Editor's Choice

கொலம்பியாவில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் நேரலையில் இருந்தபோது ஸ்டுடியோ செட்டின் ஒரு பகுதி அவர் மீது விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.  ஈஎஸ்பிஎன் கொலம்பியா பத்திரிகையாளர் கார்லோஸ் ஓர்டுஸ்க்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டனர்.  

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதிர்ச்சியடைந்தார், ஆனால் நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்துப் போனார். ஆனால் நொடியில் சுதாரித்துக் கொண்டு, விளம்பர இடைவேளையை அறிவித்துவிட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பலரால் பார்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், மூக்கில் காயமும், சிறிய சிராய்ப்புகளுமே ஏற்பட்டதாகவும், மற்றபடி அவர் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூக்கில் மட்டும் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அது தவிர, லேசான சிராய்ப்புடன் தப்பித்துக் கொண்டேன். இதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கார்லோஸ் ஓர்டுஸ் ஸ்பானிஷ் மொழியில் டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.

Editor's Choice

திரைத்துறையில் வேறு எவருக்கும் முன்பாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் அலைகளை உருவாக்கி, இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் உலகளாவிய மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இப்போது ஓப்ரா வின்ஃப்ரேயுடன் ஒரு நேர்காணலுக்கு உட்காரத் தயாராகி வருவதால், 2000 களின் முற்பகுதியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் 'தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ'வில் தோன்றி அதை திறமையாகச் கையாண்டது நினைவு கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா 2005 ஆம் ஆண்டில் ஓப்ராவின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தாம்பத்தியம், உடலுறவு, பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள், ஆங்கில மொழி, இந்தியாவில் அமெரிக்கப் பெண்களின் உணர்வுகள் மற்றும் தோல் நிறம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் ஐஸ்வர்யா ராய் திறமையாக பதிலளித்தார்.

பொதுவெளியில் முத்தமிடுவது பற்றி பேசிய ஐஸ்வர்யா, "இது உண்மையில் வழக்கமாக பார்க்கும் இயல்பான விஷயம் அல்ல. முத்தமிடுவது இயல்பான விஷயம் தான். ஆனால் அது தெருமுனையில் நடப்பதில்லை. முத்தம் என்பது உணர்ச்சியின் தனிப்பட்ட வெளிப்பாடு. வாழ்க்கையை கலைபடைப்புகள் பிரதிபலிக்கின்றன. எங்கள் சினிமாவும் அதைத்தான் செய்கிறது."

'திருமணத்திற்கு வெளியே செக்ஸ்' குறித்தும், அது தடைசெய்யப்பட்டதா என்றும் ஓப்ரா கேள்வி கேட்டார். இந்த இக்கட்டான கேள்விக்கும் இயல்பாக பதிலளித்த உலக அழகி, "பொதுவாக பேசினால், அது அவ்வளவு நல்லதல்ல" என்று தெரிவித்தார்.  

ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களைப் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராய், "நகர்ப்புற இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் என்பது குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பின்னணியைத் தெரிந்துக் கொள்ளும் உலகளாவிய டேட்டிங் சேவையைப் போல இருக்கும், மேலும் அவர்கள் ஒன்று சேர்க்கிறார்கள். பரஸ்பரம் ஒத்துப்போனால் அது நிலைக்கும். ஒத்துப் போகவில்லை என்றால், பிரிவு ஏற்படும்" என்று மிகவும் அழகாக பதிலளித்தார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் 2009 இல் மீண்டும் ஓப்ராவின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

Editor's Choice

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) வரவிருக்கும் போட்டிகளுக்கான சமீபத்திய ப்ரொமோ வெளியிடப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டனும் ஆன எம்.எஸ். தோனி புதிய வழுக்கை அவதாரத்தை எடுத்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கொண்டுவந்துள்ள  ஒரு புதிய விளம்பரத்தில், தோனி ஒரு வழுக்கை தோற்றத்துடன் விளையாடுவதைக் காணலாம், இதில் தொடர்ச்சியான வெற்றியைக் கொண்டுவந்தால் பேராசையும் நல்லது தான் என்னும் பொருள் படும் வகையிலான விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் குழந்தைகளுக்கு ஒரு பாடம் புகட்டுவதைக் காணலாம். 

