Editor's Choice

நாசாவின் பர்சிவரன்ஸ் ரோவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் செவ்வாய் கிரகத்தின் ஒரு பரந்த பள்ளத்தின் பரப்பில் வெற்றிகரமாக இறங்கியது. மேம்பட்ட வானியல் உயிரியல் ஆய்வகமான இந்த ரோவர் பின்னர் செவ்வாய் கிரகத்தின் படங்களை அனுப்பியது.

வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கெடுத்துள்ள விஞ்ஞானிகளில், இந்திய-அமெரிக்கர் டாக்டர் சுவாதி மோகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் உயர் கட்டுப்பாடு மேம்படுத்தல் மற்றும் ரோவருக்கான தரையிறங்கும் முறைமைக்கு தலைமை தாங்கினார்.

பர்சிவரன்ஸ் ரோவரின் வியத்தகு தரையிறக்கத்தை உலகம் பார்த்தபோது, ​​கட்டுப்பாட்டு அறையில், அமைதியாக, உணர்ச்சிகளை அடக்கியபடி அமர்ந்திருந்த சுவாது மோகன் ஜி.என் & சி துணை அமைப்புக்கும் திட்டத்தின் மற்ற குழுவினருக்கும் இடையில் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.

இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு சுமார் 20 பயணங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவற்றில் பர்சிவரன்ஸுக்கு தனிச்சிறப்பு உண்டு என்றும் நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் தடயங்களைத் தேடுவதற்காக இந்த பணி தொடங்கப்பட்டது.

இந்த ரோபோ வாகனம் ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு விண்வெளியில் பயணித்தது. செவ்வாய் வளிமண்டலத்தை மணிக்கு 12,000 மைல் (மணிக்கு 19,000 கி.மீ) வேகத்தில் துளைப்பதற்கு முன் 293 மில்லியன் மைல்களை (472 மில்லியன் கி.மீ) இது கடந்து சென்றுள்ளது. அதன் பிறகு கிரகத்தின் மேற்பரப்பில் இறங்குவதற்கான அணுகுமுறையை அது தொடங்கியது.

இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற நான்கு ரோவர்களை விட பர்சிவரன்சில் அதிகமான கருவிகள் ஏற்றப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏதோ ஒரு காலத்தில், நீர் பாய்ந்தது என்பதையும், கார்பன் மற்றும் பிற தாதுக்கள் நீரால் மாற்றப்பட்டு வாழ்வின் பரிணாம வளர்ச்சிக்கான முன்னோடிகளாக இருந்தன என்பதையும் அடிப்படைக் கொண்டு இது குறித்த அடுத்த கட்ட ஆய்வுகளை பர்சிவரன்ஸ் மேற்கொள்ளும்.

ஒரு வேற்று கிரக சூழலில் இருந்து மனிதர்களுக்கு நேரடி பயன்பாட்டில் பயன்படும் இயற்கை வளத்தை பிரித்தெடுப்பதற்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெட்டி வடிவ கருவி, செவ்வாய் கிரகத்தில் எதிர்கால மனித வாழ்க்கைக்கான ஆய்விற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Editor's Choice

நியூயார்க் நகரத்திலிருந்து வாரம் ஒருமுறை வெளியாகும் செய்தி இதழ் ‘டைம்’ ஆகும். உலகம் முழுவதும் மிக அதிகமானோரால் படிக்கப்படும் இந்த இதழ் மூலமாக உலகம் முழுவதும் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க கூடிய சிறந்த இளம் தலைவர்கள் 100 பேர் குறித்து பட்டியல் தயார் செய்தது. அதில் 6 பேர் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒரு இந்தியர் மற்றும் ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திர சேகர ஆசாத் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஒரே இந்தியர். இவரைத் தவிர, ஐந்து இந்திய வம்சாவளியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் வழக்கறிஞர் விஜய் கட்டே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நிதி அமைச்சர் ரிஷி சுனாக், 'இன்ஸ்டாகார்ட்' நிறுவனர் அபூர்வா மேத்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அரசு சாரா அமைப்பான கெட் அஸ் பி.பி.இ. யின் செயல் இயக்குனர் மற்றும் டாக்டர் ஷிகா குப்தா அவர்களும், அரசு சாரா அமைப்பான ‘அப்சால்வ்’ அமைப்பின் நிறுவனர் ரோஹன் பவுலுரி ஆகியோரும் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்க கூடிய இளம் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Editor's Choice

