Editor's Choice

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. 'அசுரன்' படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து சில படங்கள் வெளியாகிவிட்டாலும் 'அசுரன்' படமே மனதில் தங்கியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜும் தனுஷும் இணையும் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா கர்ணன்?

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்'.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொடியன்குளம் என்ற குக்கிராமம். இந்தக் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்தில் சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக, கர்ப்பிணி பெண்ணை ஏற்றுவதற்காகக்கூட நிற்காமல் செல்லும் பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்படுகிறது. இதையடுத்து காவல்துறை அந்த கிராமத்தை துவம்சம் செய்ய முயல்கிறது. இதை அந்த கிராமமும் அந்த கிராமத்தின் துடிப்புமிக்க இளைஞனான கர்ணனும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

சற்றே தவறினாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைக் களத்தை மிகுந்த நுண்ணுணர்வோடும் கவனத்தோடும் கையாண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தியிருக்கிறான்.

ஜாதி என்பது எப்படி பூடகமாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றவர்களை ஒடுக்குகிறது என்பதை பிரச்சார நெடியே இல்லாமல் படம் நெடுக காட்சிகளால் சொல்லியிருப்பது அட்டகாசம்.

கர்ணன், கர்ணனின் கூடவே வரும் எமன், கர்ணனின் காதலியான திரௌபதி, கர்ணனின் நடவடிக்கைகளோடு முரண்படும் அபிமன்யு என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு நுணுக்கமான ரோல் படத்தில் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் படம் முழுமை பெற்றிருக்காது என்று தோன்றவைக்கும் வகையில் இந்தப் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

படத்தில் திரைக்கதைக்கு இணையான பங்கை சந்தோஷ் நாராயணனின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் வகிக்கின்றன.

சிறப்பான இந்தப் படத்தில் கதைக்குத் தேவையில்லாத சில காட்சிகளும் வந்துபோகின்றன. அவை, படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. மற்றபடி, மீண்டும் ஒரு சிறந்த படத்தோடு தனது வாளை உயர்த்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

Editor's Choice

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடைபெறவுள்ள IPL 2021 தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். 

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5முறை கோப்பையை வென்றுள்ளது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிரான அண்மை தொடர்களில் வெற்றி வாகை சூடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  RCBயின் கேப்டன். அவர் தனது தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார்.

இந்த முறை கோப்பை வென்றேஎ தீர வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகக்கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஐபிஎல் (2020) சீசன் கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதற்கு பிசிசிஐ சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

2021 சீசன் இந்தியாவில் ஆறு மைதானங்களில் நடைபெறுகிறது என்பதும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் கவலைகளை அதிகரித்துள்ளது.  

இதனால் பிசிசிஐ பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்கள், பணியாளர்கள், மைதானத்தை பராமரிப்பவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

நாளைய முதல் போட்டியில் பங்கு பெறவிருந்த ஆர்சிபி அணியின் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஆர்சிபி அணியின் படிக்கல், டெல்லி அணியின் அக்சார் பட்டேல், மும்பை வாங்க்டே மைதானத்தின் பணியாளர்கள் 8 பேர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பிசிசிஐயின் சவால்களை அதிகரித்துள்ளது.

Editor's Choice

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

"மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு வின்சர் கோட்டைக்கு திரும்பினார்.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "எண்ணற்ற இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர் இளவரசர்," என்று கூறியுள்ளார். பிரதமர் இல்லம் அமைந்த டெளனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரிட்டனில் பல தலைமுறை மக்களிடமும் காமன்வெல்த் நாடுகளிலும் உலக அளவிலும் அன்பைப் பெற்றவர் அவர்," என்றும் கூறினார்.

கோமகனின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது இறப்புச் செய்தி அடங்கிய நோட்டீஸ்கள், வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன.

அரண்மனைக்கு வெளியே மக்கள் மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்த, நூற்றுக்கணக்கானோர் வின்சர் கோட்டையைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, அத்தகைய மலர் கொத்துகளை அரச குடும்பத்து மாளிகை பகுதிகளில் விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பூங்கொத்துகளை விடுவதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்ச்சி, வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், அது கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என அரச குடும்பத்து காரிய சேவை பணிகளை கவனிக்கும் அமைப்பான காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசு முறை இறுதி நிகழ்வாக கோமகனின் இறுதி நிகழ்வு இருக்காது என்றபோதும், அவரது விருப்பத்தின்படி உரிய சடங்குகளுடன் நடத்தப்படும் என்றும் காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் ஃபிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.

இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

அரசி மற்றும் இளவரசர் ஃபிலிப்பின் முதல் மகனும் வேல்ஸ் இளவரசருமான சார்ல்ஸ், 1948இல் பிறந்தார். இவரைத் தொடர்ந்து இளவரசி ஏன் 1950இலும், யோர்க் கோமகன் ஆண்ட்ரூ 1960இலும், இளவரசர் எட்வர்ட் 1964இலும் பிறந்தனர்.

Editor's Choice
சீனாவின் சுஜோ நகரில்  ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.  மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில்  மருமகளின்  கையில்  இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார்.  பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.
 
இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர். இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.
 
மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார். அப்போது தான் அவர் தாயார் மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.
 
இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார். இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
Editor's Choice

நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆடைகளைக் கழற்றி, விமானப் பணியாளர்களிடம் முத்தம் கேட்டுப் பயணி ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையே தினசரி ஏர் ஏசியா சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல ஏர் ஏசியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது.

அப்போது அதிலிருந்து பயணி ஒருவர், விமானப் பணிப் பெண்ணை அழைத்து தனக்கு முத்தம் வேண்டும், அதுவும் இத்தாலி நாட்டு முத்தம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அவர் மது அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருள் எடுத்துள்ளாரா என்பது குறித்தும் சோதனை செய்யப்பட்டது. உடனடியாக விமான குழுவிடம் மன்னிப்பு கேட்ட அவர் அமைதியாகத் தனது சீட்டில் அமர்ந்து கொண்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து, விமானப் பணிப் பெண் ஒருவர் அவரை செக் செய்ய அவரது இருக்கைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பயணி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற விமானக் குழுவினர் அவரை ஆடைகளை அணியச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் ஆடைகளை உடுத்திக்கொண்டார்.

இது குறித்து விமான நிலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் விமான நிலைய போலீசார் விமானத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது போலீசார் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை உடைத்த அந்த நபர், மீண்டும் ஆடைகளைக் கழட்டியுள்ளார். இதனால் போலீசாருக்கும் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. போலீசாரும் விமானக் குழுவும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவர் ஆடைகளை மீண்டும் போட்டுக்கொண்டார்.

இது குறித்து ஏர் ஏசியா சார்பில் விமான துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு மீண்டும் பறக்கத் தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்க பூரி தெரிவித்துள்ளார். சக பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் விமானத்தில் பயணம் செய்ய 30 நாட்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editor's Choice

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடிக்கு கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மணப் பெண் அழகாக ஜொலிக்க, அவரை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையோ, உடலில் காயங்களுடன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்த படி, திருமணம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் இதைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது அதிக அளவில் பகிரப்பட்டது. ஒருவர்  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை வெளியிட, அது 14500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2500-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களையும் பெற்றது. இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் கிண்டலான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
 
இதற்கு மணப் பெண் எலிண்டா டிவி கிறிஸ்டியானி கூறுகையில், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, அவர் பெட்ரோல் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தினால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவரால் உடல் முழுவதும் ஆடை அணிய முடியாது. அதுமட்டுமின்றி அவர் அந்த விபத்தின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்ததாக கூறினார்.

பக்கம் 49 / 90