Editor's Choice

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது.அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. அது அங்கு வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்களை பாதுகாத்து வருகிறது.இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது.இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

Editor's Choice

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேஸ்புக் இன்க், கூகிள் மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான இன்ஃபீபீம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய டிஜிட்டல் கட்டண வலையமைப்பை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு, இந்தியாவின் மத்திய வங்கி புதிய அமைப்பு நிறுவனங்களை (NUE-கள்) உருவாக்குமாறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் ஒரு கட்டண வலையமைப்பை உருவாக்கி, இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சிலால் (NPCI) இயக்கப்படும் அமைப்புக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்க திட்டம் உருவாகியது.

2008 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட NPCI ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது மார்ச் 2019 நிலவரப்படி வங்கிகளை அதன் பங்குதாரர்களாக்கியுள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), Citibank மற்றும் HSBC ஆகியவை அடங்கும். இது வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள், ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் கட்டணங்கள் உள்ளிட்ட சேவைகளின் மூலம் தினமும் பில்லியன் கணக்கான டாலர்களின் பரிமாற்றங்களை செய்கிறது.

பெயரிடப்படாத மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவின் முன்னணி வணிக நாளேடான எகனாமிக் டைம்ஸ், ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபீபீம் தலைமையிலான குழு தங்கள் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கியில் சமர்ப்பிக்கும் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாக கூறியது.

இன்ஃபீபீமின் செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த செயல்முறையின் இரகசியத்தன்மைக்கு நிறுவனம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ரிலையன்ஸ், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இது குறித்த கேள்விகளுகக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

 இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்கள் 2023 ஆம் ஆண்டில் 135.2 பில்லியன் டாலராக உயரக்கூடும் என்று 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அசோசாம்-பிடபிள்யூசி இந்தியா ஆய்வு கூறுகிறது. பேஸ்புக் மற்றும் கூகிள் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. ஜியோ பிளாட்ஃபார்ம்களில் சொந்த பங்குகளை இவை வைத்திருக்கின்றன. இதில் ரிலையன்ஸ் மியூசிக், திரைப்பட செயலிகள் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன.
Editor's Choice

'ஸ்மார்ட் கிளாஸ்' தயாரிப்பில், பேஸ்புக் நிறுவனமும் இறங்கி இருப்பதாக, அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கடந்த ஆண்டு செப்டம்பரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டில், பேஸ்புக்கின், ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு விதமான, ஸ்மார்ட் கிளாஸ்கள் அறிமுகம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் தயாரிப்பு குறித்த அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்பட்டுவிட்ட போதிலும்; ஒரே ஒரு விஷயத்தில் மட்டும், இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது, ஸ்மார்ட் கிளாஸில், முகத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை சேர்ப்பதா, வேண்டாமா என்பது தான். ஏற்கனவே, பயனர்கள் தகவல்கள் விஷயத்தில், பேஸ்புக் நிறுவனத்துக்கு சற்று கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட் கிளாஸ் மீதான நம்பிக்கையை பெற, நிறுவனம் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.

Editor's Choice

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2009, 2014ல்  நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், 2020ல் கொரோனா பரவல் காரணமாகவும் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. இப்போது  மும்பையில் 2ம் கட்ட கொரோனா அலை அதிகரித்து வருகிறது. அதனால் மும்பைக்கு பதில் வேறு நகரத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.     அதேபோல் கொல்கத்தாவிலும் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல்  மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே  தமிழக தேர்தலுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. இந்த 3 நகரங்களை தவிர  ஐதராபாத், பெங்களூரு, ஜெய்பூர், மொகாலி, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில்  லீக் சுற்றுப் போட்டிகளை நடத்தும் யோசனையில் பிசிசிஐ இருக்கிறது. அதே நேரத்தில் பிளே ஆப் போட்டிகளும், இறுதிப்போட்டியும் கட்டாயம் அகமதாபாத்தில் உள்ள மோடி அரங்கத்தில்தான் நடத்தவேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளதாக  கூறப்படுகிறது. 14வது ஐபிஎல் சீசன் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கப்படலாம்  என தெரிகிறது.

Editor's Choice

பஞ்சாப் நேஷனல் வங்கியில்,  ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன...!

பழைய IFSC மற்றும் MICR வேலை செய்யாது. இவற்றை மார்ச் 31 க்குள் மாற்ற வங்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இல்லையென்றால், வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பயன்முறையில் இருந்து பரிவர்த்தனை செய்ய முடியாது. இந்த தகவலை வங்கி தனது ட்விட்டரில் வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை இந்தியன் ரிசர்வ் வங்கியும் (RBI) வெளியிட்டுள்ளது.

