Editor's Choice

இந்தியாவில் உள்ள, 8 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 44 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது.

8 நகரங்களில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தேவை அதிகரித்ததை அடுத்து, 72 ஆயிரம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த விற்பனை அதிகரிப்பானது, கட்டுமான நிறுவனங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.

மும்பையில், 49 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. புனேவில், 75 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு மாநிலங்களை பொறுத்தவரை, பெங்களூரில் 18 சதவீதமும்; ஐதராபாத்தில் 81 சதவீதமும்; சென்னையில் 36 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.

இருப்பினும், கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது இந்த துறையின் வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு இருக்குமா என்பது இனி தான் தெரியவரும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.

உலக அழகி போட்டியில் கிரீடத்தை பெற்ற கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.

புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இதற்கிடையே, "திருமதி இலங்கை" கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.

 தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என புஷ்பிகா தெரிவித்தார்.

திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.

விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்ணொருவரை வீழ்த்துவதற்காக, யாராவது ஒருவர் முயற்சிகளை மேற்கொள்வாராயின், அது அவருக்கான வெற்றி கிடையாது எனவும் கூறும் அவர், அதுவே அவரின் தோல்வி எனவும் தெரிவித்துள்ளார்.

தெரிவித்தார். தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் புஷ்பிகா டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

Editor's Choice
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். 68 வயதாகும் புதின், முதன்முதலில் கடந்த 2000ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024இல் நிறைவடைகிறது.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. இந்தச் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார். இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கினார்.

இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும். அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் ரேசில் அவரால் இருக்க முடியும். உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புதின் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ரஷ்யா அதிபராக புதின் கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் பதவியேற்றார். அதன் பின்னர் 2004இல் மீண்டும் அவர் தேர்தலில் வென்றார். அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபராக இருக்க முடியாது என்பதால் 2008இல் தனது நம்பிக்கைக்குரிய டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரை அதிபராக்கினார். அப்போது தான் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் புதின் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த புதின், மீண்டும் 2018இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தன. இருப்பினும், அந்தத் தேர்தலில் புதின் வென்றதாக அறிவிக்கப்பட்டது,
 
83 வயது வரை புடினே ரஷ்ய அதிபராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

தலைநகர் டெல்லியின் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்துக் கொண்டே வருகிறது. கொரோனா நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களை டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால்  பலர் விதிகளை சரியாக பின்பற்றவதில்லை.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் பொருந்தும். ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இந்த உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் பகல் நேரங்களில் வெளியே வர தடை உத்தரவு உள்ளிட்ட கடுமையான தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30 வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்.

பகலில் ஊரடங்கு போடுவதில் ஏன் அரசுக்கு தயக்கம் என்ற ரீதியில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்

 

Editor's Choice
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.  கடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்ற போது, தென்கொரியா- வடகொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. 
 
இதன் காரணமாக நடப்பு ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடரலாம் என தென்கொரியா எதிர்பார்த்து இருந்த நிலையில், வடகொரியா ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனாவை காரணம் காட்டி ஒலிம்பிக் தொடரை  வடகொரியா புறக்கணித்து இருந்தாலும், வேறு சில அரசியல் காரணங்களும் இன்று  சர்வதேச நோக்கர்கள்  தரப்பில் சொல்லப்படுகிறது.  
 
கொரோனா தொற்று பரவத்தொடங்கியதும் தனது நாட்டு எல்லைகளை முழுவதுமாக மூடிய வடகொரியா, தங்கள் நாட்டில் பாதிப்பே இல்லை எனக்கூறி வருகிறது. எனினும், வடகொரியாவின்  கூற்று குறித்து சர்வதேச நிபுணர்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. 
Editor's Choice

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்

பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

பக்கம் 51 / 90