- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 162
பால்கனியில் குழுவாக நிற்கும் பெண்கள் நிர்வாணமாக நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வைரலாகின்றன.
இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் எடுக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அரசு ஊடகமான தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் விளம்பர ஸ்டண்டிற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது போன்ற பல தடை செய்யப்பட்ட பழக்கவழக்கங்களுக்காக மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் பெண்கள் எப்படி தைரியமாக நிர்வாண போஸ் கொடுத்தனர் என்பதும், அதுவும் இது திட்டமிடாமல் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.
"இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமுதாயத்தின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை" என்று துபாய் போலீசார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை அறிவுறுத்துகிறது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது ஒழுக்க சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் சுமார் £ 1,000 அபராதமும் விதிக்கப்படும்.
மத்திய கிழக்கு அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் தாராளமயமானது, ஆனால் சமூக ஊடகங்களில் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் வெளியாகும்போது அதை எதிர்கொள்ள கடுமையான சட்டங்களையும் அமீரகம் வைத்துள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020’ அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியான்மருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்’’ என கூறினார்.
22 வயதான உளவியல் மாணவியான ஹான் லே ஒரு மாதத்துக்கு முன்பு யாங்கூன் நகர வீதிகளில், மியான்மார் ராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச அரங்கில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்கி இருக்க ஹான் லே முடிவு செய்துள்ளார்.
சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணிநேரம் அப்படியே இருந்த காட்சி யூட்யூபில் வெளியாகி, 50 மில்லியன் பேர் பார்த்து வைரலானது.
மிஸ்டர் பீஸ்ட் அக்கா ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், யூடியூபில் 57.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமானவர். அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு அனைவரையும் மகிழ வைப்பார். ஆனால், உயிருக்கே உலை வைக்கக்கூடிய அவரது முயற்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், 50 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
சவப்பெட்டியின் உள்ளே இருந்த டொனால்ட்சன் கிட்டத்தட்ட 50 மணி நேரம் பூமிக்கு அடியில் புதைந்திருந்தார். சுய தனிமை (self-isolation) என்ற சொல்லுக்கு அவர் ஒரு புதிய வரையறையை வழங்கியுள்ளார்.
யூடியூபில் தனது 57.2 மில்லியன் சந்தாதாரர்களை மகிழ்விப்பதற்காக அவர் இரண்டு நாட்களுக்கு மேல் செலவிட்டார், கிட்டத்தட்ட 50 மணி நேரம் சவப்பெட்டியில் நிலத்தடியில் புதைந்திருந்தார்.
இது நிச்சயமாக குழந்தைத்தனமான விளையாட்டல்ல, இந்த ஸ்டண்டை செய்வது என்பது எளிதானதோ சாத்தியமானதோ அல்ல. யூடியூபில் 12 நிமிடம் காணப்படும் வீடியோவில் சவப்பெட்டியில் அவரது 50 மணி நேரத்தின் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் இருந்த சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கேமரா அனைத்தையும் பதிவு செய்துள்ளது.
இது, சவப்பெட்டிக்குள் அவர் கழித்த 50 மணிநேரங்களில், 12 நிமிட சுருக்கம் மட்டுமே என்றாலும், நிதர்சனத்தை எண்ணிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
கோடிக்கணக்கானோர் பார்த்த சாதனையை ஏற்படுத்தினாலும், இந்த செயல் சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. நிலத்தடியில் சவப்பெட்டிக்குள் இருந்தபோது அவர் சந்தித்த அசெளகரியங்கள் சலிப்பு மற்றும் அசைவற்ற தன்மை என பல உணர்வுகளையும், சிரமங்களையும் அவர் விவரித்தார். சவப்பெட்டியில் இருந்தபோது அவர் பாட்டில்களில் சிறுநீர் கழித்ததாக குறிப்பிட்டபோது, அவரது விடாமுயற்சியை அனைவரும் பாராட்டினார்கள்.
அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் மேற்கொண்டிருந்ததாகவும், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக மருத்துவக் குழு தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவப்பெட்டியில் இருந்து வெளியே வந்த அவர்- “இது முட்டாள்த்தனமானது, எனக்கு மிகவும் தலைவலிக்கிறது, மிகவும் பசிக்கிறது” என்று சொன்னார்.
அது மட்டுமல்ல, "என் முதுகு வலிக்கிறது, எனக்கு மிகவும் அழுத்தமாக, வித்தியாசமாக உணர ஆரம்பிக்கிறேன், என் மனதில் சலிப்பு ஏற்படுகிறது, நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்" என்று மிஸ்டர் பீஸ்ட் சொல்வதும், யூட்யூபில் வைரலாகி வருகிறது.
14வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள்தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி வீரர் அக்ஷர்பட்டேல், சென்னை அணி நிர்வாகி, மும்பை வாங்கடே ஸ்டேடிய ஊழியர்கள் 8பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவின் நிதிஷ்ரானா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மருத்துவகுழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்.இதனால் அவர் மும்பைக்கு எதிராக முதல் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வீரர்களும் அடுத்தடுத்து பாதிப்பால் ஐபிஎல் தொடர் முழுமையாக நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அங்கு நடைபெற உள்ள போட்டிகள் ஐதராபாத்திற்கு மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் மைதானங்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தரவு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கணக்குகளின் தரவு முதலில் 2019 இல் கசிந்ததாக கூறப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி, பெயர், தொலைபேசி எண், பிறந்த நாள், உறவுகள் விபரம் மற்றும் இது போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் இப்போது ஆன்லைன் ஹேக்கர்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என சைபர் கிரைம் நிபுணர் மற்றும் பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.
"சுமார் 53,30,00,000 பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இலவசமாக கசிய விடப்பட்டுள்ளன" என்று ஹட்சன் ராக் சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால் (Alon Gal) ட்விட்டரில் தெரிவித்தார்.
கசிந்த தகவல்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கணக்குகள் தொடர்பான தகவல்கள் என்றும், பயனர்கள் இன்னும் கணக்கில் பதிவு செய்துள்ள அதே தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
"இதன் அர்த்தம் உங்களிடம் உள்ள பேஸ்புக் கணக்குடன் இணைந்த தொலைபேசி எண் கசிந்திருக்கலாம்" என்று Alon Gal கூறினார்.
இருப்பினும், பேஸ்புக் இந்த தகவலை மறுத்துள்ளது. மேலும் இந்த பிரச்சினை 2019 ஆம் ஆண்டிலேயே சரி செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.
"இது பழைய தரவுகள், இது முன்னதாக 2019 இல் தெரிவிக்கப்பட்டது" என்று கூறிய பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் "2019 ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த சிக்கலை நாங்கள் கண்டறிந்து சரிசெய்தோம்" என கூறினார்.
மறுபுறம், கிட்டத்தட்ட 32 மில்லியன் அமெரிக்க கணக்குகள் மற்றும் 20 மில்லியன் பிரெஞ்சு கணக்குகள் தொடர்பான தகவல்கள் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக Alon Gal கூறுகிறார்.
"இந்த முக்கியமான தகவல்கள், ஹேக்கர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கும் உதவும் வகையில் இருக்கும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
பக்கம் 52 / 90



