Editor's Choice

ஃபுகுசிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

ஜப்பான் கடல் பகுதியில் 2011 மார்ச் 11ஆம் தேதியன்று ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் மதிபிட்டிருந்தனர்.  

சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அசுத்தமான நீரை கடலுக்குள் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, இது "மிகவும் பொறுப்பற்ற செயல்" என்று கூறியுள்ளது. தென் கொரியா சியோலில் உள்ள டோக்கியோ தூதரை வரவழைத்து, கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் ஐசோடோப்புகளை அகற்றவும், உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெறவும் இந்த ஆலையை இயக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தண்ணீரை வடிகட்டத் தொடஙகி முதல் முறையாக நீரை வெளியிடுவதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.  

2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் செயலிழந்த பின்னர் ஆலையில் உள்ள அசுத்தமான நீரை வெளியேற்றுவது அவசியம் என்று சொல்லும் ஜப்பான்,  இதேபோல் வடிகட்டப்பட்ட நீர் உலகெங்கிலும் உள்ள அணுமின் நிலையங்களிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.  

ஃபுகுஷிமா ஆலையில் ஏறக்குறைய 1.3 மில்லியன் டன் அசுத்தமான நீர் உள்ளது. இந்த அளவு நன்னீரைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் சுமார் 500 நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம். என்றால் நீரின் அளவை புரிந்துக் கொள்ளலாம்.

இந்த அளவிலான நீர் ஆலையில் பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இந்த நீரை சேமிக்க ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் யென் தொகை தேவைப்படுகிறது. தற்போது ஆலையில் அசுத்தமான நீரை சேமிக்கும் இடம் பற்றாக்குறையாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

"புகுஷிமா பகுதியை புனரமைக்க வேண்டியது அவசியம். அதற்கு புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையத்தில் (Fukushima Dai-ichi Nuclear Power Plant) உள்ள அசுத்தமான நீரை அகற்றுவது தவிர்க்க முடியாத பணி..." என்று பிரதமர் யோஷிஹைட் சுகா (Prime Minister Yoshihide Suga) கூறுகிறார். அது மட்டுமல்ல, இப்போது திட்டமிட்டாலும், இந்த செயல்முறையை செய்து முடிக்க பல தசாப்தங்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜப்பான் அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது கவலைகளை அதிகரிக்கிறது. ஏனென்றால், ஒலிம்பிக் போட்டிகளின் சில நிகழ்வுகள் சிதைந்த ஆலையில் இருந்து 60 கிமீ தொலைவில் நடைபெற உள்ளது. 

2013 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பானுக்கு ஒப்புதல் அளித்தபோது ஜப்பானிய முன்னாள் மந்திரி ஷின்சோ அபே ஒரு உறுதிமொழியை அளித்திருந்தார். "புகுஷிமா (Fukushima) தொடர்பாக டோக்கியோவுக்கு ஒருபோதும் எந்த சேதமும் ஏற்படாது" என்ற அந்த உறுதிமொழியை தற்பொது ஜப்பானால் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Editor's Choice

வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க் என்பது இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தரக்குறியீட்டு முறைமை. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின்  (BIS) தரக்குறியீடு தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் தூய்மை அளவுக்கு  சான்றிதழ் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தங்கப் பொருளின் மீது இருக்கும்  BIS தரக்குறியீடு  இந்திய தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கீழுள்ள  இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வரையறுத்த தர அளவீடுகளுக்கு உட்பட்டதற்கான  சான்றிதழ்.

தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Editor's Choice

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

இதேபோல் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம்  வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.

பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும்  மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.nbcfdc.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Editor's Choice

குஜராத் மாநிலம் வதோதராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு, ஆரோக்கியமான உணவை இலவசமாக ஒருவர் வழங்கி வருகிறார். அவர் இதனை டுவிட்டரில் பகிர, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நீண்ட காலமாக இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் இந்த தொற்று நோயின் காலம் தான் நம் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் உதவியது.

