Editor's Choice
Tiruchirappalli Ordnance அதிகாரபூர்வ இணையதளத்தில் Electronics(04) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கு கல்வித்தகுதியாக 10th Pass கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Karur) கொடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tiruchirappalli Ordnance 

பணியின் பெயர் : Electronics

கல்வித்தகுதி : 10th Pass

பணியிடம் : Karur

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 04

கடைசி நாள் : 18.04.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் :https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

Editor's Choice

ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் கார்கள் இருப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் சொந்தமாக விமானம் இருக்கிறது. இதைக்கேட்டால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் இது உண்மையான ஒரு செய்தி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். 

இந்த விமான நிலையம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் விமானிகள் ஆவர். அப்படியிருக்க, அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம்தான். விமானிகளைத் தவிர, இந்த நகரத்தில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் உள்ளனர். விமானிகள் மட்டுமல்லாமல், இவர்களும் தங்கள் வீடுகளில் விமானங்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.

ஹவாயில் ஒரு விமானத்தை சொந்தமாக வைத்திருப்பது ஒரு காரை வைத்திருப்பதற்கு சமமாகும். காலனியின் தெருக்களிலும், மக்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள ஹேங்கர்களிலும் இங்கே விமானங்களைக் காணலாம். ஹேங்கர் என்பது விமானங்களை நிறுத்துவதற்கான இடமாகும். இந்த நகரத்தின் சாலைகளும் அகலமாக உள்ளன. இதனால் விமானிகள் அதை ஓடுபாதையாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவின்  இந்த நகரத்தில் விமானங்களின் சிறகுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க, சாலை அடையாளங்கள் மற்றும் லெட்டர்பாக்ஸ்கள் இயல்பை விட குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த நகரத்தில், வீதிப் பெயர்களும் விமானங்கள் தொடர்புடையவையாக வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு சாலைக்கு போயிங் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Editor's Choice
Ministry of Tribal Affairs அதிகாரபூர்வ இணையதளத்தில் PGT, TGT, Principal காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 
வெளியாகி உள்ளது.

வேலைக்கு கல்வித்தகுதியாக PG Degree, Master Degree, Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Madurai) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  
நிறுவனம் Ministry of Tribal Affairs
பணியின் பெயர் :PGT, TGT, Principal
கல்வித்தகுதி :PG Degree, Master Degree, Bachelor Degree
பணியிடம் : All Over India
தேர்வு முறை : Interview
மொத்த காலிப்பணியிடம் : 3479
>கடைசி நாள் :30/04/2021

முழு விவரம் : https://www.jobs7.in/assets/files/jobs/5833-ministry-of-tribal-affairs-recruitment-2021-pgt-notification.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
Editor's Choice
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கொரோனா விதிகளை மதிக்கத்தவறிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு  போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
 
நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தனது  60-வது பிறந்த நாளை கொண்டாடினார். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லைஎன்று நார்வே அரசு அறிவித்தது.  
 
ஆனால், இந்த கட்டுப்பாடுகளை மீறி  தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் தொகையை அபராதமாக போலீசார் விதித்துள்ளார்.  நார்வே நாட்டில் இதுவரை 1,01,960 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
Editor's Choice

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 10.4.2021 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

* அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது. 

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

எகிப்தில் அரசர்கள் அரசிகளின் மம்மிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கய்ரோவில் உள்ள புதிய அருங்காட்சியகத்திற்கு இந்த 22 மம்மிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

பண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான 'மம்மி' ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளன.

கி.மு. 3500 - 3700 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் எண்ணெய், கோரை புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப் பிசின் மற்றும் பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் பிசின் ஆகியன உடல்களை மம்மிகள் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பக்கம் 48 / 90