Editor's Choice

பிரிட்டனில் வரலாறு காணாத குளிர் நிலவுகிறது. சில பகுதிகளில் மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பிரிட்டனில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. அங்கு குறிப்பாக லண்டன், பெரமர், அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் உறைபனி போன்ற குளிர் பிரதேசமாக மாறியுள்ளது. அங்கு மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 9.4 பாரன்ஹீட்) என்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் மைனஸ் 20 டிகிரி குளிர் நிலவுவதால், நூற்றுக்கணக்கான வாகன ஊர்திகள் பனியில் மாட்டிக்கொண்டுள்ளன.

இந்த கடும் குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது லண்டனில் பதிவாகியுள்ள மைனஸ் 23 டிகிரி குளிரானது 1995ம் ஆண்டுக்கு பின் அதிகளவு குளிரை பதிவாகியுள்ளது. மேலும், 1955ம் ஆண்டு நிலவிய குளிருக்கு இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Editor's Choice

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த அழகி மானசா..! இரண்டாவது இடத்திறகு உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிக்‌ஷா தொழிலாளியின் மகள் வந்துள்ளார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.
 
விஎல்சிசி பெமினா நடத்தும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் கடந்து ஆண்டிற்கான அறிவிப்பு வெளியானது.
 
மானசாவை அடுத்து அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ரிக்சா தொழிலாளியின்  மகள் ஆவார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மன்யாவைப் பொறுத்தவரை, பல தூக்கமில்லாத இரவுகள் மற்றும் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்து உள்ளது.
 
குஷினகரில் பிறந்த மன்யா தனது பதிவில், கடினமான சூழ்நிலைகளில் வளர்ந்ததாகவும், உணவு அல்லது தூக்கம் இல்லாமல் இரவுகளை கழித்ததாகவும், ஒரு சில ரூபாயைக் காப்பாற்றுவதற்காக மைல்கள் நடந்து சென்றதாகவும் கூறியிள்ளார். புத்தகங்கள் மற்றும் ஆடைகளுக்காக  தான் ஏங்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டம், தனக்கு ஒருபோதும் சாதகமாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
 
23 வயதான மானசா தெலுங்கானா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி. அதோடு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார். மானசா தற்போது நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

 

Editor's Choice

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
 
2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும். அதன் நினைவாகவே இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.
 
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நம்பிக்கை' விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, நேற்று முன்தினம் மாலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு விண்வெளி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வெற்றி! நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அங்கு இது செவ்வாய் வளிமண்டலத்தின் முதல் முழுமையான படத்தை வழங்கும். நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை எட்டியது மூலம் ஐக்கிய அரபு அமீரகம் விண்வெளி அறிவியல் துறையில் உலகளாவிய சாதனையாளர்களின் உயரடுக்கு பட்டியலில் இணைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
 
இதுதவிர சீனா அனுப்பிய விண்கலமும், அமெரிக்கா அனுப்பிய விண்கலமும் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றுள்ளன. சீனாவின் விண்கலம் இன்றும், அமெரிக்காவின் விண்கலம் அடுத்த வாரத்திலும் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப்பாதைக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Editor's Choice

தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி-20 மற்றும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விக்கெட்கள் வீழ்த்தி பெரும் சதனை படைத்தார்.

இந்நிலையில்,. இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெறவுள்ளார் நடராஜன்.

வரும் 20 ஆம் தேதி துவங்கவுள்ள விஜய் ஹசாரே தொடரில் நடராஜன் இடம்பெற்றிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ப நடரஜனை அத்தொடரிலிருந்து விடுவிக்குமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தகவல் தெரிவித்தது.

எனவே அவர் தமிழக கிரிக்கெட் சங்கம் நடராஜனை விடுவித்துள்ளது. ஆக்கர் கிங்கான நடராஜன் இதில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Editor's Choice
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
லண்டன்,
 
உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.
 
வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்துதான். அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
 
அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு  நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
 
இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.
Editor's Choice

தள்ளாத வயதிலும் இசை மீது கொண்ட ஆர்வத்தால் ஆல்பம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் மூதாட்டி  வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 
மனித வாழ்வில் சோகம், காதல், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட இசை ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. பலருக்கு இசை குறித்த பெரிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கூட இசையை கேட்க எந்த புரிதலும் தேவைப்படுவதில்லை. அப்படியாக உலகம் முழுவதும் உள்ள இசை காதலர்களில் ஒருவராக தனது ஆல்பத்தை 106வது வயதில் வெளியிட்டுள்ளார் இசை கலைஞர் கொலெட் மெஸ்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞரான கோலெட் மெஸ் இசை மீது கொண்ட ஆர்வத்தால் முன்னதாக இரண்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது 106 வயதாகும் அவர் பல இடர்பாடுகளுக்கிடையே தனது மூன்றாவது ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் வயதான இசைக்கலைஞரின் ஆல்பமாக அவரது புதிய ஆல்பம் சாதனை படைத்துள்ளது. அவரது இசை மீதான காதலுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பக்கம் 41 / 74