கொரோனா பலி அதிகரித்து வருவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மீண்டும் படை எடுத்து வருகின்றனர். இச்சூழலில், நல்ல மனம் கொண்ட சிலர், தங்களால் இயன்ற உதவியை கொரோனா காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டர் பயனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு, அவர்கள் தனிமைப்படுத்தி கொண்ட காலம் முழுவதும் இலவசமாக, உணவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். சுகாதாரமான மதிய உணவு மற்றும் இரவு உணவை அவர்கள் வீட்டு வாசலில் வந்து வழங்கி உதவுவதாக அவர் பதிவிட்டிருக்கிறார்.

டுவிட்டரில் தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொள்ளும் உள்ளூர் மக்களுக்கு தான் உதவ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த சுபால் ஷா என்ற அந்த டுவிட்டர் பயனருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுபால் ஷாவின் தன்னலமற்ற சேவையை, அவரை தொடர்பு கொண்டு சிலர் பெற்று வருகின்றனர். அவருக்கு உதவ தயாராக இருப்பதாக என்ஜிஓ.,க்களும் முன் வந்துள்ளன.

Editor's Choice

உலகில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் இந்த கொரோனா நெருக்கடியால் 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவிலும் ஏராளமான ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடப்பதால் அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Editor's Choice

தமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை- 1. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பலருண்டு. இதேபோல தை -ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. இதை ஏற்றுக்கொள்பவர்களும் பலருண்டு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை -ஒன்றாம் தேதியைத்தான். தை -1 தமிழ்ப் புத்தாண்டு என்றால், அதற்கு இன்னும் 22 நாள்கள் இருக்கின்றன.

இத்தகைய குழப்பங்களுக்கு இடையில், “உண்மையில் தை ஒன்றாம் தேதி என்பது டிசம்பர் 22 தான்.

தமிழர்களின் புத்தாண்டு அன்றுதான் பிறக்கிறது'' என்று புதிதாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் கோயில் கட்டடக்கலை நிபுணரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்யம்மன். ஆண்டு மற்றும் நாள்கள் குறித்து மரபு வழியிலான ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வரும் தென்னன் மெய்ம்மன், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலைக் கல்லூரியில், கட்டடக்கலைப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருப்பவர்.

“அதெப்படி? நாம் பயன்படுத்தும் காலண்டர் சொல்லும் செய்தி தவறாக இருக்க முடியும்? பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான தமிழ் மாதங்களையும், ஆண்டையும்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம்?” என்று கேட்டால், “காலண்டர் சொல்லும் செய்தி மட்டுமல்ல... காலண்டரே தவறாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அடித்துச் சொல்லும் மெய்யப்பன்,“இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வானவியல் அறிவு தேவை. இதை நான் மேம்போக்காகச் சொல்லவில்லை. மரபு வழியில், இருபதாண்டுகளுக்கும் மேலாக நானும், என் குழுவினரும் வானவியல் ஆய்வுகளைச் செய்தபிறகே சொல்கிறோம். இதுகுறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாததால் எங்கள் குரலில் இருக்கிற உண்மை பலருக்கும் பிடிபடவில்லை. உண்மை தெரிந்த வானவியல் அறிஞர்கள் பலரும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அ

இப்படி அறிவிப்பு செய்ய வேண்டும் என்றால், நிலவு சரியான நாள்களில் வரவேண்டும். 360 நாள்கள் பூர்த்தியாக வேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக இதுகுறித்து ஆய்வு செய்தோம். 05.01.2014- ல் இருந்து 21.12.2017 வரையான மொத்தம் 1447 நாள்களில் முறையே 353, 356, 354, 355 நாள்களில் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தொங்கல் மாதமாக மொத்தம் 29 நாள்களும் உள்ளன. இதனை மையப்படுத்தி நாங்கள் ‘பெருந்தச்சு நிழல் நாள்காட்டி’  என்று ஒரு நாட்காட்டியைத் தயாரித்துள்ளோம்.

