- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 152
பீருக்கு பதிலாக தயிர் குடியுங்கள் என பொதுமக்களிடம் ஐடியா கொடுத்த அதிபருக்கு எதிராக மதுக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீருக்கு பதிலாக தயிர் குடியுங்கள் என பொதுமக்களிடம் ஐடியா கொடுத்த அதிபருக்கு எதிராக மதுக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் எங்கெங்கு குழிகள், ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன என்பதை கூட சொல்லும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும் கூகுள் மேப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் குறிப்பிட்ட இடத்தை அடைய எந்த வழியில் சென்றால் விரைவில் செல்லலாம் என்பதை அறியலாம். ஆனால் சில சமயம் நாம் திருமண மண்டபத்திற்கு வழி கேட்டால் கூகுள் மேப் சுடுகாட்டிற்கு வழிகாட்டி விடுகிறது.
இந்நிலையில் ரோடுகளின் தன்மை, அதற்கு தீர்வு காணும் வண்ணம் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Intents Mobi நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நாம் செல்லும் பாதைகளில் உள்ள குழிகள், வேகத்தடைகள், கழிப்பறைகள், போக்குவரத்து நிலை, உணவகங்கள் ஆகியவற்றை அறியலாம்.
இது பயனர்களின் தனிப்பட்ட தரவை சேகரிக்காது என்பதால் அனைவரும் இதனை தயக்கமின்றி பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண் நண்பரை கொன்று, அவரை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர பெண்..! அதிர்ச்சி சம்பவம்
30 வயதான அந்த பெண், தன்னை விட வயது குறைந்த இளைஞர் உடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்து வந்தார். அவன் , தன்னை திருமணம் செய்துகொள்வான் என்று நம்பியிருந்தவளுக்கு, அவனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள். தன் எதிர்காலமே இவன் தான் என்று நினைத்திருந்த அந்த பெண், தனது ஆண் நண்பரை பழிவாங்க நினைத்தாள்.
அதற்காக நேரம் குறித்து காத்திருந்தாள். ஒருநாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ஆண் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தாள். அவனின் உடலில் இருந்து சில பாகங்களை எடுத்து பஹ்ரைன் நாட்டின் பிரபல உணவான மச்போ சமைத்தார். இது இந்தியாவின் பிரியாணி போன்றது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உணவை, ஆண் நண்பர் வேலை செய்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர்களுக்கு விருந்து ஆக்கி அந்த பெண் மகிழ்ச்சி அடைந்தார்.
தங்களது மகன் மாயமான நிலையில், அவனது பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், தனது ஆண் நண்பரை கொன்று, நண்பர்களுக்கு விருந்து படைத்த கொடூர நிகழ்வு, வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ போலீசார், அந்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில், அவளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இனி எளிதாக ஓட்டுநர் உரிமம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்தில் அமல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ள அறிவிப்புகள் பொது ஆலோசனைக்காக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் நபர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.
வரைவு அறிவிப்பில் பொதுமக்களின் ஆலோசனைப் பெற்ற பிறகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, 206 கோடி ரூபாயில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் புறநகர் பகுதி வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக, பெருங்களத்துார் உள்ளது.தொழில் வளர்ச்சி மற்றும் ஐ.டி., நிறுவனங்களால், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்தபடி உள்ளது.கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், புறநகர் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் நின்று செல்லவும், பெருங்களத்துாரில், தனியாக நிறுத்தம் உருவாக்கப்பட்டது.
அதன்பின், இரும்புலியூர் பாலம் முதல் வண்டலுார் வரை, வெளியூர் செல்லும் ஆம்னி மற்றும் அரசு பஸ்கள் அணிவகுத்து நிற்பதால், ஜி.எஸ்.டி., சாலையில், நெரிசலுடன் சேர்த்து, விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.இதை தடுக்க, பெருங்களத்துார் சந்திப்பில், புதிய மேம்பாலம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., 2019ல் அடிக்கல் நாட்டினார்.பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின், மீண்டும் பணிகள் வேகம் எடுத்துஉள்ளன.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரம் ரயில்வே மேம்பாலம் போல் இல்லாமல், 'ஓவல்' வடிவில், இந்த மேம்பாலம் அமைய உள்ளது.
மொத்தம், 206 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நடக்கின்றன.திட்டப்படி, புதுபெருங்களத்துார் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள, மேம்பால பணிகளும், இதனுடன் சேர்த்து முடிக்கப்பட உள்ளன.இதற்கான, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ள நிலையில், அந்த பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.சென்னையை பொறுத்தவரை, வட்டவடிவிலான மேம்பாலங்கள், பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன; ஓவல் வடிவிலான மேம்பாலம் கட்டப்படுவது, இதுவே முதல் முறையாகும்.
அடுத்தாண்டு டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. பிரமாண்ட மேம்பால மொத்த நீளம் - 2.7 கி.மீ.,பாலத்தின் மையபகுதி சுற்றளவு - 1,084 அடிதாம்பரம் - செங்கல்பட்டு மார்க நீளம் - 2,952 அடிஅகலம் - 24 அடிசெங்கல்பட்டு - தாம்பரம் மார்க நீளம் - 1,640 அடிஅகலம் - 24 அடிநெடுங்குன்றம் மார்க நீளம் - 1,049 அடிஅகலம் - 45 அடி பீர்க்கன்காரணை மார்க நீளம் - 1,476 அடிஅகலம் - 36 அடிதிட்ட செலவு - ரூ.206 கோடிபோக்குவரத்து எப்படி அமையும்?தாம்பரத்தில் இருந்து...பாலம், ‛ஓவல்' வடிவில் அமைவதால், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள், செங்கல்பட்டு செல்ல, மேம்பாலத்தில் ஏறி, நேரடியாக ஜி.எஸ்.டி., சாலையில் கீழே இறங்கலாம்.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்வதால், மரவள்ளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்தாண்டைவிட நடப்பாண்டு மரவள்ளிக்கிழங்கு நல்ல விளைச்சல் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கும். இது பத்து மாத பயிராகும். பொதுவாக மரவள்ளிக்கிழங்குக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. ஒன்றரை வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதும். ஒரு ஏக்கருக்கு 30 டன் முதல் 40 டன் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் கிடைக்கும். இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு ஆண்டு பெய்த பருவம் தவறிய மழையால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள நிலத்தில் மழைநீர் தேங்க தொடங்கியது. மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் தண்ணீர் தேங்கினால் கிழங்கு நாளடைவில் அழுகிவிடும். இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்து வருகின்றனறர். ஆனால் நடப்பாண்டு மரவள்ளிக்கிழங்கு நல்ல விளைச்சலை தந்துள்ளது.
இதன் காரணமாக கடந்தாண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டாக மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சேகோ ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு 15 ஆயிரத்திற்கு விற்பனையானதால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் சில ஆண்டாக ஒரு டன் 7000 முதல் 8000க்கு தான் விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அதிகம் வரும் நேரத்தில் விலை சரிகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும்.
பக்கம் 44 / 74



