Editor's Choice
ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்திய போது அது அவரது 400-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மலம் இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். தமிழகத்தை சேர்ந்த 34 வயதான அஸ்வின் இதுவரை 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 
 
இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் அனில் கும்பிளே (619 விக்கெட்), கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன்சிங் (417 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.
 
அத்துடன் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் (77 டெஸ்டுகளில்) பெற்றார். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 72 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருக்கிறது.
Editor's Choice

வரும் காலங்களில் எந்தவொரு நோய்க்கும் நீங்கள் காப்பீடு கோருவதை காப்பீட்டு நிறுவனங்களால் மறுக்க முடியாது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, இதை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெளிவாக்கியுள்ளது. பிறந்தது முதலே இருக்கும் நோய்களாக இருந்தாலும், அவற்றுக்கும் பாலிசி அளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் இனி மறுக்க முடியாது.

ஒரு நபருக்கு பிறப்பிலிருந்தோ, அல்லது பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி வழங்காத நோய்களோ இருந்தால், அந்த நோய்களுக்கும் காப்பீட்டு நிறுவனம் பாலிசிகளை அளிக்க வேண்டும் என தேசிய காப்பீட்டு அகாடமி தெரிவித்துள்ளது.  மனிதனின் கைகளில் அல்லாத, அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நோய்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியை மறுக்க முடியாது, இந்த விஷயத்தை காப்பீட்டு நிறுவனங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என தேசிய காப்பீட்டு அகாடமி தெரிவித்துள்ளது. பாலிசிதாரர்களை காப்பீட்டிலிருந்து ஒதுக்கி வைப்பது தவறு என்றும் IRDAI கூறியுள்ளது.

இந்த திட்டத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்த மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைத் தொடங்கவும் அது அறிவுறுத்தியுள்ளது. பாலிசியுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைப் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும். பாலிசியுடன் காப்பீட்டாளரின் அல்லது வாடிக்கையாளரின் அனுபவத்தை இது மேம்படுத்தும் என்று IRDAI கூறியது.

பாலிசிதாரர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் காப்பீட்டு தயாரிப்புகளுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவையையும் சேர்க்கவுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும். அதாவது நீரிழிவு நோயாளி எந்த உணவுத் திட்டத்தை பின்பற்ற வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். அவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் வழங்கப்படுவார்கள். நோயாளிகள் சுகாதார பரிசோதனைகளைப் பெறுவதோடு ஆலோசனை வசதிகளும் கிடைக்கும். இவை அனைத்தும் கூடுதல் சேவையில் சேர்க்கப்படும்.

நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதை விட, நோய்களிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, குறைந்தபட்சமாக மருத்துவமனைக்கு செல்லும் வகையில் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஆகிய அம்சங்களில் இனி காப்பீட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் IRDAI கூறியுள்ளது.

கோவிட் -19 இல் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கிளெயிம்களை காப்பீட்டு நிறுவனங்கள் தீர்த்து வைத்துள்ளன. சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் அபாயமும் குறைக்கப்படுகிறது. செய்தியின் படி, சாண்ட்பாக்ஸ் விதிகள் காரணமாக காப்பீட்டில் ஒரு பெரிய அளவிலான புதுமை ஏற்பட்டுள்ளது.

Editor's Choice

அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக திகழ்ந்து வருகிறது என்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகள் குறித்து தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் பிராந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 17-வது இடத்தையும் வகிக்கிறது. இந்த கருத்துக் கணிப்பானது 105 நாடுகளைச் சேர்ந்த 77 ஆயிரம் பேர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குறியீடானது கணினி உள்ளிட்டவற்றை அரசுத்துறைகளில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விரைவான சேவையை ஸ்மார்ட் முறைகளில் வழங்கப்படுவது ஆகும். இந்த தரவரிசையானது கடந்த ஆண்டு இருந்ததைவிட ஐக்கிய அரபு அமீரகம் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகளில் மேலும் முன்னிலை பெற்றுள்ளது.

கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளை அமீரகம் உலக நாடுகளில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமீரகத்தில் வசித்த போது அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அமீரகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை, விமான சேவை என இந்த சேவையானது விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கையாண்ட சிறப்பான நாடுகளில் உலகில் முதல் 15-வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தற்போது 9-வது இடத்தை வகிக்கிறது. கடந்த ஆண்டை விட இது மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உலகின் முதல் 10 நாடுகளை அமீரகம் பெற்றுள்ளது.

அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் இணைப்பு பாலமாக அமீரகம் தொடர்ந்து செயல்படும். இதன் மூலம் ஒவ்வொருவருடனும் இணக்கமான தொடர்பை அமீரகம் கொண்டிருக்கும்.

மேலும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த கலாசார சந்திப்பின் கேந்திரமாக அமீரகம் திகழும். ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக அமீரகம் திகழ்ந்து வருகிறது என துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

மும்பையில், மகன் இறந்த நிலையில், பேத்தியின் கல்விக்காக சொந்த வீட்டை விற்ற, 74 வயது முதியவரின் நிலை, சமூக வலைதளங்களில் பரவியது. பொதுமக்கள் உதவியால், அவருக்கு, 24 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தேஸ்ராஜ், 74, இந்த தள்ளாத வயதிலும் வாடகை ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை காப்பாற்றும் நிலை, தேஸ்ராஜுக்கு ஏற்பட்டது. வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டத் துவங்கினார். இவரது பேத்தி, பிளஸ் 2 தேர்வில், 80 சதவீத மதிப்பெண் பெற்றார்.

டில்லியில், பி.எட்., படிக்க விரும்பிய பேத்திக்கு, கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தேஸ்ராஜ் தவித்தார். தாங்கள் வசித்த சொந்த வீட்டை விற்று, பேத்தியின் படிப்புக்கு பணம் செலுத்தினார். இவரது நிலை அறிந்த சிலர், சமூக வலைதளத்தில், இவரது கதையை பதிவிட்டனர். இந்த வீடியோ, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் தரப்பில் நிதி குவியத் துவங்கியது.

முடிவில், பொதுமக்கள் உதவியால் தேஸ்ராஜுக்கு, 24 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, ''என் பேத்தி அதிக மதிப்பெண் வாங்கிய நாள் முழுதும், பொது மக்களிடம் கட்டணம் பெறாமல் ஆட்டோ ஓட்டினேன். இப்போது கிடைத்துள்ள பணம், என் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும்,'' என்றார்.

Editor's Choice

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யூசுப் பதான் அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட யூசுப் பதான், தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பிப்ரவரி 26ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று யூசுப் பதான் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பரோடாவில் பிறந்த பதான், ஐபிஎல்லில் 174 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

“நான் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், குழுவினருக்கும், முழு நாட்டிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எனக்குக் கொடுத்த முழு ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. எதிர்காலத்திலும் நீங்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதான் தனது ஓய்வு பெறும் செய்தியில் தெரிவித்துள்ளார்.

41 ஒருநாள் போட்டிகளில், அவர் சராசரியாக 27 சராசரியாக 810 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும். இந்தியாவுக்காக 18 டி 20 போட்டிகளில் 236 ரன்கள் எடுத்து 146.58 என்ற ஸ்ட்ரைக் வீதத்தை வைத்திருக்கிறார்.  

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடக்க டி 20 போட்டியில் வெற்றிபெற்ற 2007 டி 20 அணியில் யூசுப் இடம் பெற்றிருந்தார். 38 வயதான யூசுப் பதான் 2011 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Editor's Choice

நாட்டில், 219 கோடி ரூபாய்க்கும் அதிகமான, சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 63 சதவீதம் அதிகரிக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சொத்து ஆலோசனைக்கான 'நைட் பிராங்க் இந்தியா' நிறுவனம், தன் அறிக்கையில்  தெரிவித்துள்ளதாவது : இந்தியாவில், 219 கோடி ரூபாய், அதாவது, 30 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 ஆயிரத்து, 198 ஆக உயரும். அதாவது, 63 சதவீதம் அளவுக்கு உயரும்.

உலகளவில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 5.22 லட்சமாக இருக்கிறது. இதில், இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 6,884. இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள், அதிகளவில் உயர்ந்து வரும் நிலையில், விரைவில், 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக, நாடு உயரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பக்கம் 26 / 74