தோனி பாடம் புகட்டுகையில், ரோஹித் சர்மா ஐபிஎல் 2020 பட்டத்தை வைத்திருப்பது தொடர்பான காட்சி ஒரு தொகுப்பு தோன்றும். மற்றொரு விளம்பரத்தில், முன்னாள் இந்திய கேப்டன், ஒரு இராணுவ பிரிவின் தலைவராக வருகிற்றார். அதில், ஒரு "விராட் கில்லாடி" பற்றி பேசுவதைக் காணலாம், மேலும் வெற்றியைப் பெற உதவினால் கோபம் கூட எப்படி நல்லது என்பதற்கான பாடத்தை அவர் எடுக்கிறார்.

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டிற்கான  போட்டிகள் நடக்கும் தேதிகளை ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. ஏப்ரல் 9 முதல் ஆறு இடங்களில் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

 

Editor's Choice

E-Cars என்றழைக்கப்படும் மின்சார கார்கள் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், சிக்கனமாக இருப்பதோடு, இவை பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளன.

கார் தயாரிப்பு நிறுவனமான மோரிஸ் கேரேஜஸ் சில மாதங்களுக்கு முன்பு MG ZS EV என்ற மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் 44.5 கிலோவாட் பேட்டரி உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த கார் 419 கி.மீ. செல்லும் என நிறுவனம் கூறுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 20.99 லட்சம் - 24.88 லட்சம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் பிரிவையும் கொண்டு வந்துள்ளது. டாடாவின் புதிய நெக்ஸன் இ.வி காரின் பேட்டரி 30.2 கிலோவாட் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த கார் 312 கி.மீ. செல்லும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 13.99 லட்சம் முதல் 16.40 லட்சம் வரை உள்ளது.

டாடா டைகரின் மின்சார பதிப்பும் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கார் வெறும் 2 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிறது. இந்த காரில் 21.5 கிலோவாட் பேட்டரி கிடைக்கிறது. இந்த காரை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 213 கி.மீ. வரை செல்லும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .9.58 லட்சம் முதல் ரூ .9.90 லட்சம் வரை உள்ளது.

கொரிய மோட்டார் நிறுவனமான ஹூண்டாய் சமீபத்தில் ஒரு இ-காரையும் அறிமுகப்படுத்தியது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தவுடன் இந்த கார் 452 கிமீ வரை செல்லும் என நிறுவனம் கூறுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ 23.75 லட்சம் முதல் ரூ 23.94 லட்சம் வரை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

எலக்ட்ரிக் கார் பிரிவிலும் மஹிந்திரா நுழைந்துள்ளது. நிறுவனம் மஹிந்திரா இ வெரிட்டோ என்ற பட்ஜெட் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 10.15 லட்சம் முதல் ரூ.10.49 லட்சம் வரை வைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா இ வெரிட்டோ, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 110 கி.மீ. வரை செல்லும். இந்த காரில் 288ah லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

Editor's Choice

நம் கைரேகையை வைத்து நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது வழக்கம். அதே போல கண்கள், மூக்கு, முகத்தின் வடிவம், நகங்கள் போன்றவற்றை வைத்து ஒருவரின் குணாதிசியங்கள் சிலர் கணிப்பது வழக்கம்.

இது ஒருபுறமிறக்க நமது பாதத்தின் அளவு, கால் விரல்களின் அளவு வைத்து ஒருவரின் குணாதிசியங்களை பற்றி சொல்ல முடியும்.

அகல பாதம்
அகல பாதங்களைக் கொண்டவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, பிஸியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நடப்பது என்பது மிகவும் பிடிக்கும், இவர்கள் பெரும்பாலும் நின்றவாறே வேலையை செய்வார்கள்.

