Editor's Choice

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி  செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டத்தை சென்ற மாதம்  நிறைவேற்றியது. 

இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியாக இருந்ததை அடுத்து, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இதை அடுத்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், பேஸ்புக் ஆஸ்திரேலியாவில் செய்திகளை தனது பக்கங்களில் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.

இந்நிலையில், பேஸ்புக் மற்றும் ஆஸ்திரேலியா இடையே பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. 

இதன் விளைவாக, தற்போது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான நியூஸ் கார்ப் (News Corp) நிறுவனத்துடன் பேஸ்புக் (Facebook) ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்,  நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியாவின் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

"பேஸ்புக் உடனான ஒப்பந்தம் பத்திரிகைக்கான வர்த்தக விதிமுறைகளை மாற்றுவதில் ஒரு மிகப்பெரிய மைல் கல் எனலாம். மேலும் எங்கள் ஆஸ்திரேலிய செய்தி வணிகங்களுக்கான வருமானத்தை மேம்படுத்தி அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்" என்று நியூஸ் கார்ப் தலைமை நிர்வாகி ராபர்ட் தாம்சன் கூறினார்.

தி ஆஸ்திரேலியன் (The Australian), டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) மற்றும் ஹெரால்ட் சன் (Herald Sun) உள்ளிட்ட  சுமார் 70 சதவிகித  செய்தி நிறுவனங்களை நியூஸ் கார்ப் கட்டுப்படுத்துகிறது. news.com.au என்ற செய்திதளமும், நியூஸ் கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமானது.

பேஸ்புக் மற்றும் கூகிள்  தளத்தில் உள்ள செய்தி ஊடகங்களின் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டும்  என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த  ஊடக நிறுவனங்களில் நியூஸ் கார்ப்  நிறுவனமும் ஒன்றாகும்.

Editor's Choice

உலகின் ஆராய்ச்சி உதவி திட்டங்களில் பிரதான ஒன்றான, புல்பிரைட் உதவித்தொகை திட்டம் பிப்ரவரி 1950ல், அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யு.எஸ். தூதர் லோய் டபிள்யூ. ஹென்டர்சன் ஆகியோரால் கையெழுத்திட்டப்பட்டது. 2022-23ம் ஆண்டிற்கான பல்வேறு புல்பிரைட் உதவித்தொகை திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை நிர்வகித்து வந்த அமெரிக்க கல்வி அறிக்கட்டளை, 2008ம் ஆண்டில் அமெரிக்க-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) என பெயர் பெற்றது. புதிய ஒப்பந்தத்தின் படி, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறும் இத்திட்டங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் பங்குபெறும் திட்டமாகவும் புல்பிரைட் உதவித்தொகை திட்டம் விளங்குகிறது. 

புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் உதவித்தொகை:

அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பைத் படிக்க விரும்பும் தகுதியான இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பை குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நான்கு ஆண்டு இளநிலை படிப்பைப் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதற்குக் குறைவான கால அளவை கொண்ட படிப்பு என்றால் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டியது அவசியம். துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு முன் அமெரிக்காவில் எந்த உயர்கல்வியும் படித்திருக்கக் கூடாது.

பிரிவுகள்:

குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் கீழ் முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயில விரும்பும் மாணவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அவை,

* கலாச்சார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள்

*  பொருளாதாரம்

*  சுற்றுச்சூழல் அறிவியல்

*  உயர் கல்வி நிர்வாகம்

*  சர்வதேச விவகாரம்

*  சர்வதேச சட்டம்

*  இதழியல்

*  பொது நிர்வாகம்

*  பொது சுகாதாரம்

*  நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல்

*  மகளிர் மற்றும் பாலினம் சார்ந்த படிப்புகள் 

உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள்:

*  தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜே- 1 விசா 

*  அமெரிக்க வந்து செல்வதற்கான விமான பயணச் சீட்டு 

*  கல்விக் கட்டணம் மற்றும் தங்கும் வசதி

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டியது அவசியம்.

