Editor's Choice

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பேயம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி. இவர் 2000ம் ஆண்டு காலமானார். வீட்டை விற்பதற்காக, இவரது மகன் குமாரசாமி, தந்தையின் இறப்பு சான்றிதழை பெற ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவருக்கு 2000ம் ஆண்டு பிப்ரவரி 30ம் தேதி அழகர்சாமி இறந்ததாக குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை கவனிக்காமல் குமாரசாமி சான்றிதழ்களை வாங்கிச்சென்று விட்டார். இந்த நிலையில் அழகர்சாமியின் பேரன் உதயகுமார், வங்கி கடன் பெறுவதற்காக வாரிசு சான்றிதழை வங்கியில் அளித்தார்.

சான்றிதழைப் பார்த்த வங்கி அதிகாரிகள், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிப்ரவரி மாதத்தில் 30ம் தேதியே இல்லை; இல்லாத ஒரு நாளில், இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறி, கடன் கோரும் விண்ணப்பத்தை நிராகரித்தனர். பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 30ம் தேதி என சான்றிதழ் தவறாக கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.  உலகிலேயே இல்லாத ஒரு தேதியில் ஒருவர் இறந்ததாக தாசில்தார் சான்றிதழ் கொடுத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் இது வைரலாகி வருகிறது.

Editor's Choice

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பெருவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு எச்சரிக்கையும் தண்டனையும் வழங்கிவருகின்றனர்.

ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி கோவிட் தடையுத்தரவை மீறிய பெண்ணுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டார்.  கோவிட் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தன்னை முத்தமிடுவதே அபராதம் என்று அவர் புரிந்துக் கொண்டாரா என சமூக ஊடகங்களில் அந்த காட்சிகள் வைரலாகின்றன.

இப்போது வைரலாகிவிட்ட ஒரு சி.சி.டி.வி வீடியோ காட்சியில், லிமாவில் COVID ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க அந்த அதிகாரி தடுத்து நிறுத்தியதைக் காணலாம். தடையை மீறியதற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த போலீஸ்காரர் கண்டிப்பாக இருப்பதும் இந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.

சி.சி.டி.வி காட்சிகளில் அந்த போலீஸ் அதிகாரி, தடையை மீறிய பெண்ணை நெருங்கி, உதட்டோடு உதடு வைத்து முத்தம் இடுவது தெளிவாகத் தெரிகிறது.  

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான ‘கோவிட் தண்டனை’ தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அதிகாரி தற்காலிகமாக தனது வேலையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Editor's Choice

பாகிஸ்தான் எம்.பி., ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16. அங்கு 54 வயதான எம்.பி., ஒருவர் தனது பேத்தி வயதுடைய சிறுமியை திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட மவுலானா சலாகுதீன் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

அவரது மனைவி, அங்குள்ள சித்ரால் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. வெறும் 14 வயதான பள்ளி மாணவியை எம்பி திருமணம் செய்துள்ளார். தன்னை விட 40 வயது குறைவான சிறுமியை எம்.பி. ஒருவரே மணந்த செய்தி, அங்குள்ள பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, போலீசில் புகார் அளித்துள்ளது. சிறுமியை திருமணம் செய்ததால் பிரச்னை எழுந்ததையடுத்து எம்பி தலைமறைவாகியுள்ளார்.

Editor's Choice

ரஷ்ய நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமும், முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின்  மகள் அலிஸ்யா கபெல்னிகோவும், இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி கொடுத்த போஸ், இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அலிஸ்யா, நிர்வாணமாக, அந்த யானை மீது படுத்தபடி போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது அந்த விலங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் இவரை போன்றவர்கள் செய்வார்கள் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளனர். யானை மீதான அழகியல் உணர்வின் வடிவமாகவே (Natural vibes), இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக அலிஸ்யா தெரிவித்துள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோ மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, உள்ளூர் மக்களுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகள் மீதான நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அலிஸ்யா கபெல்னிகோ, 2015 ஆம் ஆண்டில் மாடலாக தனது வாழ்க்கையை துவக்கி, பின் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், போட்டோகிராபி மாடலாகவும் உள்ளார்.

எல்லே மற்றும் வோக் பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இவரது போட்டோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Editor's Choice

சவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பெண்கள் ராணுவப்படை உருவாக்கப்பட்டுள்ளது. சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரசு பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கபட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்  உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 26 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பெண்கள் வாகன ஓட்ட தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரசு நீக்கி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நடவடிக்கை  எடுத்தது.

தொடர்ச்சியாக கால்பந்து போட்டிகளை பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. மேலும், வரலாற்றிலேயே முதல்முறையாக சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி  அரேபியா நியமனம் செய்தது. இதனை போன்று தொடர்ச்சியாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவுதி பெண்கள் சவுதி அரேபிய இராணுவம், ராயல் சவுதி வான்  பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள் ராணுவத்தில் பணியாற்ற பெண்ணின் வயது 21 முதல் 40  வயதிற்குள் இருக்க வேண்டும் உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், வேலையில் சேர விரும்பும் பெண் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி  கல்வி பெற்றிருக்க வேண்டும், சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்க கூடாது. திருமணம் முடிக்காதவர் ராணுவத்தில் சேர்ந்தால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற பல நிபந்தனைகளும்  விதிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

எகிப்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, எகிப்தின் அபைடாஸில் இருக்கும்  பழமையான மதுபான வடிப்பாலையை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அபைடாஸ் எனும் இடம், பாலைவனத்தில் இறந்தவர்களை புதைக்கும் இடமாகும்.

பீரை தயாரிக்க, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தினார்கள். அந்த கலவையை சூடுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 பாத்திர பண்டங்களைக் கொண்ட பல அலகுகளை இந்த கூட்டுக் குழு கண்டுபிடித்துள்ளது.

சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஆன்டிக்ஸ் என்கிற அமைப்பின் கருத்துப்படி, இந்த பீர் வடிப்பாலை அரசர் நார்மரின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உலகிலேயே அதிக அளவில் பீர் ரக மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகப் பழமையான வடிப்பாலையாக இது இருக்கலாம் என நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நார்மர் அரசர் 5,000 ஆண்டுகளுக்கு முன் இப்போதைய எகிப்து நாட்டில் ஆட்சி செய்தார். அவர் தான் எகிப்தை ஒருங்கிணைத்து முதல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் எனக் கருதப்படுகிறது.

இந்த பீர் வடிப்பாலையில் 8 பெரிய பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் சுமாராக 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.

"எகிப்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பீரை விநியோகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, இந்த வடிப்பாலை பாலைவனத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்" என எகிப்தின் சுற்றுலா துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், அலெக்சாண்ட்ரியாவுக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டு பழமையான தங்க நாக்குகளைக் கொண்ட மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பக்கம் 29 / 74