வருடத்துக்கு 360 நாள்கள் வரவேண்டிய சூழலில், இப்படி குறைவாக வருவதற்கு ‘நிலவு தடுமாறுதல்’ தான் காரணம். ‘நிலவு தடுமாறுதல்’ என்பது அமாவாசை அன்று மறைந்த நிலவானது, மீண்டும் 15 நாள்களில் வராமல் முன்பே வந்துவிடுவது. கடந்த ஆண்டில் மட்டும்  இப்படி ஐந்து நிலவு தடுமாறியிருக்கிறது. இதனால்தான் வருடத்துக்கு 360 நாள்களுக்குப் பதிலாக குறைவான நாள்கள் வந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக இப்படித்தான் வருகிறது. இப்படி வரக்கூடாது. இது அனைத்து உயிர்களுக்கும் நல்லதல்ல. இப்படி குறைவாக வருவதை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் சனிக்கிழமை. நம் மரபில் சனிக்கிழமை என்ற ஒன்றே இல்லை. வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வந்துவிடும். ஆனால், பல காரணங்களால் சனிக்கிழமை என்ற ஒருநாள் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கின்றது" என்று சொன்ன மெய்யம்மன், தொடர்ந்து சொல்லும் செய்திகள், ஆச்சர்யத்தோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்புபவையாகவே உள்ளன.

''நிலவு சரியாக வராமல், முந்தி வந்தால்... ஆண்டின் நாள்கள் குறையும். இப்படிக் குறையும்போது, மழை சரியாகப் பொழியாது. இயற்கைச் சமநிலை சரியாக இருக்காது. இதுபோன்று பல கேடுகள் உருவாகும். மன்னர்கள் காலத்தில் ஏராளமான நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியைச் சரிசெய்து ஆண்டு, நாள்களை சரியாகக் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் அரசு சார்ந்த அத்தனை செயல்பாடுகளும் புத்தாண்டைச் சார்ந்துதான் இருந்துள்ளன. அதற்குப் பெயர்தான், ‘கொற்றம்‘. இதைச் சரியாக ஒழுங்குபடுத்திய மன்னன்தான்  ‘கொற்றவேந்தன்’ என்று அழைக்கப்பட்டான். இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளம் உள்ளன. 

மன்னர்கள், ‘ஆண்டு ஒழுங்கு’ செய்வதற்காக தனிப்படையையே நடத்தியிருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய படை அல்ல. கலைஞர்களால், நிபுணர்களால் ஆன படை. ‘உயிர்கள் எழுப்பக் கூடிய ஒலி அலைகளின் கட்டுப்பாட்டில்தான் நிலவு இயங்குகிறது. காதுக்குக் கேட்காத இந்த ஒலியின் மூலமாகத்தான் நிலவு ஒழுங்குபடுத்தப்படுகிறது’ என்று நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. ராஜராஜன் காலத்திலும் இந்த ‘நிலவு தடுமாற்றம்‘ ஏற்பட்டுள்ளது. அதனை ஒலி அலைகளின் மூலமாக ஒழுங்குபடுத்தியிருக்கிறான் ராஜராஜன். 

நாள்களை ஒழுங்குபடுத்துவதற்கு பத்துக்கும் மேற்பட்ட உத்திகள் உள்ளன. இதற்கு ‘துப்பு’ என்று பெயர். ஆனால், இந்த உத்திகளை தற்காலத்தில் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரிய கோயிலே ராஜராஜன் பயன்படுத்திய துப்புதான். கோயிலின் அசைவின் மூலமாக பூமியை நகர்த்தி ஒழுங்கு செய்திருக்கிறான் ராஜராஜன்.

ஆக, தமிழ்ப்புத்தாண்டு என்பது சித்திரை 1, ஜனவரி மாதத்தில் தற்போதைய காலண்டர் படி பிறக்கும் தை 1 என்பதைத் தாண்டி, நிலவுப் பயணத்தின் அடிப்படையில் 360 நாள்கள் கடந்த நிலையில் வரும் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று மூன்றாவதாக ஒரு தமிழ்ப்புத்தாண்டு வந்துள்ளளது. மெய்ம்மன் சொல்வது அத்தனையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... இதென்னடா புதுக்குழப்பம் என்று கடந்து போகவும் முடியவில்லை. வானிலை மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள்தான் பதில் தரவேண்டும்.

 

பக்கம் 45 / 90