பாகிஸ்தானில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும் அந்நாட்டில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பல, நீதிமன்றத்துக்கு வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையைக் கண்டறிய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு ஆட்டாப்ஸி சோதனை மேற்கொள்ளப்படும். தற்போது கைபர் மெடிக்கல் காலேஜ் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பெஷாவர் மாகாணத்தில் நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சாட்சிகளை அளிக்க மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஆட்டாப்ஸி சோதனைக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என தகவல் அளித்துள்ளது. இது அந்த மாகாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய பெண்கள் நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை நாடும் நிலையில் அவர்களிடமே பரிசோதனைக்கு அதிக பணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கிய வழக்குகளில் புகார் அளிப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தானின் செலவுகள் அதிகம். போலீசாரின் வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதுமுதல் பல அரசு சேவைகளுக்கு புகார் அளிக்க வரும் குடிமக்கள் பணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Editor's Choice

அதிகப்படியான தள்ளுபடி, மிகக் குறைந்த விலை நிர்ணயம், சரக்குகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் மின் வணிக நிறுவனமான அமேசான் ஈடுபடுவதால் அவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இது தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அக்கூட்டமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பன்னாட்டு நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரித்து அபராதம் விதிக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் பத்திரிகைக் குறிப்பு 2018-ன் 2-ஆவதுக்கு பதில், சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டாத வகையில் புதிய மின் வணிக கொள்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நாக்பூரில் பிப்., 8 - 10 வரை நடந்த வர்த்தகர்கள் மாநாட்டில், இப்பிரச்னையில் அரசாங்கம் செயலற்று இருப்பதாகவும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானித்தனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள இரு நிறுவனங்களும், தாங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கியே தொழில் செய்வதாக கூறியுள்ளனர். லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் இடையில் வெளிப்படையான மற்றும் திறமையான வழியில் உதவுகிறோம் என பிளிப்கார்ட் தெரிவித்து.

Editor's Choice

காங்கேயத்தில், தேங்காய் களத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில், பணி செய்ய சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டைச் சேர்ந்தவர் வெற்றி - கவிதா, தம்பதியினர்  குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12ம் தேதி காலை, தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தேங்காய் கள நிர்வாகிகள், கவிதாவை மருத்துவமனைக்கு அனுப்பாமல், தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தியதால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பின், தேங்காய் உடைக்கும் பணியை கவிதா செய்து வந்தார்.

தகவலறிந்த சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று, கவிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

''இது குறித்து, சப் - கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Editor's Choice

2021 ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய வீரர்கள் சிலரை வெளியேற்றிவிட்டு, பல புதுமுகங்களை சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். ஏலத்தில் மிகப்பெரிய ஏலதாரர்களில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  சிறந்த வீரர்களாக இருந்தாலும், சில பழைய வீரர்களை விடுவித்துள்ளனர்.

எம்.எஸ். தோனி மற்றும் அவரது துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணியிலேயே தொடர்கின்றனர். கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்களின் சேவை தங்களுக்கு தேவையில்லை என அணி முடிவு செய்துவிட்டது. ஷேன் வாட்சன் (Shane Watson) ஓய்வு அறிவித்திருப்பதால், மற்றொரு வீரருக்கு வாய்ப்பு உள்ளது.  

தற்போது அணியில் உள்ள வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, என் ஜெகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf Du Plessis), ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரான், ரவி ஜடேஜா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஜோஷ் ஹஸ்லவுட், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா, கே.எம். ஆசிப், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி.

கர்நாடக வீரர் K கெளதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு எடுத்துள்ளது.  கேரள அணி வீரர் விஷ்ணு வினோத்யை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனைபோல், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8 கோடிக்கு எடுத்துள்ளது. சேதன் சாகரியாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கரூரு அணி ரூ.4.80 கோடிக்கு  இதனைபோல், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ராஜஸ்தான் ராயல் அணி ரூ.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.  

பக்கம் 32 / 74