பழைய IFSC குறியீடு மற்றும் MICR குறியீட்டை மாற்றுமாறு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையென்றால், பழைய குறியீட்டைக் கொண்ட கணக்கு வைத்திருப்பவர்கள் 31 மார்ச் 2021 முதல் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது.

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா (UBI) ஆகிய இரண்டு அரசுக்கு சொந்தமான வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1 ஏப்ரல் 2020 முதல் PNB-யுடன் இந்த வங்கிகள் இணைந்துவிட்டன. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது PNB-யுடன் இணைந்துவிட்டன. இந்த இணைப்பிற்குப் பிறகு, PNB, இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக மாறியுள்ளது. இதன் பின்னர், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது புதிய காசோலை புத்தகம் மற்றும் IFSC மற்றும் MICR குறியீட்டைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

வங்கி தனது ட்வீட்டில் இதற்கான கட்டணமில்லா எண்ணையும் பகிர்ந்துள்ளது. இந்த எண்ணில் அழைத்து இந்த விவரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெறலாம். இணைப்புக்குப் பிறகு PNB –யில் இணைந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இப்போது புதிய காசோலை மற்றும் புதிய IFSC குறியீட்டைப் பெற வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது.

இது தொடர்பான எந்தவொரு தகவலுக்கும், வங்கியின் கட்டணமில்லா எண்களான 18001802222/18001032222 என்ற எண்களில் அழைக்கலாம். பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பழைய IFSC குறியீடுகள் ஏப்ரல் 1 முதல் இயங்காது என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

Editor's Choice

வீட்டு உபயோக, வர்த்தக காஸ் விலை அதிகரித்துள்ள நிலையில் பில்லுக்கு மேல் எந்தவித கூடுதல் கட்டணமும் கொடுக்க வேண்டாம் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

காஸ் ஏஜென்சீஸ்களில் இருந்து சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேன்கள் சிலர் பில் கட்டணத்திற்கு மேல் தங்களுக்கு என்று தனி கட்டணமாக ரூ.60 வரை வசூலிப்பதால் ஒரு காஸ் விலை ரூ.870 என்றே நுகர்வோர் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த டெலிவரி மேன்களுக்கு ஏஜென்சீஸ்கள் டெலிவரி செய்ய சம்பளம் வழங்கும் நிலையிலும் இவர்கள் தினமும் டெலிவரி செய்யும் ஒவ்வொரு வீட்டிலும் தனி கட்டணம் வசூலிப்பது நியாயம் இல்லை.

இது குறித்து ஏஜென்சீஸ், எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீட்டு, வர்த்தக காஸ் சிலிண்டர் டெலிவரி செலவுக்கும் சேர்த்து பணம் வசூலிப்பதால் பில்லுக்கு மேல் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டாம். கீழ், மாடி வீடுகளில் டெலிவரி செய்தாலும் டெலிவரி மேன்கள் தனி கட்டணம் வசூலிக்க கூடாது. சிலிண்டர் டெலிவரிக்கு முன் தராசில் எடை போட வேண்டும். வீட்டில் ஆள் இல்லையென்றால் போனில் தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது கதவில் டோர் சிலிப் ஒட்ட வேண்டும். பதிவு செய்த 2 நாட்களில் காஸ் டெலிவரி செய்ய வேண்டும். அடுத்தது காஸ் புக் செய்ய 21 நாட்கள் காத்திருக்காமல் உடனே புக் செய்யலாம்.

புதிய காஸ் இணைப்பின் போது ஏஜென்சீஸ்க்கள் காஸ் அடுப்பு, குக்கர் ஸ்டேன்ட், லைட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்க நுகர்வோரை கட்டாயப்படுத்தக்கூடாது. டெலிவரி செய்யும் போது பில் தொகைக்கு மேல் கூடுதல் பணம் கேட்டால், எடை போட்டு காட்டவில்லை என்றால் இன்டேன் 044 - 2433 9236. இந்துஸ்தான் பெட்ரோலியம் 1800 233 3555 / 044 - 2498 5153, பாரத் பெட்ரோலியம் 1800 22 4344, மாநில நுகர்வோர் சேவை மையம் 044 - 2859 2828 எண்கள், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இமெயிலில் புகார் தெரிவிக்கலாம். கூடுதல் தகவல்களை www.consumer.tn.gov.in இணையத்தளத்தில் பெறலாம்.

பக்கம் 25 / 74