Editor's Choice

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே செயல்பட அனுமதி. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியான உடனே இந்த விவகாரம் டுவிட்டரில் #TNGovt, #TNLockdown ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...

* தேர்தல் காலத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக சேரவிட்டுவிட்டு, நோய்தொற்றும் அதிகமாகிவிட்ட பின்பு இப்போது கட்டுப்பாடுகள் விதிப்பதால் யாருக்கு என்ன பயன்.

* திருவிழா, மதக் கூட்டங்கள் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் டாஸ்மாக்கிற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாதது ஏனோ.

* தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தேர்தல் சமயங்களில் மட்டும் வைரஸ் பரவவில்லையா. வைரஸ் வேறு எங்கும் இல்லை, அரசியல்வாதிகளிடம் தான் உள்ளது. மக்களின் பாதுகாப்பை விட தேர்தல் முக்கியமா. எது எப்படியோ அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

* இது பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் எல்லாமே வெறும் கண் துடைப்பு மட்டுமே.

* போன வாரம் வரைக்கும் அவளோ கூட்டத்த கூட்டி பிரச்சாரம் நடத்திட்டு இப்ப வந்து பஸ்ல நின்னுட்டு போகக்கூடாது, திருவிழா நடத்த கூடாதுனு சொல்லிட்டு இருக்காங்க.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

Editor's Choice

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது துறைத்தேர்விற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது மார்ச் 15 முதல் ஏப்ரல் 16 வரை நடைமுறையில் உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின் படி, இந்த தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்ளகிறோம்.

வாரியத்தின் பெயர் TNEB
தேர்வின் பெயர் Departmental Test May
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2021

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

துறை தேர்வின் மூலம் Assistant Engineer/Junior Engineer, Supervisor(Thermal), Stores Supervisor & Stock Verifier பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.500/- + Rs.90/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 19.04.2021 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

துறை தேர்வானது 22.12.2021 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 07.05.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 15.03.2021 முதல் 16.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Important Dates:

Subject Day Date
Opening of Application for Registration Monday 15, March 2021
Closing of Application Friday 16th April, 2021
Last date for fees payment Monday 19th April, 2021
Generation of Hall Ticket Friday 07th
May, 2021
Exam Dates Saturday 22nd
May, 2021
 

Download Notification 2021 Pdf

Apply Online

Editor's Choice

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக பரவும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா 2வது அலையில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அபாயத்தை தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Editor's Choice

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தாமதமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் மே 23ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்த முடியாது. எனவே போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து, பிரெஞ்ச் ஓபன் நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

தற்போதைய அட்டவணைப்படி மே 23ம் தேதி போட்டிகளை துவக்க வேண்டும். அதற்கு முன்னதாக தகுதி சுற்று போட்டிகள் நடத்த வேண்டும். இதற்காக வரும் வீரர்கள், வீராங்கனைகளை முதலில் 14 நாட்கள் தனிமையில் தங்க வைக்க வேண்டும். அதன் பின்னர் வெளி தொடர்புகளை முற்றிலும் தவிர்த்து, ஓட்டல் அறைகளில் இருந்து அவர்களை நேராக மைதானத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். போட்டி முடிந்த பின்னர் மீண்டும் அதே போல, அறைக்கு அழைத்து வர வேண்டும். மேலும் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அனுமதிக்கப்பட்ட குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்களுடன்தான் போட்டிகளை நடத்துவோம் என அரசிடம் கூறியிருக்கிறோம். எனவே முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், போட்டி தேதிகளை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் தற்போது வரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில்  போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த நடவடிக்கைகளை நிறுத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

Editor's Choice

2017 ஆம் ஆண்டில், #MeToo அலை இந்தியாவிலும் வீசியபோது, பல நடிகைகள் தங்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பற்றித் மனம் திறந்து பேசினார்கள். அது பரபரப்பாக பேசப்பட்டது.

'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' என்பது இந்திய தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்று. பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்த இந்தத் இந்தித் தொடருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.  டி.ஆர்.பி அதிகம் கொண்ட நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்களில் சிலர் கடந்த கால அனுபவங்களை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார்கள்.  

நடிகை முன்முன் தத்தா, 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா'  தொடரில் பபிதா ஐயராக கலக்கியவர். அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்.  இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான முன்முன் தத்தா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வார். அது அதிக அளவில் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. 

இருப்பினும், அவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்பாக #MeToo என்ற தலைப்பில் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டபோது, அது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

2017 ஆம் ஆண்டில், #MeToo அலை இந்தியாவிலும் வீசியபோது, பல நடிகைகள் தங்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பற்றித் மனம் திறந்து பேசினார்கள். அது பரபரப்பாக பேசப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் செட்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக தங்கள் அனுபவங்களை பலர் வெளியிட்டபோது அது தந்த அதிர்ச்சி அதிகமாக இருந்தது.

அந்த நேரத்தில், 2017 ஆம் ஆண்டில், 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' தொடரில் நடித்த முன்முன் தத்தா, இன்ஸ்டாகிராமில் தனது மோசமான அனுபவத்தைப் பற்றித் பதிவிட்டார். 

