Editor's Choice

நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது பெட்ரோல் - டீசல். இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு பெட்ரோல் - டீசலின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு செய்யப்பட்டதும் ஜூன் முதல், அவற்றின் விலை மெல்ல உயர்ந்து வருகின்றன. அதிலும் கடந்த 10 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.84.77ஆகவும் உள்ளது. கொரோனா தளர்வுகளுக்கு பின் பெட்ரோலுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் இந்த விலை ஏற்றம் இருப்பதாக சொல்கிறார்கள்.

பொதுவாக பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டால் மற்ற பொருட்களின் விலையும் மெல்ல உயர துவங்கிவிடும். இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். சமூகவலைதமான டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங்கில் உள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்த பெட்ரோல் - டீசல் விலையையும், இப்போது உள்ள விலையையும் பட்டியலிட்டு கருத்து பதிவிட்டு வருவதோடு, ஆளும் பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வட மாநிலத்தில் ஒருவர் பெட்ரோல் பங்கு முன்பாக பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டதாக குறிக்கும் விதமாக பேட், ஹேல்மட்டுடன் செஞ்சுரி அடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றும் வைரலாகி உள்ளது.

பலரும் தங்களது கவலைகளை கூட மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். கோஹ்லி செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் இங்கு பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.

Editor's Choice

உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது.

எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள்.

அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா வந்தால் அனுமதியின்றி, துணையின் சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சி ரீதியிலான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர செய்து இழப்பீட்டை கேட்கலாம்.

இதை ஊக்குவிக்க முடியாது. இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் மூன்றில் ஒரு பெண்ணும் ஐந்தில் ஒரு ஆணும் இதில் உடலுறவின்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்கள். இப்போது கலிபோர்னியாவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பாலியல் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

இது போல் திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவதால் பெண் கருத்தரிப்பது நடந்து விடுகிறது. குழந்தை பிறப்பை தடுக்க ஆணுறை பயன்படுத்த சம்மதம் தெரிவிக்கும் பெண்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களும் அதிக இன்பத்திற்காக இது போன்ற விதிமீறலான செயலை செய்கிறார்கள் என்றார்.
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கலிபோர்னியாவில் புதிய சட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் முதல் மாகாணமாக கலிபோர்னியா இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பது பொருளாகும். இந்த வழக்கிற்கு இழப்பீட்டை கூட கேட்க முடியும்.
 
Editor's Choice

தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச் சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்தவகையில் இந்திய கொடி குறியீடு-2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகளுக்குப்பின் இந்த கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது.

பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

Editor's Choice

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி  செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை அடுத்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன. 

புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது. எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.

இந்நிலையில், முக்கிய ஆஸ்திரேலிய ஊடகங்களுடன், இது தொடர்பாக கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  செய்திகளுக்கு  வெளியிட பணம் செலுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஒரு உயர் அரசு அதிகாரி திங்களன்று கூறினார்.

ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அதில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். உலகம் முழுவதும் உன்னிப்பாக இந்த விஷயத்தை கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைடென்பெர்க்கின் அறிக்கைகள், ஆஸ்திரேலியாவின் முக்கிய ஊடக அமைப்புகளான ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்டெயின்மென்ட் போன்றவை இதேபோன்ற ஒப்பந்தங்களை எட்டும் நிலையில் உள்ளன என்பதை தெரிவிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கூகிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் "பெரிய மற்றும் சிறிய" செய்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், "எங்கள் தளத்தில் செய்தி உள்ளடக்கத்தின் வணிக மதிப்பை நிர்ணயிப்பது"  குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

உலகெங்கிலும் பெரிய டிஜிட்டல் தளங்களின் வருகையால் செய்தித்தாள்கள் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

Editor's Choice

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிப்ரவர 21ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை உள்ளது என்பதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் ஆமதாபாத் மாவட்டம் சிங்கர்வா பஞ்சாயத்து தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 47 வயதான கிரினா படேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று பா.ஜ.,வினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கிரினா படேல் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கிரினா படேலின் வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
Editor's Choice

இந்திய, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்களின் பன்முகத்தன்மை அதிகமாகவும் மிதவெப்ப கடலுடன் ஒப்பிடும்போது மீன் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

பருவகால மாற்றத்தால் ஏற்படும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வெப்பமண்டலத்தில் வாழும் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. ஒரு சுண்டு விரல் அளவு இருக்கும் நெத்திலி மீனில் இருந்து, மனிதர்களைவிட பெரிதாக வளரும் சுறா மீன்வரை அனைத்து மீன் வகைகளும் ஒரு சில காலகட்டங்களைச் சார்ந்தே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

கரைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கரைப் பகுதியில் உணவு தேட வரும் சில மீன் வகைகள் மிகவும் முக்கியமானவை. இதில் தீவன மீன்களாகத் திகழும் நெத்திலி, மத்தி, பொருவா போன்ற சிறிய மீன் இனங்கள் கடல் உணவு சங்கிலியின் பகுதியாக மட்டும் இல்லாமல், கரையை ஒட்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் முக்கிய உணவுப் பொருளாகவும், அவர்களுக்குத் தினப்படி வருமானத்தை ஈட்டித்தருபவையாகவும் உள்ளன. சொந்த நாட்டு மீன்களைப் பற்றி ஆழ்ந்து ஆராயாமல், கண்மூடித்தனமாக மேற்கத்திய நாடுகளில் கண்டறிந்த மீன்பிடி அறிவியலையே பயன்படுத்திவருகிறது.

வெப்பமண்டலக் கடலின் மீன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, மீனவ மக்களும் வெவ்வேறு முறைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றர்.

ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது கடல்ஓசை எப்எம். “இரு நாடுகளின் கடல் எல்லையில் அமைந்திருக்கும் பாக் நீரிணை பகுதியில் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பதைத் தடை செய்ய இந்தியத் தரப்பில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை பிரதிநிதிகளிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.” என்ற வானொலி பண்பலை. மீனவர்களின் மேம்பாட்டுக்காக பாம்பன் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் நேசக்கரங்கள் என்ற அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வானொலி ஒலிபரப்பை, கடலுக்குள் சுமார் 17 நாட்டிகல் வரை கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

பக்கம் 36 / 74