Editor's Choice
ஆண்டு தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சமடைந்து வருகிறது.  இந்த ஆண்டில் முதல்முறையாக ஒருநாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
மராட்டியத்தில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26.4  லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.
 
அதிகரித்து வரும் தொற்றுகளால் மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
 
இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  வருகிற 29ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்டிலும் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது.  இதன்படி, ஹோலி, சருல், ஷாப்-இ-பரத், நவராத்திரி மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் அனுமதி இல்லை.  மக்கள் தங்களது வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுடன் ஹோலியை கொண்டாடி கொள்ளலாம் என தெரிவித்தது.
 
டெல்லியிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ஹோலி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
 
Editor's Choice

சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள எவர்கிரீன் கப்பலில் பணிபுரியும் மாலுமிகள் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து நாட்டிற்கு எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரையில் மோதி குறுக்கே நின்றது. கால்வாயின் குறுக்காக கப்பல் சிக்கிக் கொண்டதால் மற்ற கப்பல்கள் சென்று வர முடியாமல் அப்பகுதியில் காத்துக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே எவர் கிரீன் சரக்கு கப்பலை ஓட்டியவர்கள் அனைவரும் இந்தியர்கள் என கப்பலை நிர்வகிக்கும் பெர்ன்ஹர்ட் ஷூல்ட் ஷிப்மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் கப்பலில் பயணித்த 25 பேரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடல் வழி பாதையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதியாக சூயஸ் கால்வாய் முக்கிய இடம் பெறுகிறது. தற்போது எவர் கிரீன் கப்பல் சிக்கி உள்ளதால் மாற்று பாதையாக ஆப்பிரிக்காவின் தென் முனைக்கு சென்று ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும். இந்தவழியாக செல்லும் போது மேலும் இரண்டு வாரங்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகப்பேறு டாக்டராக  பணியாற்றியவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி டாலர்  இந்திய மதிப்பில் ரூ.726 கோடி  இழப்பீடு வழங்க குறித்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
 
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த மாணவர்களுக்கான சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜார்ஜ் டிண்டால். 710 மாணவிகளிடம் வரம்பு மீறியதாகவும், பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில், சுமார் 852 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டதுடன், இன்னொரு 215 மில்லியன் டாலர் இழப்பீடும் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. டாக்டர் ஜார்ஜ் டிண்டால்  இந்த விவகாரம் தொடர்பில் 2019ல் கைதானார். 
 
அவர் மீது 19 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மட்டுமின்றி விசாரணைக்கு இடையே, அவர் மீது மீண்டும் 6 பிரிவுகளில் துஷ்பிரயோக வழக்குப் பதியப்பட்டது. அவர் இதுவரை தாம் குற்றவாளி அல்ல என்று வாதிட்டு வருவதால் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
 
2009 முதல் 2016 வரையான காலகட்டத்திலேயே மருத்துவர் திண்டால் மாணவிகளிடம் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
Editor's Choice
பிரிட்டனில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை அவசரகால அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்  ஒப்புதல் அளித்தது, மேலும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும்  அவர்கள் அங்கீகரித்தனர்.
 
இருப்பினும், போரிஸ் ஜான்சனுக்கு தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அவர்கள், இந்த முடிவால் கிடைக்கும் நன்மைகளைவிட, நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மனித செலவுகள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
 
கொரோனா வைரஸ் அவசரகால விதிமுறைகள் கடந்த ஓராண்டுக்கு முன்னர் அமுல் படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாட்டில் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யவும், வணிகங்களை மூடவும், பயணத்தை கட்டுப்படுத்தவும், வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமை படுத்தவும் அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Editor's Choice

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், வரும், 1ம் தேதி முதல் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளத

தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.

ஆனாலும், இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Editor's Choice
இங்கிலாந்தை  சேர்ந்த கிறிஸ்டி புரவுன்  என்ற பெண் ஆணை பார்த்தால், மயங்கி விழுந்துவிடுகிறார்.
 
கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். 
 
கிறிஸ்டி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ அல்லது பயமோ, ஏன் கவர்ச்சியாக இருந்தால்கூட அவரை மயங்கி விழச்செய்துவிடும்.
 
இதனால் கிறிஸ்டி வெளியே செல்வதே இல்லை. அப்படியே சென்றாலும் தலை குனிந்தே செல்கிறார். தனது சோகத்தை மறைத்துக்கொண்டு, இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது என்கிறார் கிறிஸ்டி.
 
இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஒரு முறை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதை கண்டேன். அவ்வளவுதான் என் கால்கள் பலவீனமாகிவிட்டன என  கூறியுள்ளார்.
 
இந்த கோளாறு அவரை மேலும் சோர்வடையச் செய்வதாகவும். தான் ஒருபோதும் நன்கு ஓய்வெடுக்கும் வகையில் ஆழ்ந்து தூங்கியதில்லை, அதனால் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பொது வெளியில் செல்லும்போது தன்னை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒவ்வொரு முறையும் தனது முழங்கால்கள் பலவீனமடையும் போது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் அவர் தலைகுனிந்து தான் நடப்பாராம்.

பக்கம் 4 / 74