்கள் மூலம் தேர்தலில் ஆதிக்கம் செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தியாவில் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இச்செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்போது பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. 2018 செப்டம்பரில் சிபிஐ., முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தது. அதில் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடட் நிறுவனர், ஒரு செயலியை உருவாக்கி சுமார் 5.6 லட்சம் இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள பக்கங்கள் போன்ற தகவல்களை திருடியது அம்பலமானது.

தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் ஜி.எஸ்.ஆர்.எல் நிறுவனங்கள் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணைகளில் அவர்கள் சேகரித்த தகவல்கள் எந்தெந்த கட்சிகளுக்கு அல்லது தனிநபர்களுக்கு பயன்பட்டது என்பது தெரியக்கூடும்.

Editor's Choice

வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது என்பது அனைவருக்கும் கடினமான வேலை. வீட்டை சுத்தம் செய்வதை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. பெண்களின் வேதனையை உணர்ந்த பன்னாட்டு நிறுவனம் ரோபோட் வாக்குவம் கிளினரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷாவ்மி நிறுவனம் மி ரோபோட் வேக்குவம்-மாப்-பி என்ற பெயரில் வேக்குவம் கிளீனரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தானியங்கி வேக்குவம் கிளீனரை தரையை பெருக்கவும், துடைக்கவும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் போன் ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம். குவாட் கோர் கோர்டெக் ஏ7 பிராசஸர், லேசர் சென்சார் உள்ளது. இதன்மூலம் சுவரிலும் பொருட்களிலும் இடிக்காமல் மூலை முடுக்குகளில் கூட சுத்தப்படுத்தலாம் என்கிறது இந்த நிறுவனம். விலை ரூ.24,999.

இதன் விலையை கேட்டு பெண்கள் மயங்காமல் இருந்தால் சரி.

Editor's Choice

முகக் கவசத்தில் மட்டுமல்ல; லிப்ஸ்டிக்கிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அழகுக்கலை பொருட்களை தயாரித்து வரும், 'லோ ரியால்' நிறுவனம், ஸ்மார்ட் லிப்ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமாக, நாம் ஒவ்வொரு கலர் லிப்ஸ்டிக்கையும் தனித்தனியாக வாங்க வேண்டியதிருக்கும். எங்கே செல்வ தென்றாலும், கொண்டு செல்லும் ஆடைகளுக்கு ஏற்ப, கை நிறைய லிப்ஸ்டிக்குகளை கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால், இந்த சாதனத்தின் மூலம் அந்த சிரமம் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாதனம், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகிறது. இதனால், இந்த ஒரு சாதனம் இருந்தால் போதுமானது, நமக்கு என்ன கலர் தேவையோ அந்த கலரை, தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட, பெயின்ட் நிறுவனங்கள் நமக்கு தேவையான கலரை, அடிப்படை கலர்களிலிருந்து தானாகவே கலந்து தருமே, அது போன்ற தொழில்நுட்பம்தான். இதில் இருக்கும் அடிப்படையான மூன்று வண்ண கேட்ரிஜ்களில் இருந்து, நாமே நமக்கு தேவையான கலரை தயார் செய்து கொள்ள முடியும்.

வண்ணங்களை தேர்வு செய்ய, இதற்கென இருக்கும் செயலியை, போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டரியில் இயங்கும் இதில், ஒரு வாரம் வரை பேட்டரி தாக்குப் பிடிக்கும். சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். புளுடூத் வசதி கொண்ட இதன் விலை, கிட்டத்தட்ட ரூ.25000. கூடுதலாக, மூன்று கலர் கேட்ரிஜ் செட்டின் விலை, ரூ.7,500

பக்கம் 51 / 74