- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 200
ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்பட்டு ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது பற்றி பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என உறுதியளிக்கிறேன். அதற்கு பதில் ஜி.பி.எஸ் வழியாக கட்டண வசூல் நடக்கும். ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் பணம் பெறப்படும்.” என்றார். மேலும், “93 சதவீத வாகனங்கள் பாஸ்டேகைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துகின்றன. மீதம் 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்திய போதும் பாஸ்டேகை எடுக்கவில்லை” என்றார்.
வாகனங்களில் பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுங்கச்சாவடிகளில் 2016 முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது கடந்த பிப்.,16 முதல் கட்டாயமானது. இதன் மூலம் சுங்கச்சாவடிகள் நெரிசல் ஓரளவு குறைகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


















