Editor's Choice

இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது, தொடர்ந்து சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை தொடர்ந்து தனது தளத்தில் அனுமதித்து வந்த ட்விட்டர் நிறுவனம், அரசின் எச்சரிக்கைக்கு பின் போராட்டத்தை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கியது.  மேலும், ட்விட்டருக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில், ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கூ (koo) எனும் சமூக ஊடகத்திற்கு அரசு ஆதரவு அளித்து ஊக்குவித்து வருகிறது. 

மேலும், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. 

இந்நிலையில், ஒரு மாத்திற்கு முன்னதாக ரஷ்யாவில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுவர்கள் மத்தியில் ஆபாசத்தை பரப்பும்  வகையிலும், போடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய (Russia) அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, மாஸ்கோ நீதிமன்றம் இணைய சட்டத்தை மீறியதற்காக  டிவிட்டருக்கு 8.9 மில்லியன் ரூபிள் (சுமார் 1,16,568 அமெரிக்க டாலர்) அபராதம் விதித்தது. இந்த அபராத தொகையை டிவிட்டர் 60 நாட்களுக்குள் கட்ட வேண்டும். 

கடந்த மாதம், ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்புக் குழுவான ரோஸ்கோம்னாட்ஸர் (Roskomnadzor), வன்முறை, ஆபாசம், போன்றவற்றை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறிய ட்விட்டரின் செயல்பாட்டை தற்காலிகமாக முடக்கியது. மேலும் வருங்காலத்தில், டிவிட்டரை முற்றிலுமாகத் தடை செய்யலாம் எனவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் செப்.19ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பிரச்னையால் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) செப்.19ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செப்.19ம் தேதி தொடங்கும் முதல் லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற உள்ளது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நவ.3ம் தேதி வரை நடைபெறும். இவற்றில் துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறும்.

போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும். சில சனி, ஞாயிற்றுகிழமைகளில் என 10 நாட்கள் மட்டும் ஒரே நாளில் தலா 2 ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும். அபுதாபியில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த முறை 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி, இறுதிப் போட்டி நடைபெறும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். இறுதிப் போட்டி நவ.10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் போது கடைபிடிக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

* வீரர்கள் யாரேனும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்; பயோ-பபுள் சூழலுக்குள் வருவதற்கு முன் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பின்புதான் அனுமதிக்கப்படுவார்

* வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க தனியாக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்; இவரின் பணி, வீரர்கள் பயோ-பபுள் சூழலை மீறுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும்தான்.

* ஒட்டுமொத்தமாக 12 பயோ-பபுள் சூழல் உருவாக்கப்பட்டுள்ளன; 8 பயோ-பபுள் சூழல் வீரர்களுக்கும், 2 பயோ-பபுள் சூழல் அணி நிர்வாகிகள், உதவியாளர்களுக்கும், 2 பயோ பபுள் சூழல் ஊடகப்பிரிவினர் ஆகியோருக்கும் வழங்கப்படும்.

* பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் நுழையும் முன் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் செல்லும்போது, 7 நாட்கள் தனிமைக் காலத்தில் 2-ம் நாள், 5-ம் நாள், 7-வது நாள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக இருக்க வேண்டும்.

* முறையான பரிசோதனை இல்லாமல் அணி உறுப்பினர்களுடன் கலந்துரையாட அனுமதியில்லை.

* 7 நாட்கள் தனிமைக் காலம் முடிந்தபின், ஒவ்வொரு வீரருக்கும் வாரத்துக்கு இரு முறையும், 2-வது வாரம், ஒவ்வொரு வாரத்திலும் 5-வது நாளும் என ஐபிஎல் சீசன் முடியும் வரை கொரோனா பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும். இந்த விதிமுறை வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.

* இங்கிலாந்து, இந்திய ஒருநாள் தொடரில் இரு அணி வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வருவதால், அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் முறை இல்லை. வீரர்கள் நேரடியாக தாங்கள் சார்ந்திருக்கும் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்லலாம்.
வீரர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அணியில் இணையத் தனியாக விமானம், அல்லது ஹோட்டலுக்குச் செல்ல தனிப்பட்ட பேருந்து வசதி செய்யப்படும். இங்கிலாந்து வீரர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வந்தால் தனிமைப்படுத்தும் காலம் இல்லை.

* ஒருவேளை வீரர்கள் ஐபிஎல் விதிகளுக்கு மாறாக பயோ-பபுள் சூழலை மீறினால் கண்டிப்பாக ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* ஐபிஎல் தொடரில் தாமதமாக அணிகளில் சேரும் வீரர்கள் தங்கள் அணியின் பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு தனிமைக் காலத்தை முடித்துவர வேண்டும்.

* வீரர்களில் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அவருக்கு 9-வது 10-வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். எந்தவிதமான அறிகுறியும் இருக்கக் கூடாது. இந்த விதிமுறை அறிகுறி உள்ள வீரர்களுக்கும், அறிகுறி இல்லாத வீரர்களுக்கும் பொருந்தும்.

ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது. மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட பிரிவு ஒதுக்கவில்லை என்பதால், தடுப்பூசி போடக்கூடாது இவ்வாறு பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி ஐபிஎல் 2021 போட்டிகள் மும்பை நடைபெறும் என  பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. நிலைமை மீறி சென்றால் மும்பையில்  நடக்கும் போட்டிகளுக்கு பதிலாக ஹைதராபாத்தில் போட்டிகளை நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Editor's Choice

சமீபத்தில், ஒரு தென்னாப்பிரிக்க தலைவர் பாராளுமன்ற ஜூம் கூட்டத்தில் பங்கேற்றார். இது தேசிய அளவில் நேரலையாக ஒளிப்ரப்பட்டது. 