குறுகிய பாதம்
குறுகிய பாதங்களைக் கொண்டவர்களின் உடலில் சோம்பேறித்தனம் அதிகம் இருக்குமாம். இதனால் இவர்கள் தேவையில்லாமல் எதிலும் ஈடுபடமாட்டார்கள். மேலும் கடின உழைப்பை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

வளைவுகளின் உயரம்
பெரிய வளைவுகளைக் கொண்டவர்கள், மற்றவர்களின் கருத்துக்களை கேட்கமாட்டார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் மற்றும் வெளிப்படையாக எதையும் பேசாமல் தன்னுள் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தனிமையை விரும்புவார்கள்.

குறைந்த வளைவு கொண்டவர்கள், எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழ்வதோடு, எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் மற்றவர்களின் அனுமதியை நாடுவார்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் தனிமையை விரும்பமாட்டார்கள்.

கட்டைவிரல் நீளம்
கால் கட்டைவிரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால், அவர்கள் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பதோடு, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண நினைப்பார்கள்.

இரண்டாம் விரல்
கட்டைவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாம் விரல் நீளமாக இருப்பவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், பாதகமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஒருவேளை இரண்டாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பார்கள். அதாவது இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.

நடுவிரல்
நீளமான நடுவிரலைக் கொண்டவர்கள் வணிகத் தீர்வுகள் என்று வரும் போது வலிமையானவராக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் இருக்கும். மொத்தத்தில் தைரியசாலி. ஒருவேளை நடுவிரல் சிறியதாக இருந்தால், இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்களால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக தீர்வு காண முடியாது.

நான்காம் விரல்
நான்காம் விரல் குடும்பத்தைக் குறிக்கும். அதாவது நான்காம் விரல் நீளமாக இருந்தால், அவர்கள் உறவினர்களுடன் நன்கு நெருக்கமாக இருப்பதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். அதுவே நான்காம் விரல் சிறியதாக இருந்தால், இத்தகையவர்கள் குடும்பத்தை சார்ந்து இருக்கமாட்டார்கள்.

கடைசி விரல்
கடைசி விரல் அனைவருக்குமே சிறியதாகத் தான் இருக்கும். பெரும்பாலானோரால் கடைசி விரலை தனியாக அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி தனியாக அசைக்க முடிந்தவராயின், நீங்கள் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.

Editor's Choice

சீனாவில் புத்தர் வடிவ டிரம்ப் சிலை சீன மக்களிடையை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் சிரிக்கும் புத்தர் சிலை மிகவும் பிரபலமானது. பல நாடுகளில் புத்த மதத்தை பின்பற்றுபவர் புத்தர் சிலைகளை வீட்டுகளில் வாங்கி வைத்து வழிபடுவர். கையில் ஒரு பையை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை, அலுவலகங்களிலும், வீடுகளிலும் வைத்திருப்பர். இவற்றுக்கு உலகம் முழுவதும் நல்ல தேவை உள்ளது. இந்நிலையில், சிரிக்கும் புத்தர் சிலைகளுக்கு போட்டியாக, சிரிக்கும் டிரம்ப் சிலை வந்துள்ளது.

அவர் ஜனாதிபதியாக இருந்த நாட்களில், அவரின் நிர்வாக ரீதியிலான முடிவுகள் அனைத்தும் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஏற்பட்ட மோதலில், இருநாடுகளிலும் தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சீன சிற்பிகள் சிலர் புத்தரின் வடிவத்தில் டிரம்ப் தியானம் செய்வது போன்ற சிலையை உருவாக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இவை சீன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலையானது 18 அங்குல சிலை 650 அமெரிக்க டாலருக்கும், 6 அங்குல சிலை 150 அமெரிக்க டாலருக்கும் விற்று வருகின்றனர்.

பக்கம் 13 / 74