Editor's Choice

அமெரிக்காவில், 'எச் - 1பி' விசா உள்ளிட்ட, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு, முன்னாள் அதிபர் டிரம்பால் விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வலியுறுத்தி, தற்போதைய அதிபர் ஜோ பைடனை, செனட்டர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, எச் - 1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள், அதிக அளவில் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் நெருக்கடியால், எண்ணற்ற அமெரிக்கர்கள், வேலைகளை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தன் நாட்டு இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், எச் - 1பி விசா வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். அப்போது, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும், எச் - 1பி, எல் - 1, எச் - 2பி, ஜே - 1 போன்ற விசாக்களை வினியோகிப்பதற்கு, தற்காலிக தடையும் விதித்தார். இந்த தடைகளால், இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும், வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்த இயலாமல், அமெரிக்க நிறுவனங்களும் சிரமத்திற்கு உள்ளாகின. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், தங்கள் வணிகம் முற்றிலும் முடங்கலாம் என அந்த நிறுவனங்கள் அஞ்சுகின்றன. டிரம்ப் விதித்த அந்த தடை, வரும், 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

எச்1பி விசா தடை உத்தரவை திரும்பப்பெற, தற்போதைய அதிபர் ஜோ பைடனை, ஆளும் ஜனநாயக கட்சியின் செனட்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Editor's Choice

தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் (டிஆர்பி) கையாளுதல் மோசடி தொடர்பாக ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா மற்றும் மகா மூவி ஆகிய மூன்று சேனல்களின் ரூ. 32 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துகளில் மும்பை, இந்தூர், டெல்லி மற்றும் குர்கான் போன்ற இடங்களில் உள்ள சேனல்களுக்கு சொந்தமான வங்கி கணக்குகள், நிலம் மற்றும் வணிக மற்றும் குடியிருப்பு பிரிவுகள் அடங்கும். இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதன் முதல் குற்றப்பத்திரிகையை அடுத்த வாரத்திற்குள் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் பிற சேனல்கள் தொடர்பான விசாரணையும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மூன்று சேனல்களும் தங்கள் டிஆர்பிகளை முறைகேடாக உயர்த்துவதன் மூலம் விளம்பரங்களில் ரூ. 46 கோடியை ஈட்டியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. பாக்ஸ் சினிமா மற்றும் மகா மூவி ஆகியவை மும்பையில் தங்களது பார்வையாளர்களில் 25 சதவீதத்தை ஐந்து வீடுகள் வழியாக டிஆர்பி அளவிடும் மீட்டர்களுடன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் ஃபக்த் மராத்தி இந்த செயல்முறையின் மூலம் 12 சதவீத டிஆர்பியைப் பெற்றது. டிஆர்பி கையாளுதல் மோசடியில் இந்தியா டுடே என்ற ஆங்கில செய்தி சேனலுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.

பண மோசடி விசாரணையின் போது, ஹன்சா ரிசர்ச்சின் டி.ஜி.எம் நிதின் தியோகர், வினய் என்ற ஒரு குழு வீட்டு உரிமையாளரின் மகனுக்கு இந்தியா டுடேவை தினமும் இரண்டு மணி நேரம் பார்க்க 2019 நவம்பர் முதல் 2020 மே வரை பணம் கொடுத்ததாகக் கூறினார்.

இந்தியா டுடே, நியூஸ் நேஷன், ஃபக்த் மராத்தி, மகா மூவி மற்றும் பாக்ஸ் சினிமா போன்ற சில சேனல்களைப் பார்க்க பணம் வழங்கப்பட்டதாகக் கூறிய முப்பத்திரண்டு குடும்பங்களின் உறுப்பினர்களையும் அமலாக்கத்துறை மேற்கோளிட்டுள்ளது.

இந்த சில சேனல்களைப் பார்க்க தங்களுக்கு ரூ 300 முதல் ரூ 500 வரை சம்பளம் வழங்கப்பட்டதாக சிலர் கூறியுள்ளதும் அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

கடந்த மாதம், மியான்மரில், ராணுவம் திடீரென புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண சூழல் நிலவுவதால், பல நிறுவனங்கள் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. இதனால், மியான்மரில் இருந்து உளுந்து இறக்குமதியை பெரிதும் சார்ந்திருக்கும், இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து உற்பத்தியில், இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

கடந்த, 2017 - 18ம் பயிர் பருவத்தில், இந்தியாவின் உளுந்து உற்பத்தி, 34 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2018 - 19ல், 20 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. தேவையை சமாளிக்க, இந்தியா, மியான்மரில் இருந்து, 84 சதவீத உளுந்தை இறக்குமதி செய்கிறது. அதில், 74 சதவீத உளுந்து, சென்னை துறைமுகத்தில் இறக்குமதியாகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக, உளுந்து வருவது தடைபட்டுள்ளதால், உள்நாட்டில் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.சென்னையில், 1 கிலோ உளுந்து, 120 - 125 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, மும்பையில், 117 - 130 ரூபாய்; டில்லியில், 100 - 125 ரூபாய்; லக்னோவில், 145 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. வரும் வாரம், விலை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice
கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
 
அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. அந்நாட்டில் முதியவர்கள் மக்கள்தொகை கணிசமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 
இந்நிலையில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போலவே புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மற்ற கொரோனா வகைகளைவிட ஆபத்தானதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
பிரான்சில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளிலிருந்து தப்பிவிடுகிறது. எனவே, இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவில் தெரியவரும். இதனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பள்ளிகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor's Choice

நாட்டின் மிகப்பெரிய அரசாங்க ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. LIC மெச்யூரிட்டி பாலிசியின் தொகையை (LIC Policy Maturity Claim) நாடு முழுவதும் உள்ள எந்த LIC கிளையிலும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். எனினும், மெச்யூரிட்டி தொகை கோரலின் பிராசசிங் செயல்முறை அவரவரது பிரதான கிளை மூலமே செய்யப்படும்  என தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில், வாடிக்கையாளர்கள் எந்த கிளையில் டெபாசிட் செய்தாலும், அந்த கிளை, அந்த ஆவணங்களை பிரதான கிளைக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Editor's Choice
பிரேசிலில்  பமீல்லா பெரீரா  என்ற கர்ப்பிணி  இளம்பெண், கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யபட்டார். அவரது  வயிற்றில் இருந்த குழந்தையையும் காணவில்லை . குழந்தையை போலீசார் தேடிக்கொண்டிருக்க, அதே நேரத்தில், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள  என்ற  பெண், குழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தை உயிருடன் இல்லை. 
 
வீட்டில், தானே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், குழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது தடுக்கி விழுந்துவிட்டதாகவும்  அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அதற்கான அடையாளங்கள் எதுவும் அவரிடம் இல்லை.  சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம்  போலீசாருக்கு தகவலளித்தது.  போலீஸ் விசாரணையில், அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் பமீல்லாவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது.
 
குழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது வயிற்றை  கிழித்து  குழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 8 / 74