சோலிலே என்டேவ் (Xolile Ndevu) என்பவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் COVID-19 இறப்புகள் குறித்து, அங்குள்ள  23 தலைவர்களுடன் ஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றியதால், அவருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகியது அவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது. 

திடீரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்குப் பின்னால் தோன்றியபோது ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) அமைப்பு உள்ளூர் மருத்துவர்களுடன் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை என்டேவ் விளக்கிக் கொண்டிருந்தார் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

வைரல் வீடியோவில், அக்குழுவின்  தலைவர் பெயித் முத்தம்பி (Faith Muthambi) தலையிட்டு,  "உங்களுக்குப் பின்னால் உள்ளவர் சரியாக ஆடை அணியவில்லை," என்று என்டேவுவிடம் எச்சரித்துள்ளார்.

"நீங்கள் ஒரு கூட்டத்தில்  பங்கேற்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா? இது மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது, நீங்கள் டிவியில் நேரலையில் இருக்கிறீர்கள்" என்று வீடியோவில் அவர் மேலும் கூறுகிறார்.

பின்னர் என்டேவு முகத்தை கைகளால் மூடிக் கொண்டே மன்னிப்பு கேட்பதை பின்னர் காணலாம்.

"நான் மிகவும் வருந்துகிறேன். நான் மீட்டிங்கில் ஈடுபாட்டுடன் கேமராவை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் என மனைவி வருவதை நான் பார்க்கவில்லை. எங்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் புதிது. எனது வீட்டில் தனியாக அலுவலகத்திற்கு என அறை இல்லை. என மனைவி நான் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருப்பதை அறியாமல், என் மனைவி குளியலறையைப் பயன்படுத்த வந்தார், நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக உள்ளது ”என்று அவர் கூறினார்.

Editor's Choice

திமுக தொடங்கப்பட்டு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் 1957 தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

1957ஆம் ஆண்டில் அண்ணா காஞ்சிபுரத்திலும், கருணாநிதி குளித்தலை தொகுதியிலும் முதல் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டனர். 1967ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதல் முறையாக திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.

1962ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தோல்வியை தழுவினாலும், அக்கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலிலும் தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மு. கருணாநிதி.

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெ. சீனிவாசன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தவர் சீனிவாசன். தேர்தல் முடிவுகளில் விருதுநகர் தொகுதியில் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றார். கக்கன், பக்தவத்சலம் போன்றோரும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவர் அண்ணா போட்டியிடவில்லை. மாறாக தென் சென்னை மக்களைவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல 1971ஆம் ஆண்டு தேர்தலில் காமராஜர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 ஆண்டு திமுக தேர்தலில் வென்றது. 1971இல் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோற்றது.

அதிமுக தொடங்கப்பட்டு முதன்முறையாக சந்தித்த தேர்தல், 1977ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, அந்த தேர்தலில் போட்டியிட்ட 200 தொகுதிகளில் 130ஐ கைப்பற்றி ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.

 

Editor's Choice

தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் "இட்லி சேவை" செய்துவரும் தமிழகத்தை சேர்ந்த "இட்லி அம்மா" என செல்லமாக அழைக்கப்படும் கமலாத்தாளின் சேவையை பாராட்டி இணையத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை போட்டிருந்தார். அவரின் பதிவை அடுத்து "இட்லி அம்மா" நாடு முழுவதும் மிகவும் பிரபலமானார். ஏறக்குறைய அவர் டிவிட்டரில் பதிவு போட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலாத்தாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருக்கு சொந்த வீடு கட்டித்தர ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,, "விரைவில் "இட்லி அம்மா"  அவர்கள் சொந்தமான ஒரு வீட்டைப் பெறுவார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 

2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர், ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார். இலாபம் ஈட்டுவதில் அவர் அக்கறை காட்டவில்லை மற்றும் மற்றவர்கள் வயிறார சாப்பிட வேண்டும் என மனதில் கொண்டு தனது சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்" என கமலாத்தாள் ) குறித்து ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்திருந்தார். இவரின் பதிவை அடுத்து "இட்லி அம்மா" என்ற பெயரில் நாடு முழுவதும் அறியப்பட்டார். மேலும் விறகு அடுப்பில் சமைத்து வந்த "இட்லி அம்மா"வுக்கு கோயமுத்தூர் பாரத் கேஸ் நிறுவனம் இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது.

தனது சேவை பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும். அதற்காக தனது சொந்த இடத்தை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். தற்போது அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்த நிலத்தில் வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 

Editor's Choice

பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு கவுன்சில் (ஈ.சி.சி) இந்திய சர்க்கரை, பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்வதற்கான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால தடையை நீக்கி உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து ஜூன் 30ம் தேதி முதல் இறக்குமதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் பருத்தியின் தேவை அதிகமாக இருப்பதாலும், வெள்ளைச் சர்க்கரையின் விலை பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு என்பதாலும் 2 ஆண்டுகளாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் சில்லறை வர்த்த்கத்தில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. அங்கு  ஒரு கிலோ சர்க்கரை பாகிஸ்தான் ரூபாய் 100 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்காதவரை இந்தியாவிடமிருந்து பருத்தி மற்றும் சர்க்கரை வாங்குவதை ஒத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.

பக்கம் 53 / 90