Editor's Choice

அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்திலும், அதே மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி அகமாதாபாத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பிங்க் பால் டெஸ்ட் போட்டியான இதில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்ஸில் வெறும் 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களை இழந்து 112 ரன்களுக்கு சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் 6 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களயும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணியும் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து தடுமாறியது. முதல் நாளின் முடிவில் 99 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரூட் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் கைப்பற்றினார்.

இதனையடுத்து 33 ரன்கள் பின்னிலையுடன் 2வது இன்னிஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இன்று இழக்க நேர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போலவே அக்ஸர் பட்டேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் எடுத்தனர். அஸ்வின் மைல்கல் சாதனை ஒன்றை இப்போட்டியில் படைத்தார் 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் 4வது வீரரானார் அஸ்வின்!இதனிடையே 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Editor's Choice

1997-ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் தனிநாடாக செயல்பட பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்தது. அன்றிலிருந்து சீனாவால் பகுதியாகக் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காகை தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருகிறது.

இதனையடுத்து பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு ஹாங்காங் மக்கள் எளிதில் பிரிட்டனுக்கு குடியேற விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இது சீனாவை கொதிப்படையச் செய்தது. பொது இடங்களில் ஒன்றுகூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதி என்ற குற்றம் சாட்டி அவர்களை சீன போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.  கடந்த ஜூன் 2019-ஆம் ஆண்டு துவங்கி 2020-ஆம் ஆண்டுவரை 1,400 வன்முறை சம்பவங்கள் பொது இடங்களில் அரங்கேறியுள்ளன. போராட்ட காலங்களில் சிலர் அமைதி வழியிலும் வேறு சிலர் வன்முறையிலும் ஈடுபட்டு சீன கம்யூனிச அரசை ஹாங்காங்கிலிருந்து விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக பிரிட்டனில் குடியேற சில ஹாங்காங் குடிமக்கள் முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியது. சீனாவின் அராஜகப் பிடியில் வாழ்வதைக் காட்டிலும் பிரிட்டனில் குடியேறுவதை ஹாங்காங்வாசிகள் பலர் விரும்பியதால் தற்போது விசா விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

 

Editor's Choice

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி  செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது. 

முன்னதாக, இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இப்போது சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்களுடன், இது தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதில் கூகிள் மற்றும் பேஸ்புக் காட்டும் ஆர்வத்தை கண்டு மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த போது, பேஸ்புக் ஆஸ்திரேலியாவில் செய்திகளை தனது பக்கங்களில் வெளியிடுவதை நிறுத்தி விட்டது. புதிய விதிமுறையின் கீழ், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஒரு அரசாங்க நடுவர் நிர்ணயிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆகும்.

தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் இப்போது அதன் "ஷோகேஸில்" தோன்றும் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பேஸ்புக் அதன் பக்கத்தில் தோன்றும் "செய்தி" உள்ளடக்கத்திற்கு, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்

"ஆஸ்திரேலியாவில் பொது நலன் சார்ந்த சேவையை வழங்கும் செய்தி ஊடக நிறுவனங்கள்,  வருமானத்தை பெற உதவும் வகையில் அவை உருவாக்கும் உள்ளடக்கத்திற்கு நியாயமான வருமானம் கிடைப்பதை இந்த புதிய சட்டம் உறுதி செய்யும்."

சட்டம் அமல்படுத்தப்பட்ட  ஒரு வருடத்திற்குள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால பொது ஆலோசனையின் பின்னர் உருவாக்கியுள்ள இந்த சட்டம்,  இதேபோன்ற சட்டங்களைத் திட்டமிடும் பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
 

Editor's Choice

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

* பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

* அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும்.

* நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்ட விரோதமான கருத்துகளை சமூக வலைதளங்கள் முடக்கம் அல்லது நீக்க வேண்டும்.

* ஒரு செய்தியை பரப்பும் முதல் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.

* சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும்.

* வாடிக்கையாளர்களின் புகார்களை பெறவும்,விசாரணை நடத்தவும் தனி அதிகாரி ஒருவரை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும்

* சட்டவிரோதம் அல்லது ஆட்சேபனைக்குரிய விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

* விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

* ஒருவரின் கணக்கை நீக்கினால், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

* ஓடிடி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

* நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்கென்று சில வரைமுறைகளும் உள்ளது.

* ஓடிடி தளங்கள் 13+, 16+, வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.

* தவறான தகவலை பரப்பும் முதல் நபர் யார் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Editor's Choice

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதையடுத்து எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை எளிதாக்கி வருகிறார்.

இது அமெரிக்க குடியேறிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஜோ பைடனின் மூதாதையர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர். மூன்று தலைமுறையாக அமெரிக்காவில் வசித்துவரும் பைடன் குடும்பம் எப்போதும் குடியேறிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே ஜனநாயக கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஜோ பைடன் கடந்த 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி பணிசெய்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் முதல் சுயதொழில் முனைவோர்வரை அனைவருக்கும் முந்தைய டொனால்ட் டிரம்ப் அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே..!' என்ற கொள்கை கொண்ட குடியரசுக் கட்சி ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்க அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது ஜோ பைடன் ஆட்சியில் முந்தைய டிரம்ப் ஆட்சியில் நிரந்தர குடியுரிமைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஜோ பைடனின் இந்த முயற்சிக்கு அமெரிக்க சிறுபான்மையினர் அதிக வரவேற்பை அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் குறைந்துள்ளதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் விசா கட்டுப்பாடுகளை ஜோ பைடன் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதீத விசா கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கத் தொழில்துறை மந்தம் அடைவதாக ஏற்கனவே கலிபோர்னியா நீதிமன்றம் முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கும். பாதாமை ஊறவைக்கும்போது அதன் கடினத்தன்மை மென்மையாக மாறிவிடும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். எளிதில் ஜீரணமாகிவிடவும் செய்யும். பாதாமின் வெளிப்புற தோலில் இருக்கும் டானின், ஊட்டச்சத்துகளை உறிஞ்ச விடாமல் தடை செய்யும் தன்மை கொண்டது. பாதாமை நீரில் ஊறவைத்துவிட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். அதனால் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதே சிறந்ததாக கருதப்படுகிறது.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் பாதாம் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதில் உள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
பாதாமை ஊறவைப்பதன் மூலம் அதில் இருக்கும் பைடிக் அமிலத்தையும் குறைக்க முடியும். இந்த அமிலம் கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களை உறிஞ்சுவதற்கு இடையூறாக அமையும். பாதாமில் இருக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பசியை தடுக்கக்கூடியவை. அதனால் சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
 
உடல் பருமன் கொண்டவர்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது நல்லது. பாதாம் கெட்ட கொழுப்பை  குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். பாதாமில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படக்கூடியது. விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். பாதாமில் வைட்டமின் பி 17 அதிகம் உள்ளது. அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்தன்மை கொண்டது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. சிசுவின் குறைபாடற்ற வளர்ச்சிக்கு இது உதவும்.
 
ஒரு கப் தண்ணீரில் தினமும் இரவு 6 பாதாமை போட்டு மூடிவைத்துவிட வேண்டும். காலையில் அதை எடுத்து தோலை நீக்கிவிட்டு நன்றாக மென்று சாப்பிடவேண்டும். தினமும் இந்த வழக்கத்தை தொடரவேண்டும்.

பக்கம் 27 / 74