யு.எஸ்.ஐ.இ.எப்., செயல்படும் இடங்கள்:

இத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது. 

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 17

விபரங்களுக்கு: http://www.usief.org.in

இ-மெயில்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

Editor's Choice

உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறுகிறார்.

முதலில் தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது. எனவே, இது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று மாநில எம்.எல்.ஏ கூறுகிறார்.

"சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்துள்ளனர். சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போலவே, கோரக்நாத் ஜி, யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார்" என்று சிங் கூறினார்.

"தேச விரோத மனப்பான்மை" கொண்டவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார். "இந்தியாவின் பெருமையையும் இந்தியத்தன்மையையும் பேசுபவர்கள் மட்டுமே இந்நாட்டின் தலைவர்களாக மாறுவார்கள்" என்று அவர் கூறினார்.

தைரியமான கருத்துக்களுக்காக அறியப்பட்ட பாஜக தலைவர், இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல.

கடந்த ஆண்டு, ஹத்ராஸில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, சிறுமிகளுக்கு ’கலாசாரத்தை’ கற்பித்தால் கற்பழிப்பு நிறுத்தப்படலாம் என்று அவர் கூறியிருந்தது மிகப் பெரிய சர்ச்சைகளை எழுப்பியது.  

Editor's Choice

ரிசர்வ் வங்கியில் 'அலுவலக உதவியாளர்' பிரிவில் 841 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மும்பை 202, சென்னை 71, கான்பூர் 69, ஐதராபாத் 57, நாக்பூர் 55, டில்லி 50, ஆமதாபாத் 50, ஜெய்ப்பூர் 43, கவுகாத்தி 38, கோல்கட்டா 35, சண்டிகார் 31, பெங்களூரு 28, பாட்னா 28, திருவனந்தபுரம் 26, போபால் 25, புவனேஸ்வர் 24, ஜம்மு 9 என மொத்தம் 841 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

வயது: 1.2.2021 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மொழி தேர்வு.

எழுத்துத்தேர்வுக்கான உத்தேச தேதி: 2021 ஏப். 9, 10.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலுார், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.450. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 50.

கடைசி நாள்: 15.3.2021

விபரங்களுக்கு: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF

Editor's Choice

இந்தியா, இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிசிசிஐயிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கோரிக்கை விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பிசிசிஐ அவரை விடுவித்தது. அப்போதே பும்ரா திருமணம் செய்துகொள்ள தான் விடுப்பு வாங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. டி20 போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனை பும்ரா மணக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சஞ்சனா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொகுப்பாளினியாகவும் பணியாற்றிவருகிறார். இந்தத் தகவலை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அன்பினால் இணைந்த நாங்கள் இருவரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். எங்கள் திருமணச் செய்தியையும் எங்கள் மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவதற்குப் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Editor's Choice

பிரபல ஹாலிவுட் நடிகையும், புகழ்பெற்ற பாடகியுமமான லேடி காகா, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

லேடி காகா பிரஞ்சு புல்டாக் இனத்தை சேர்ந்த 2 நாய்களை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய்களை காகாவின் வீட்டு வேலைக்காரர் வெளியே அழைத்து சென்றபோது அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு நாய்களை காரில் கடத்தி சென்று விட்டான். காயமடைந்த வேலைக்காரர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இத்தாலி சென்ற லேடி காகா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''என் செல்ல பிராணிகள் கடத்தப்பட்டதால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன். அதை கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசு வழங்குவேன்.
நாய்கள் எனக்கு கிடைக்க உதவுங்கள்'' என்று கூறியிருந்தார்.

இரண்டு நாய்களுக்கு இவ்வளவு பரிசு தொகையா என்று பலரும் ஆச்சரியப்பட்டு பேசினர். இந்த நிலையில் 2 நாய்களையும் போலீசார் பத்திரமாக மீட்டு லேடி காகாவிடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் மற்றும் மீட்கப்பட்ட விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.

பக்கம் 57 / 90