"#MeToo …… ஆம்…. #Metoo இது போன்ற ஒரு இடுகையைப் பகிர்ந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தில் நானும் இணைகிறேன். வில் சேர்ந்து, ஒரே படகில் பயணம் செய்த ஒவ்வொரு பெண்ணும் ஒற்றுமையைக் காட்டும் வகையில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். தற்போது பலரும் தங்களுடைய பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசும்போது, பிரச்சனையின் அளவு வெளியே தெரிகிறது. #MeToo  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையைக் கண்டு சில 'நல்ல' ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மையில்  இது உங்கள் சொந்தக் கொல்லைப்புறத்தில் நடக்கிறது, உங்கள் சொந்த வீடு, உங்கள் சொந்த சகோதரி, மகள், தாய், மனைவி அல்லது உங்கள் பணிப்பெண் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்… அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் அனுபவங்களைக் கேளுங்கள். அவர்களின் பதில்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. அவர்களின் கதைகள் அதிர்ச்சியூட்டும்" என்று முன்முன் தத்தா பதிவிட்டிருந்தார்.

"#Metoo… இதுபோன்ற ஒன்றை எழுதும்போது, சிறுமியாக இருந்த காலங்கள் நினைவுக்கு வந்து கண்கள் கலங்குகிறது. யாரைப் பற்றி சொல்வது? பக்கத்து வீட்டு மாமாவின் இரை தேடும் பார்வை, என்னை தவறான இடங்களில் தொட்டுவிட்டு, இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என்று என்னை அச்சுறுத்துவார். அவரைப் பற்றி சொல்வதா?  அல்லது தனது சொந்த மகள்களின் வயதில் இருக்கும் என்னை வித்தியாசமான பார்வையில் பார்த்த உறவினர்களைப் பற்றி சொல்வதா? அல்லது நான் பிறந்தபோது பிஞ்சுக் குழந்தையாக பார்த்த ஒரு மனிதர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வளர்ந்தபிறகு என் உடலைத் தொடுவது பொருத்தமானது என்று நினைத்தாரே, அவரைப் பற்றி சொல்வதே? , அல்லது என் உள்ளாடைகளில் கைகளை வைத்திருந்த எனது பள்ளி ஆசிரியரைப் பற்றி சொல்வதா? அல்லது நான் சகோதரராக நினைத்து ராக்கிக் கட்டிய மற்றொரு ஆசிரியர், வகுப்பில் உள்ள மாணவிகளின் ப்ரா பட்டைகளை இழுத்து மாரில் அடித்து திட்டுவாரே, அவரைப் பற்றி சொல்வதா?…" என சமூகத்தின் மாறும் பார்வைகளைப் பற்றி முன்முன் தத்தா தனது வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார். அது மட்டுமல்ல, இந்த பாலியல் வன்கொடுமைகளின் நீட்சியைப் பற்றி மேலும் பேசுகிறார்.

"ரயில் நிலையத்தில் என்னைத் தொடும் அந்த மனிதர்... ஏன் ?? ஏன்??? ஏனென்றால் மிகவும் இள வயதில் பேசுவதற்கு பயப்படுவீர்கள். வயிற்ற்குள் பய உணர்வு பிசையும். இதை பெற்றோருக்கு எப்படி விளக்கப் போகிறீர்கள் என்றும் புரியாது. இதைப் பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்ல வெட்கமாகவும் இருக்கும். இது எங்கே கொண்டு செல்லும்?  ஆண்கள் மீது ஆழ்ந்த வெறுப்பை வளர்க்கும் போக்கு மனதில் தொடங்கிவிடும். அவர்கள் தான் உங்களை இந்த விதத்தில் உணரவைத்த குற்றவாளி .. அந்த வெறுக்கத்தக்க, அடக்கப்பட்ட உணர்வை வெல்ல பல ஆண்டுகள் ஆகும் .... இந்த #MeToo இயக்கத்தில் சேரும் மற்றொரு குரலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுமட்டுமல்ல, நான் காப்பாற்றப்படவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இதைப் பற்றி யாரிடமும் சொல்லியதும் இல்லை. ஆனால், இன்று எனது மனக்குமுறல்களை வெளிப்படையாக சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. I AM PROUD OF WHO I AM"என்று முன்முன் தத்தா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.  

Editor's Choice
2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள்  பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
 
சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததால், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
 
எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன்  3 ஆம் இடத்திலும், அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.
 
கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
 
தொடர்ந்து லட்சுமி மிட்டல், குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷாங்க்வி, சுனில் மிட்டல் & குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
 
கடந்த ஆண்டு 102 ல் இருந்த மொத்த இந்திய கோடீசுவரர்களின்  எண்ணிக்கை இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது  என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.    
 
முதல் பத்து இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில்  இரண்டு இந்தியர்கள் சுகாதாரத் துறையில் முதலீடுகள் காரணமாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.
 
கடந்த ஆண்டு போர்ப்ஸ் தகவலின் படி  12 வது இடத்தில் இருந்த பார்மா அதிபர் திலீப் ஷாங்க்வி  இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள்  மீண்டும் வந்தார்.

பக்கம் 50 / 90