Editor's Choice

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.  இது வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மெட்ரோ ரயில் சேவையை , அதிக மக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

latest tamil news

* கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நியமனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்

* ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.100 ஆகும். தற்போது துவக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.100 ஆக இருக்கும்.

* ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.2,500 ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலா 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.2,500 கட்டணம் தான்

* ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக)

Editor's Choice

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹானுக்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுஹான் தங்கியுள்ளார். அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தண்ணீர் டேங்கில் நீர் நிறைந்து வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சவுஹான் வருவது அந்த அதிகாரிக்கு ஏற்கெனவே தெரியும் எனவும், அரசு தங்குமிடத்தை தூய்மையாக பராமரிக்க தவறிவிட்டதாக டிவிஷனல் கமிஷனர் ராஜேஷ் குமார் ஜெயின் வெளியிட்டுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

தங்குமிடத்தில் கொசு வலைகள் கூட இல்லை என சிவராஜ் சவுஹான் குற்றம்சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2.30 மணிக்கு அறை முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் டேங்கில் இருந்து அதிகாலை 4 மணி வரை நீர் வழிந்துகொண்டே இருந்ததால் சிவராஜ் சவுஹான் எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. இதன்பின், அவரே எழுந்துபோய் மோட்டாரை நிறுத்தியதாக கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி பாபுலால் குப்தா தனது கடமையை செய்ய தவறியதால் மாவட்டத்தில் மானமே கப்பல் ஏறிவிட்டதாக நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Editor's Choice

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை. 

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக மதுபானம் வழங்குகிறது ஒரு பார். இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகை 90 லட்சம். இதில் 43 விழுக்காட்டினருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை குறையலாம் என சுகாதார துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஊரடங்கு தளர்வுகளை முழுமையாக விலக்க தடுப்பூசி போடும் பணிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

கொரோனா காலகட்டத்தில் மது பார்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள ஜெனியா பார் அரசுடன் கூட்டணி அமைத்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பானங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனடியாக மது அருந்தக்கூடாது என்பதால் மது சாராத பானங்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சில வாரங்களுக்கு முன் துபாயிலும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டது. அதில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் சலுகை வழங்கப்படும் என துபாயை சேர்ந்த உணவகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில்  பெண் ஒருவரின் கழுத்தில் ஒரு சிறுவனை ஏற்றி, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்தது மட்டுமல்லாது, பெண் மெதுவாக நடக்கும்பட்சத்தில், அவரை குச்சியால் ஒருவர் அடிப்பது போன்ற வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, குணா பகுதி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்த ஆணுடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவரின் உறவினர்கள், அப்பெண்ணை எச்சரித்து உள்ளனர். அதை பொருட்டாக மதிக்காத அந்த பெண், அதனை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணை பழிவாங்க நினைத்த கணவரின் குடும்பத்தினர், கணவரின் சகோதரரான சிறுவனை, அப்பெண்ணின் கழுத்தில் ஏற்றி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடக்க வைத்து உள்ளனர். பெண், மெதுவாக நடக்கும்பட்சத்தில் குச்சியால் அவரை அடிக்கவும் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தொடர்பாக, குணா பகுதி போலீஸ், 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் இதுதொடர்பாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், இனியும் நடைபெற கூடாது என்ற வகையிலான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என  நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Editor's Choice

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இனி அங்கிருந்துகொண்டே சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் மூலம் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க வழிவகை செய்ய இந்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விரும்புவோர் இந்திய தூதரகத்துக்கு பணி நேரங்களில்   வரலாம். பாஸ்போர்ட், காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தின் எண் மற்றும் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

ஆவணங்களை நேரில் சரிபார்த்த பிறகு விண்ணப்பதாரர்கள் Miscellaneous Consular Service Form (EAP-II) படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். அபுதாபியில் மட்டுமல்லாமல் துபாய் மற்றும் வட எமிரேட்ஸ்களில் இருக்கும் இந்திய தூதரகங்களில் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

Editor's Choice

கூகிளின் ப்ளே மியூசிக் சேவை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. இனி இந்த சேவை கிடைக்காது என்று நிறுவனம் பயனர்களுக்கு அறிவித்திருந்தது.

கூகிள் சமீபத்தில் இந்த சேவையை சர்வரிலிருந்தும் நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆகையால், அனைத்து பயனர்களுக்கும் 24 பிப்ரவரி 2021 க்கு முன்பு, Play Music-லிருந்து தங்கள் தரவை அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நிறுவனம் இந்த சேவையை அதன் சர்வரிலிருந்து நீக்கும். அதாவது, எதிர்காலத்தில், பயனர்கள் இந்த சேவையில் உள்ள தரவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பல பயனர்கள் தங்கள் ம்யூசிக் லைப்ரரி, பரிவர்த்தனைகள் மற்றும் இசைக் கோப்புகளை Play Music-ல் பதிவேற்றினர். பிப்ரவரி 24 க்குப் பிறகு இந்த சேவையில் உள்ள எந்த டேட்டாவையும் மீட்டெடுக்க முடியாது என்று நிறுவனம் கூறியுள்ளது.

Google, Play Music-க்கு மாற்றாக YouTube Music-ஐக் கோண்டு வந்துள்ளது. அனைத்து Play Music பயனர்களும் அவர்களின் தரவும் YouTube Music-ல் மாற்றப்படுவார்கள்.

Play Music பேக்-அப் எடுக்க நீங்கள் YouTube Music-ன் உதவியைப் பெறலாம். Play Store-ரிலிருந்து YouTube Music-ஐ பதிவிறக்கம் செய்து இசை செயலியின் முழு தரவையும் அதில் மாற்றிக்கொள்ளலாம்.

பக்கம் 31 / 74