Editor's Choice

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.  சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  சுகாதாரம்,உ கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்  இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. 

இந்தப் பட்டியலில்  பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.  அதற்கு அடுத்த இடங்களில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.  இந்தப்பட்டியலில் இந்தியா 139-வது இடத்தில் உள்ளது.  இந்தப்பட்டியலில் கடைசி 3 இடங்களை ஜொர்டான், தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 84-வது இடத்திலும் நேபாளம் 87-வது இடத்திலும் வங்காளதேசம் 101- இடத்திலும் பாகிஸ்தான் 105- வது  இடத்திலும் உள்ளன. மியான்மர் 126- இடத்தில் உள்ளது. இலங்கை 129-வது இடத்தில் உள்ளது. 
Editor's Choice

சிறைக் கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற ஆய்வு ஆச்சரியத்தை அளிக்கிறது. உலகிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது பிரிட்டன். திருடர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபவதைக் கட்டுப்படுத்த, குறியீடுகள் கொண்ட ஜி.பி.எஸ் டேஹ்களை (GPS tag) அணிய வேண்டும். 

இந்த முன்முயற்சியில், கொள்ளையர்கள், திருடர்கள் மற்றும் வழிப்பறி செய்பவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஜிபிஎஸ் டேஹ்கள் பொருத்தப்படும். அது அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்படும்.

இதுதொடர்பாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது, ஜி.பி.எஸ் குறிச்சொல்லுடன் பிணைக்கப்படுவார்கள், இது அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க உதவும். அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது போன்ற நடவடிக்கைகளை நகர்வுகளை 24/7 கண்காணிக்க முடியும்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அதே தவறுகளை செய்கின்றனர். ஆனால், அதில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை. எனவே, ஜி.பி.எஸ் டேக் பொருத்துவது போன்ற முயற்சி, குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதை தடுக்கும் என்று இங்கிலாந்து நீதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

"அவர்களின் நகர்வுகளை கண்காணிப்பதன் மூலம், குற்றம் செய்வதற்கான தூண்டுதலைக் குறைக்க முடியும், மீண்டும் தவறு செய்தால் காவல்துறையினருக்கு தெரிந்துவிடும் என்பதும், தாங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம் என்ற எண்ணமும் அவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்" என்று குற்றம் மற்றும் காவல்துறை அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

 

Editor's Choice

''சமூக வலைதளங்களில் என்ன கருத்துக்களை வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கவில்லை. அதே நேரத்தில், அவதுாறு பரப்பும் கருத்துக்களை நீக்கவே உத்தரவிடப்படுகிறது,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

நாட்டில், பல்வேறு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 140 கோடியாக உள்ளது. 'பேஸ்புக், வாட்ஸ ஆப், டுவிட்டர்' உள்ளிட்ட நிறுவனங்கள், இங்கு தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இணையம் என்பது மனித குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி, ஒரு சில நிறுவனங்கள் ஏகாதிபத்யம் செய்வதை ஏற்க முடியாது.சமூக வலைதளங்களில் எதிர்ப்பு மற்றும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பதை அரசு எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், அது அவதுாறு ஏற்படுத்தும் வகையிலும், நம் நாட்டை இழிவுபடுத்தும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதே அரசின் வாதம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில், ஆபாச படங்களை வெளியிட்டால், ஏற்க முடியுமா.

அதுபோல தான், சர்வதேச அரங்கில், இந்தியாவை இழிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது. இதுபோன்று, பெண்களை இழிவுபடுத்தும், நாட்டை இழிவுபடுத்தும் கருத்துக்களை, 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என, சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளோம். சமூக வலைதளங்களில் என்னென்ன கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாட்டையும் அரசு விதிக்கவில்லை.

அதே நேரத்தில் அவதுாறு கருத்துக்களை நீக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், சமூக வலைதளங்களில் பொய் தகவலை பரப்புவதை தடுக்க, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறோம் என அவர் கூறினார்.

 

Editor's Choice

ஐ.நா.,வில், பொதுவாழ்வில் பெண்கள் நிலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பெண்களுக்கு உள்ள சுயாதிகாரத்தின் அடிப்படையில் தான், ஒரு நாட்டின் ஜனநாயக செழுமையை மதிப்பிட முடியும். முடிவெடுக்கும் பொறுப்புகளில், பெண்களை அமர விடாமல் விலக்கினால், அந்நாட்டின் ஜனநாயகத்தில் குறைபாடு உள்ளதாகவே கருதப்படும். பெண்களின் பங்களிப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என கூறினார்.

உலகளவில் பாதுகாப்பான உணவு, போதுமான ஆரோக்கியப் பராமரிப்பு சேவை ஆகியவற்றை பெற, பெண்கள் போராடி வருகின்றனர். இதை, கொரோனா மேலும் மோசமாக்கி விட்டது. பெண்களை வறுமையில் வாழ விடுவது, பாலின வன்முறைக்கு வித்திடும். இதனால், அனைவரும் பாதிக்கப்படுவர். அதனால், முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்; தவறினால், ஜனநாயகம் செழிக்கத் தவறிவிடும்.ஒரு நாட்டின் ஜனநாயகம், அங்குள்ள பெண்களின் நிலையை வைத்து தான் மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்கா, இந்த இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்கிறது, மனித கண்ணியத்தை மேம்படுத்துகிறது. சீரான சட்ட நடைமுறைக்கு துணை புரிகிறது. இதன் மூலம், அமைதியை ஏற்படுத்தி, வளங்களை சமமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. அமெரிக்காவில், பெண்களின் சுயாதிகாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த, 56 ஆண்டுகளில், அதிபர் தேர்தல்களில், ஆண்களை விட, அதிகமாக பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர் என அவர் பேசினார்.

Editor's Choice

குக் வித் கோமாளி என்பது தனியார் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. இதில்  சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் நடுவர்களாக உள்ளார்கள்.

இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்றது. இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ’குக் வித் கிறுக்கு’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Editor's Choice

தனக்பூர் மற்றும் டில்லி இடையே பூர்ணகிரி ஜன் சதாப்தி ரயில் சேவை புதனன்று டில்லியிலிருந்து புறப்பட்டது. மாலை தனக்பூரை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் மாடு ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது ரயில் மோதியது. விபத்தின் காரணமாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனால் அப்பகுதியில் உள்ள தண்டவாள பாதை சாய்வானதாக இருந்ததால் ரயில் பின்னோக்கி நகர்ந்துள்ளது. ரயிலை நிறுத்த முயன்ற போதும் நிற்கவில்லை. அழுத்த குழாய்களில் ஏற்பட்ட கசிவினால் பிரேக் பழுதடைந்தது.

நீண்ட நேரமாக ரயில் பின்னோக்கி நகர்வதை கண்ட பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர். ஓட்டுநர் உடனடியாக அருகே உள்ள ரயில் நிலையங்களுக்கும், லெவல் கிராசிங்குகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரயில் வரும் வழியில் உள்ள கேட்டுகள் மூடப்பட்டன. கோஷிகுவான் என்ற கிராமத்தில் ரயிலை நிறுத்த அதிகாரிகள் முயன்றுள்ளனர். அதற்குள் ரயில் பான்பாசா மற்றும் சக்கர்பூர் ரயில் நிலையங்களைக் கடந்தது.

பிறகு ஒருவழியாக தண்டவாளத்தில் மணலை கொட்டி காதிமா ரயில் நிலையத்துக்கு முன்பாக வண்டியை நிறுத்தினர். நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகளை, பத்திரமாக பஸ்களில் ஏற்றி தனக்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

பக்கம் 9 / 74