Editor's Choice

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளதாக பிடிஐ   செய்தி வெளியிட்டுள்ளது.

 உத்தராகண்ட் மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளை, சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்திருந்தது.

இந்த முடிவை ஆதரிக்கும் வகையில் பிடிஐ முகமையிடம் பேசிய, உத்தராகண்ட் டிஜிபி அசோக் குமார், சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை தேவை என்று கூறினார். மேலும், பாஸ்போர்ட் சட்டத்தில் ஏற்கனவே உள்ள ஒரு விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆதரவாக மட்டுமே பேசியதாகக் கூறிய அவர், "புதிய அல்லது கடுமையான" விதிமுறை எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்று மேலும் கூறினார்.

"பாஸ்போர்ட் சட்டத்தில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படக் கூடாது என்று ஒரு விதி உள்ளது. நான் அதை அமல்படுத்துவதற்கு ஆதரவாக மட்டுமே பேசியுள்ளேன்" என்று அசோக் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நமது நாட்டின் அரசமைப்பால், தேச விரோத நடவடிக்கைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிராக ஒரு காவல்துறை அதிகாரி என்ற முறையில் நான் எதிராக நிற்கிறேன்."

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிகளின்போது சமூக ஊடகம் பயன்படுத்தப்பட்ட விதம், இந்த முடிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்தவும், பயனர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வலியுறுத்தவும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம்" என்று அவர் கூறினார்.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை மட்டுமே காவல்துறையினர் இதுவரை சோதனை செய்து வரும் நிலையில், இந்த முடிவு புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

Editor's Choice

காலிபணியிடங்கள் : 26


பணி மற்றும் காலியிடங்கள் விவரம் -


பணி : அசிஸ்டெண்ட் டைரக்டர் - 2

பணி : அசிஸ்டெண்ட் டைரக்டர் (புரொடக்ஷன்) - 1

பணி : அசிஸ்டெண்ட் எடிட்டர் - 2
சம்பளம் : மாதம் ரூ. 56,100 - ரூ.1,17,500

பணி : புரொக்ஷன் அசிஸ்டெண்ட்  - 1

பணி : எடிட்டோரியல் அசிஸ்டெண்ட் - 3

பணி : அக்கவுண்டன்ட் - 3

பணி : சீனியர் ஸ்டெனோகிராபர் - 2

பணி : அசிஸ்டெண்ட் - 4

பணி : லைப்ரரியன் - 1

பணி : ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (ஹிந்தி) - 1
சம்பளம் : மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400

பணி : லைப்ரரி அசிஸ்டெண்ட் - 2
சம்பளம் : மாதம் ரூ. 29,500 - ரூ.92,300

பணி : ஜூனியர் ஆர்ட்டிஸ் - 1
சம்பளம் : மாதம் ரூ.25,500 - ரூ.81,100

பணி : டிரைவர் - 3
சம்பளம் : மாதம் ரூ.19,900 - ரூ.63,200

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் சம்பந்தப்பட பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 31.01.2020 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேதர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 இதனை National Book Trust பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு தேசிய வங்கிகளில் டி.டி.யாக எடுத்த செலுத்தவேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : http://inbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Deputy Director (Establishment)
National Book Trust, India.
Nehru Bhavan, 5, Institutional Area, Phase II, Vasant Kunj, New Delhi - 110 070.


மேலும் விவரங்களுக்கு :
https://www.nbtindia.gov.in/writeraddata/jobattachment/monday-january-25-20213-24-34-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment)basis.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்ற சேர கடைசித் தேதி : 14.02.2021

Editor's Choice

தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது.

"நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது.

அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி.

மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.

திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.

ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.

"யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி.

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.

17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.

சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி,  சென்னையில் குடியேறினார்.

எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

"ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி.

நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.

 

Editor's Choice

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Security/ Watchman பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Security/ Watchman
பணியிடங்கள் 200
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.4049/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தில் Consultant பணிகள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு வனத்துறை கவுன்சில் சார்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 ICFRE கல்வித்தகுதி :

  • Finance/ Procurement ஆகிய பாடங்களில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய / மாநில அரசு அமைப்பு / உலக வங்கி உதவித் திட்ட பணிகள் போன்றவற்றில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Editor's Choice

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் புதிய மின்சார கார் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார் நிறுவனமான ஹூன்டாயுடன் இணைந்து இந்த புதிய மின்சார காரை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை ஆப்பிள் நிறுவன ஆய்வாளர் இன்ஜிகோ உறுதி செய்துள்ளார்.

இ-ஜிஎம்பி என்ற அதிநவீன தொழில் நுட்பத்தில் அயோனிக் 5 என்ற மின்சார காரினை ஹூன்டாய் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தொழில் நுடபம் ஆப்பிள் நிறுவன காரிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மின்சார காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 483 கி.மீ., வரை பயணிக்கலாம் என்று ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி மூலம் 18 நிமிட நேரத்தில் 80 சதவீத சார்ஜினை எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்ட முடியும் எனவும், அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Editor's Choice

ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது, வீடியோவை அணைக்காமல், வழக்கறிஞர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது..!

கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. மிகவும் பயனுள்ள இந்த தொழில்நுட்பம், சிலரின் அஜாக்கிரதையால், பெரும் சர்ச்சையும் உருவாக்க தவறவில்லை.

பெரு நாட்டில் நடந்த ஒரு சம்பவம், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பெரும் அவமானமாக மாறி உள்ளது. பெருவில், ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதம் முடிந்தததும், வக்கீல் லாஸ் டி சஞ்சாமயோ தனது வீடியோவை ஆப் செய்ய மறந்து விட்டார்.

பின் தனது அறையில், பெண் ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டார். கேமராவை அணைக்காமல், அது விர்ச்சுவல் மீட்டிங் மற்றும் TV-யில் நேரலையாக ஒளிபரப்பானது. இதனால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தனர். மொபைலில் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் சைலன்டில் போட்டிருந்ததால், செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் உடனடியாக, வழக்கு விசாரணையை நீதிபதி முடித்து கொண்டார். இதனையடுத்து அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

கோர்ட்டின் புனிதத்தையும், வக்கீல் தொழிலின் கண்ணியம் மற்றும் மரியாதையையும் சஞ்சாமயோ கெடுத்துவிட்டதாக நீதிபதி குற்றம்சாட்டினார். அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சாமயோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பார் கவுன்சிலும் அறிவித்துள்ளது. நாட்டிற்கே களங்கம் விளைவித்ததாக, பெரு அரசும் விசாரணையை துவக்கி உள்ளது. அவர் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண், அவரிடம் வழக்கு ஒன்றிற்காக வந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

பக்கம் 46 / 74